Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஒரே வரி

ஊடகங்களை ஒடுக்க பாஜக திட்டம்!; தொடர் தோல்விகளால் விரக்தி!!

ஊடகங்களை ஒடுக்க பாஜக திட்டம்!; தொடர் தோல்விகளால் விரக்தி!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
ஆட்சி நிர்வாகத் தளத்தில் ஏற்பட்டுள்ள தொடர் தோல்விகள் காரணமாக, டிஜிட்டல் ஊடகங்களை ஒடுக்கும் முடிவில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இணைய ஊடகங்கள், சமூக ஊடகங்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனத்தெரிகிறது. கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும்கூட பாஜக, 282 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியில் அமர்ந்தது. எனினும், கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்தது. இந்து தேசியத்தை அமைக்கும் முகமாக ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே வரி சித்தாந்தங்களை நோக்கி நகர்ந்தது. பாஜக வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று இடதுசாரிகளும், காங்கிரஸூம் எச்சரித்தனவோ அதே வறட்சியான சித்தாந்தங்களை நோக்கி பாஜக நடைபோட்டது. விளைவு, கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த 11 இடைத்தேர்களில் பத்து மக்களவை தொகுதிகளை இழந்துள்ளது.
177 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு;  தவறை உணர்ந்த பாஜக!

177 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு; தவறை உணர்ந்த பாஜக!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
இந்திய அரசு 177 பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரியை இன்று (நவம்பர் 10, 2017) அதிரடியாக குறைத்துள்ளது. இதன்மூலம், எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டிய தவறுகளை பாஜக ஒப்புக்கொண்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஒரே இந்தியா ஒரே வரி என்ற பாஜகவின் கொள்கையாக இந்த புதிய வரி சீர்திருத்தம் கருதப்படுகிறது. இதன்படி 0, 5, 12, 18, 28 என ஐந்து படிநிலைகளில் ஜிஎஸ்டி வரிகள் நிர்ணயிக்கப்பட்டன. அத்தியாவசியமான பொருள்களில் பலவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு இருந்தாலும், முக்கியமான பல பொருள்களுக்கும், சேவைகளுக்கும் அதிகபட்ச வரி விதிக்கப்பட்டு இருப்பதும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் போன்றோர், மாநிலங்களில் மதிப்புக்கூடுதல் வரிகள் அமலில் இருக்கும்போது