Thursday, December 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: நயன்தாரா

ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…! திரை இசையில் வள்ளுவம்! #தொடர்

ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…! திரை இசையில் வள்ளுவம்! #தொடர்

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
சங்க இலக்கியங்களை, வெகுசன ரசிகர்களுக்கு ஏற்ப திரை இசைப் பாடல்களில் குழைத்துத் தருவது என்பது ஒரு நுட்பமான கலை. தமிழ்த் திரைப்படங்களில் 'இளங்கம்பன்' கண்ணதாசன் அதைச் சரிவர செய்தவர் என்பது என் அபிப்ராயம்.   மூத்த கவிஞர்கள் மருதகாசி, வாலி ஆகியோருக்குப் பிறகு வைரமுத்துவும் அவ்வப்போது இலக்கியங்களில் புரண்டு எழுவார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற தொகுப்புகளில் சங்க இலக்கியங்கள் வரிசை கட்டி நின்றாலும் குறுந்தொகை மீது திரைக்கவிஞர்களுக்கு எப்போதும் சற்று ஈர்ப்பு அதிகம். தவிர, கம்ப காவியத்தையும், பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பில் இருந்து திருக்குறளையும் திரை இசையில் வெகுவாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.   அண்மையில், யூடியூபில் ஒரு பாடலைக் கேட்க நேர்ந்தது. 'நண்பேன்டா (2015)' என்றொரு படம். உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடித்திருந்தனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில், 'ஊரெல்லாம் உன்னைக் கண்டு விய...
நயன்தாரா அழகில் மயங்கிய திருடன்; நூதனமாக பிடித்த பீஹார் பெண் போலீஸ்!

நயன்தாரா அழகில் மயங்கிய திருடன்; நூதனமாக பிடித்த பீஹார் பெண் போலீஸ்!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நயன்தாரா அழகில் மயங்கிய மொபைல் ஃபோன் திருடனை நூதனமாக கைது செய்த பெண் காவல்துறை அதிகாரிக்கு, பீஹார் காவல்துறையில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. பீஹார் மாநிலத்தில் இன்றைய தினம் இரண்டு செய்திகள் பரபரப்புக்கு உள்ளானவை. ஒன்று, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு மீண்டும் சிறைவாசம். இன்னொரு பரபரப்பு, காவல்துறையில் இருந்து... பரபரப்புக்குக் காரணமானவர், மதுபாலா தேவி. பீஹார் தர்பங்கா நகர காவல் நிலையத்தில் உதவி துணை ஆய்வாளர். சாதனையாளர்கள் புதிதாக எதையும் செய்வதில்லை; ஏற்கனவே இருக்கும் ஒன்றை புதிய கோணத்தில் செயல்படுத்துவதாக ஒரு கூற்று உண்டு. ஒரு வழக்கில் மதுபாலா தேவி கையாண்ட ஓர் உத்தி, இன்றைக்கு பீஹார் முழுவதும் அவரை 'டாக் ஆப் த டவுன்' ஆக ஆக்கியிருக்கிறது. பீஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் இருக்கிறது தர்பங்கா மாவட்டம். அந்தப்...
வேலைக்காரன் – சினிமா விமர்சனம்; ‘கார்ப்பரேட்டுகளின் லாப வெறியை தோலுரிக்கிறது’

வேலைக்காரன் – சினிமா விமர்சனம்; ‘கார்ப்பரேட்டுகளின் லாப வெறியை தோலுரிக்கிறது’

சினிமா, முக்கிய செய்திகள்
'தனி ஒருவன்' இயக்குநர் மோகன் ராஜா - சிவகார்த்திகேயன் கூட்டணியில், உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 22, 2017) வெளியாகி இருக்கிறது, 'வேலைக்காரன்'. நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ஃபகத் ஃபாசில், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகிணி, சார்லி, விஜய் வசந்த், 'ரோபோ' சங்கர், சதீஷ், 'மைம்' கோபி, 'ஆர்.ஜே.' பாலாஜி, தம்பி ராமையா, சரத் லோஹித்ஸ்வா மற்றும் பலர். இசை; அனிருத்; ஒளிப்பதிவு: ராம்ஜி; கலை: முத்துராஜ்; தயாரிப்பு: 24 ஏஎம் ஸ்டூடியோஸ்; இயக்கம்: மோகன் ராஜா. கதை என்ன?: வேலைக்காரர்கள், அந்தந்த நிறுவனத்தின் முதலாளிகளுக்கு விசுவாசமாக இருப்பதைக் காட்டிலும், பொருள்களை வாங்கும் நுகர்வோருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதையும், லாபவெறி கொண்டு அலையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உண்ணும் உணவுப்பொருள்களை எப்படி தயாரிக்கின்றன? அதை வணிகப்படுத்த என்னவெல்லாம் செய்கின்றன என்பதையும் நேர்த்தியான திரை க்கதையுடன...
அறம் – சினிமா விமர்சனம்;  ‘துகிலுறியப்படும்  அதிகாரவர்க்கம்!’

அறம் – சினிமா விமர்சனம்; ‘துகிலுறியப்படும் அதிகாரவர்க்கம்!’

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழில் எப்போதேனும் மிக அரிதான தருணங்களில் மட்டுமே குரலற்றவர்களின் குரலை, எந்த வித சமரசமுமின்றி திரைப்படமாக எடுக்கப்படுவதுண்டு. 'தண்ணீர் தண்ணீர்', 'ஜோக்கர்' போன்ற படங்களை உதாரணங்களாகச் சொல்லலாம். அந்த வகைமையிலான படம்தான், அறம். இந்தப் படத்திற்கு இதைவிட பொருத்தமான தலைப்பு வேறொன்றைச் சூட்டிவிட முடியாது. அண்மைக் காலங்களாக நயன்தாரா, நாயகி பிம்பத்தை தூக்கிப்பிடிக்கும் பாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அவருடைய ஒட்டுமொத்த சினிமா கேரியரில் இந்தப்படம் மறக்க முடியாததாக இருக்கும். நயன்தாராவைத் தவிர ஆட்சியர் பாத்திரத்திற்கு வேறு நாயகிகள் பொருந்துவார்களா என்பதும் கேள்விக்குறிதான். ஆட்சியருக்கான மிடுக்கு, கோபம், ஒடுக்கப்பட்டவர்கள் மீதான பரிவு என நவரசங்களையும் வெளிப்படுத்துகிறார். அவருடைய உடல்மொழி ரொம்பவே ரசிக்க வைக்கிறது. படம் முழுக்க அவருக்கு இரண்டே இரண்டு புடவைகளில்தான் வருகிறார...