Thursday, December 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

செரீனா வழக்கு, கங்கை அமரனின் பங்களா பறிப்பு; சசிகலா மட்டும்தான் காரணமா?

செரீனா வழக்கு, கங்கை அமரனின் பங்களா பறிப்பு; சசிகலா மட்டும்தான் காரணமா?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
மதுரை செரீனா மீது கஞ்சா வழக்கு, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் மீது போதைப்பொருள் வழக்கு, கங்கை அமரனின் பங்களா பறிப்பு நிகழ்வுகளின் பின்னணியில் சசிகலா மட்டுமே இருப்பது போலவும், ஜெயலலிதாவுக்கு அதில் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போலவும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது புரட்சித்தலைவி அம்மா' செய்தி வெளியிட்டுள்ளது, மன்னார்குடி கும்பல் வட்டாரத்தை கொதிப்படையச் செய்துள்ளது. கடந்த மாதம் (பிப்ரவரி) 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று, ஆளும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக 'நமது புரட்சித்தலைவி அம்மா' தொடங்கப்பட்டது. நேற்று வெளியான (மார்ச் 2, 2018) இந்த நாளிதழில், ''இதுவே என் கட்டளை.... கட்டளையே என் சாசனம்'' என்ற தலைப்பில் மிக நீளமான கவிதை ஒன்று பிரசுரிக்கப்பட்டு இருந்தது. சித்ரகுப்தன் என்ற புனைப்பெயரில் அந்தக் கவிதை எழுத்தப்பட்டு இருந்தது. அந்த கவிதை இடம்பெற்ற பக்கத்தின் மேல் பகுத...
திறக்கப்பட்டது ஜெயலலிதா சிலையா? அல்லது காந்திமதி சிலையா?; நெட்டிஸன்கள் கிண்டல்

திறக்கப்பட்டது ஜெயலலிதா சிலையா? அல்லது காந்திமதி சிலையா?; நெட்டிஸன்கள் கிண்டல்

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி, அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அவருடைய முழு உருவச்சிலை திறக்கப்பட்டது. சிலை, ஜெயலலிதா உருவத்தோடு பொருந்திப் போகாமல் இருந்ததால் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழாவையொட்டி ஆளும் அதிமுகவினர் விமர்சையாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். அவருடைய பிறந்தநாளான இன்று (பிப்ரவரி 24, 2018), சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஜெயலலிதாவின் 7 அடி உயரமுள்ள முழு உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. அங்கு ஏற்கனவே உள்ள எம்ஜிஆர் சிலை அருகிலேயே ஜெயலலிதாவின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர். ''இந்தியாவிலேயே கட்டுக்கோப்புடன் கட்சி நடத்திய ஒரே தலைவர் அம்மா அவர்கள்தான்'' என்று முதல்வர் இபிஎஸ் புகழாரம் சூட்டினார். ''ஆட்சி நடத்து...