Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஆழ்துளை கிணறு

சுர்ஜித் மீட்பு பணிகளும் சீனா குறித்த ஒப்பீடும்!

சுர்ஜித் மீட்பு பணிகளும் சீனா குறித்த ஒப்பீடும்!

தமிழ்நாடு, திருச்சி, முக்கிய செய்திகள்
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணற்றில் இரண்டு வயதே ஆன சிறுவன் சுர்ஜித், தவறி விழுந்துவிட்டான். 'சுர்ஜித் மீண்டு வா!' என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் சுர்ஜித்தை மீட்க அல்லும் பகலும் ஓயாது போராடி வரும் மீட்புப்படை; இன்னொருபுறம் தீபாவளி பண்டிகை... 425 கோடிக்கு மது விற்பனை... கைதி, பிகில் திரைப்படங்கள், நடிகர் விஜயின் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம்... என தமிழகம் வேறு வகையான பொழுதுபோக்கு இத்யாதிகளையும் கைவிடவில்லை. பஞ்ச பூதங்களையும் அடக்கியதுதானே இந்த மனித உடல்? அதனால் மாறுபட்ட குணங்களையும் அப்படியே ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இப்போது நாம் சொல்ல வருவது அதைப்பற்றி மட்டும் அல்ல. ஓரிரு நாள்களாக ஒரு காணொலி காட்சி, வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களில் பரவிக் கொண்டே இருக்கிறது. அ
அறம் – சினிமா விமர்சனம்;  ‘துகிலுறியப்படும்  அதிகாரவர்க்கம்!’

அறம் – சினிமா விமர்சனம்; ‘துகிலுறியப்படும் அதிகாரவர்க்கம்!’

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழில் எப்போதேனும் மிக அரிதான தருணங்களில் மட்டுமே குரலற்றவர்களின் குரலை, எந்த வித சமரசமுமின்றி திரைப்படமாக எடுக்கப்படுவதுண்டு. 'தண்ணீர் தண்ணீர்', 'ஜோக்கர்' போன்ற படங்களை உதாரணங்களாகச் சொல்லலாம். அந்த வகைமையிலான படம்தான், அறம். இந்தப் படத்திற்கு இதைவிட பொருத்தமான தலைப்பு வேறொன்றைச் சூட்டிவிட முடியாது. அண்மைக் காலங்களாக நயன்தாரா, நாயகி பிம்பத்தை தூக்கிப்பிடிக்கும் பாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அவருடைய ஒட்டுமொத்த சினிமா கேரியரில் இந்தப்படம் மறக்க முடியாததாக இருக்கும். நயன்தாராவைத் தவிர ஆட்சியர் பாத்திரத்திற்கு வேறு நாயகிகள் பொருந்துவார்களா என்பதும் கேள்விக்குறிதான். ஆட்சியருக்கான மிடுக்கு, கோபம், ஒடுக்கப்பட்டவர்கள் மீதான பரிவு என நவரசங்களையும் வெளிப்படுத்துகிறார். அவருடைய உடல்மொழி ரொம்பவே ரசிக்க வைக்கிறது. படம் முழுக்க அவருக்கு இரண்டே இரண்டு புடவைகளில்தான் வருக