பூவனம்: காற்றில் மிதக்கும் வானம் (கவிதை)- விமர்சனம்!
(பூவனம்)
தமிழ்ச்சிற்றிதழ்கள் உலகில் தனக்கென்று தனித்த இடத்தை தக்க வைத்திருக்கும் கவிஞர் பெ.அறிவுடைநம்பியின் நான்காவது படைப்பாக அண்மையில் வெளிவந்திருக்கிறது, 'காற்றில் மிதக்கும் வானம்'. கவிதை நூல். 'விழியில் ததும்பும் நீர்', 'நீரில் ஆடும் நிலா', 'மழையில் நனைந்த மின்னல்' ஆகியவை இவருடைய முந்தைய படைப்புகள்.
கவிதை நூலுக்கு இவர் இடும் தலைப்பே ரசனையானது. ஆனால், காற்றில் வானம் மிதக்குமா? என்பது கவிஞனுக்கேயுரிய முரண். பூட்டுக்கு பெயர் பெற்ற திண்டுக்கல்காரர். எனினும் அவர், கற்பனை வளத்திற்கும், கவி புனையவும் ஒருபோதும் பூட்டிட்டுக் கொண்டதில்லை. அதனால்தான், கூட்டுறவுத்துறையில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, கவி உலகில் தும்பியாய் பறந்து கொண்டிருக்கிறார்.
படைப்பு நோக்கில் சொல்ல வேண்டுமானால் கவி-ஞர் பெ.அறிவுடைநம்பியிடம் எப்போதுமே ஓர் எள்ளல்தனம் இருக்கும். குறுங்கவிதைகளை 'நற...