
மக்களவை தேர்தல்: சேலத்தில் திமுக வரலாற்று வெற்றி! எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. ஆனார்!!
மக்களவை தேர்தலில்,
39 ஆண்டுகளுக்குப் பிறகு
சேலம் தொகுதியை வசப்படுத்தி,
வரலாற்று வெற்றியைப் பதிவு
செய்துள்ளது, திமுக.
அக்கட்சியின் வேட்பாளர்
எஸ்.ஆர்.பார்த்திபன் அமோக
வெற்றி பெற்று, எம்.பி. ஆகியுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் எஸ்.ஆர்.பார்த்திபன், ஆளும் அதிமுக தரப்பில் கே.ஆர்.எஸ். சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்கள் மட்டுமின்றி, டிடிவி தினகரனின் அமமுக தரப்பில் எஸ்.கே.செல்வம், மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரபு மணிகண்டன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராசா அம்மையப்பன் உள்ளிட்ட 22 பேர் போட்டியிட்டனர்.
ஏற்கனவே கடந்த 2009, 2014 ஆகிய இரு மக்களவை தேர்தல்களிலும் சேலம் தொகுதியை அதிமுகவே கைப்பற்றி இருந்தது. அத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால், எப்படியும் இந்த தேர்தலிலும் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற...