ரூ.47 கோடிக்கு கணக்கு எங்கே? பெரியார் பல்கலை தணிக்கை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்!!
- சிறப்பு செய்தி -
சேலம் பெரியார் பல்கலையில் கடந்த இருபது ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களில் 47 கோடி ரூபாய்க்கு மேல் கணக்கு ஆவணங்கள் ஒப்படைக்காதது தணிக்கையில் தெரியவந்துள்ளது. கல்வித்தகுதியே இல்லாதவர்களை எல்லாம் உதவி பேராசிரியராக நியமித்தது, கணக்குவழக்கில்லாமல் ஊதியங்களை வாரி இறைத்தது உள்ளிட்ட கேலிக்கூத்துகளை எல்லாம் தணிக்கை அதிகாரிகள் தோலுரித்துக் காட்டியுள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கடந்த 1997ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி தொடங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்திற்கு செல்ல இருந்த பெரியார் பல்கலையை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏழை மாணவர்களின் கல்வி நலனுக்காக அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் தனக்கே உரிய பாணியில் உரிமையுடன் கேட்டுப் பெற்றார் அந்நாள் வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.
ஒவ்வொரு முறை...