Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: இலங்கை அகதி முகாம்

சேலம்: இலங்கை அகதி முகாம் சிறுமியின் வாழ்வில் ஒளியேற்றிய ஆட்சியர் ரோகிணி!

சேலம்: இலங்கை அகதி முகாம் சிறுமியின் வாழ்வில் ஒளியேற்றிய ஆட்சியர் ரோகிணி!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள குறுக்குப்பட்டியில் இலங்கை அகதிகளுக்கான குடியிருப்பு உள்ளது. அந்த முகாமைச் சேர்ந்த மோதிலால், அடிப்படையில் ஒரு சிற்பி. கோயில்களில் கடவுள் சிலைகளை செதுக்கி வருகிறார். என்னதான் கலை நயத்துடன் சிலை வடித்தாலும், கிடைப்பது சொற்ப கூலிதான். இவருடைய மகள் வழி பேத்தி காவினியா (13); பேரன் ரனுஷன் (14). இருவரையும் மோதிலாலும் அவருடைய மனைவி பரமேஸ்வரியும்தான் பராமரித்து வருகின்றனர்.   இந்த குழந்தைகளின் அப்பா திருமுருகன், பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. கிடைக்கின்ற கூலியை டாஸ்மாக்கிடம் கொடுத்துவிட, அதனால் மனைவி புவனேஸ்வரியுடன் அடிக்கடி தகராறு மூள, விரக்தி அடைந்த புவனேஸ்வரி குழந்தைகளை தவிக்கவிட்டு தீக்குளித்து இறந்து போனார். 2007ல் நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகு, குழந்தைகளை சிற்பி மோதிலால்தான் படிக்க வைத்து வருகிறார்.   சிறுமி காவினியா, தாரமங்கலத்தில் உள்ள