Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஆவணப்பட இயக்குநர்

“சாதியை ஒழிக்காமல் மலக்குழி சாவுகளை தடுக்க முடியாது” -‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யா

“சாதியை ஒழிக்காமல் மலக்குழி சாவுகளை தடுக்க முடியாது” -‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யா

அரசியல், கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
(ஏப்ரல்-2017, "புதிய அகராதி" இதழில்...)   ‘கக்கூஸ்’ அவணப்படத்தின் மூலம் மனிதக்கழிவு அகற்றும் தூய்மைப் பணியாளர்களின் துயர நிலையை, அவர்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார் திவ்யபாரதி. அவருடனான உரையாடலில் இருந்து…   புதிய அகராதி: துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் நோக்கம் எப்போது வந்தது?   திவ்யா: கடந்த 2015ம் ஆண்டு மதுரையில், மலக்குழியில் இறங்கி வேலை செய்த இரண்டு தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி இறந்து விட்டனர். இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, உரிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு, அலட்சியமாக இருந்த அதிகாரிகளை கைது செய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி எங்கள் அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகளும் போராடின.   அப்போது, இறந்த ஒரு தொழிலாளியின் இளம் மனைவி 'வா மாமா வ