
சேலம் திமுக பிரமுகரை மிரட்டிய உளவுத்துறை! ஆழம் பார்க்கும் ஆளுங்கட்சி!
சேலத்தைச் சேர்ந்த
திமுக பிரமுகரை,
மாவோயிஸ்ட்களுடன்
தொடர்புடையவராக சித்தரித்து,
உளவுத்துறை மூலம்
மிரட்டிப் பணிய வைக்கும்
மூன்றாம்தர வேலைகளில்
ஆளுங்கட்சி இறங்கி இருப்பது
அரசியல் அரங்கில்
சலசலப்புகளை ஏற்படுத்தி
உள்ளது.
சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்கு-ழுத் தலைவர், திமுகவில் அயோத்தியாப்பட்டண ஒன்றிய செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து வந்த அவர், தற்போது கிழக்கு மாவட்ட திமுகவில் அவ்வொன்றியத்தின் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். செவ்வாய்க்கிழமை (நவ. 12, 2019) மாலை 4.30 மணியளவில், வீடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று இரண்டு கார்கள் விஜயகுமார் அருகில் வந்து நிற்க, அவற்றில் இருந்து 'டிப்-டாப்' ஆக உடையணிந்த நான்கைந்து பேர் இறங்கியிருக்கின்றனர். அவரிடம் ஏதோ ரகசியமாக கிசுகிசுத்தவர்க...