Monday, May 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: சேலம் மாவட்டம்

சேலம்: செம்மலையால் தாக்கப்பட்ட அதிமுக நிர்வாகி திமுகவில் இணைந்தார்; தாய் கட்சியில் தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று புகார்!!

சேலம்: செம்மலையால் தாக்கப்பட்ட அதிமுக நிர்வாகி திமுகவில் இணைந்தார்; தாய் கட்சியில் தொண்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று புகார்!!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அதிமுக எம்எல்ஏ செம்மலையால் பலர் முன்னிலையில் அடித்து அவமானப்படுத்தப்பட்ட அக்கட்சித் தொண்டர், தனது ஆதரவாளர்களுடன் இன்று (ஏப்ரல் 4, 2019) திமுகவில் இணைந்தார்.   தர்மபுரி மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இதையடுத்து கடந்த மார்ச் 31ம் தேதி, சேலம் மாவட்டம் சிந்தாமணியூர் பகுதியில் பரப்புரைக்காக வந்திருந்தார். அப்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, அதிமுக எம்எல்ஏ செம்மலை மற்றும் இரு கட்சி நிர்வாகிகளும் உடன் இருந்தனர். அன்புமணி ராமதாஸ் பரப்புரையை தொடங்கியபோது, கூட்டத்தில் பிளந்து கொண்டு வந்த ஒருவர், 'நீங்கள்தான் போன முறை எம்.பி.யாக ஜெயிச்சீங்க அய்யா. ஆனால் ஐந்து ஆண்டுகளாக தொகுதி பக்கமே வரவில்லை. எட்டு வழிச்சாலையை எதிர்த்தீங்களே அய்யா.... இப்போது அதிமுக உடன் கூட்டணி வெச்சிருக்கீங்களே அய்யா... அந்த திட்டத்தை இனிமே ஆதரிப்பீங்களா
”அரசாங்கத்தை தனியாரிடம் விற்றுவிடுங்கள்!”- சீமான் ஆவேசம்

”அரசாங்கத்தை தனியாரிடம் விற்றுவிடுங்கள்!”- சீமான் ஆவேசம்

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
எல்லா துறைகளிலும் தனியார்தான் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றால் அரசாங்கம் எதற்கு? அதையும் தனியாருக்கு ஏலம் விட்டுவிட வேண்டியதுதானே? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறினார்.   சேலம் மாவட்டம் காமலாபுத்தில் 160 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக காமலாபுரம், சிக்கனம்பட்டி, சட்டூர், பொட்டியபுரம், தும்பிப்பாடி ஆகிய கிராமங்களில் 570 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.   இதற்கு அந்த கிராமங்கங்களைச் சேர்ந்த மக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தவிர, சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்காகவும் சேலம் மாவட்டத்தில் 18 கிராமங்களில் விளை நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தை எதிர்த்தும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நி
சேலம்: பகலில் மாணவர்கள்; மாலையில் குழந்தை தொழிலாளர்கள்! சமூக பேரவலத்தின் நேரடி பதிவு

சேலம்: பகலில் மாணவர்கள்; மாலையில் குழந்தை தொழிலாளர்கள்! சமூக பேரவலத்தின் நேரடி பதிவு

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
- சிறப்புக்கட்டுரை -   பள்ளிக்கல்வித்துறையின் பாராமுகத்தால் ஒரே பள்ளியில் படித்து வரும் தாய், தந்தை அல்லது பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்த 29 மாணவ, மாணவிகளின் கல்வி நலன் கேள்விக்குறியாகி உள்ளது. சேலத்தை அடுத்த வேடுகாத்தாம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 470க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வேடுகாத்தாம்பட்டி, பனங்காடு, ஆண்டிப்பட்டி, பெத்தானூர், குட்டக்காடு, சந்தைக்கரடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் இப்பள்ளியில் படிக்கின்றனர். சிவதாபுரம், வேடுகாத்தாம்பட்டி, திருமலைகிரி ஆகிய பகுதிவாழ் மக்களின் வாழ்வாதாரம், பெரும்பாலும் வெள்ளிப்பட்டறைத் தொழிலை நம்பியே இருக்கிறது. இத்தொழிலுக்கு அடுத்தபடியாக அவர்களுக்குக் கைகொடுப்பது, கட்டட வேலை. வெள்ளிப்பட்டறை முதலாளிகளைத் தவிர, மற்றவர்கள் 200 ரூபாய் கூலிக்குச் செல்லும் அன்றாடங்காய்ச்சி வர்க்கத்தினர்தா
எங்கள் பிணங்களின் மீது எட்டுவழிச்சாலை போடுங்கள்!; கொதிக்கும் விவசாயிகள்; தகிக்கும் சேலம்!!

எங்கள் பிணங்களின் மீது எட்டுவழிச்சாலை போடுங்கள்!; கொதிக்கும் விவசாயிகள்; தகிக்கும் சேலம்!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
எட்டு வழிச்சாலை விவகாரத்தில், அக்னி நட்சத்திரம் அடங்கிய பின்னும் கடும் கொதிநிலையில் இருக்கிறது மாங்கனி மாவட்டம். 'ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு, இழப்பீடு தருகிறோம் என்பதை எப்படி ஏற்க முடியும்? எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோடி தருகிறோம். உயிரைக் கொடுப்பாரா?,' என வெடித்துக் கிளம்பியுள்ளனர் விவசாயிகள். சேலத்தில் இருந்து சென்னைக்குச் செல்ல மூன்று வழித்தடங்கள் உள்ளன. இதனூடாக 334 கி.மீ., தொலைவு பயணிக்க வேண்டும். இதற்கான பயண நேரம் 5.24 மணி. ஆனால், புதிதாக அமையவிருக்கும் எட்டு வழிச்சாலை / பசுமைவழிச்சாலைத் திட்டத்தால், இந்தப் பயண தூரம் 57 கி.மீ., வரை குறைகிறது. அதாவது, 277.3 கி.மீ. தூரமாக பயணத்தொலைவு குறைகிறது. இதனால், வெறும் 3 மணி நேரத்தில், சேலத்தில் இருந்து சென்னைக்கு சாலை மார்க்கமாக பயணித்துவிட முடியும்.   எட்டு வழிச்சாலைத் திட்டத்தின் நோக்கம் குறித்து அரசுத்தரப்ப
சேலம் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்தது!; பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்!!

சேலம் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்தது!; பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் அருகே, துணை மின் நிலையத்தில் உயர்மின்னழுத்தம் காரணமாக டிரான்ஸ்பார்மர் வெடித்தது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே, கே.ஆர். தோப்பூரில் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இது, 400 மெகாவாட் திறன் கொண்டது. மேட்டூர் அனல்மின் நிலையம், நெய்வேலி ஆகிய இடங்களில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தை நேரடியாகப் பெற்று, இங்குள்ள டிரான்ஸ்பார்கள் மூலம் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு விநியோகம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்த துணை மின் நிலையத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மரில் இன்று (ஜூன் 8, 2018) காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதறியது. தீ, கொளுந்து விட்டு எரிந்தது. கரும்புகை வானுயர பறந்தது. கரும்புகை, பல கிலோமீட்டர் தொலைவில் இருப்போருக்கும் தெரிந்ததால், பலரும்
ஆத்தூரில் மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்த தனியார் பள்ளிகளுக்கு காவல்துறை சம்மன்!

ஆத்தூரில் மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்த தனியார் பள்ளிகளுக்கு காவல்துறை சம்மன்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
ஆத்தூரில், சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பர தட்டிகளை வைத்திருந்த கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் உள்பட 11 நிறுவனங்களுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி காவல்துறை சம்மன் அளித்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் இயங்கும் பல தனியார் பள்ளிகள், கல்லூரிகள் நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மரங்களில் ஆணிகளை அடித்து விளம்பர தட்டிகளை வைத்துள்ளன.   இதனால் மரங்களின் ஆயுள் குறைவதுடன், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, புத்திரகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் அக்னி செல்வம், மாநில அமைப்புக்குழு உறுப்பினர் ராஜலிங்கம் ஆகியோர் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் கேசவன், அதற்குரிய சிஎஸ்ஆர் ரசீது கொடுத்தார். மேலும், 'இந்த புகாரின
குழந்தை கடத்தும் கும்பல் எனக்கருதி வட இந்திய பெண் மீது தாக்குதல்!; சேலத்தில் அரங்கேறிய காட்டுமிராண்டித்தனம்

குழந்தை கடத்தும் கும்பல் எனக்கருதி வட இந்திய பெண் மீது தாக்குதல்!; சேலத்தில் அரங்கேறிய காட்டுமிராண்டித்தனம்

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
குழந்தைகளைக் கடத்தும் கும்பல் ஒன்று வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்குள் ஊடுருவி இருப்பதாக கடந்த மாதம் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது.   இதை உண்மை என்று கருதியவர்கள் சில இடங்களில் சந்தேகப்படும் நபர்கள் மீது சரமாரியாக தாக்கியதில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்திருந்த பெண் ஒருவரும் தாக்கப்பட்டு இறந்தனர்.   இந்நிலையில், அதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவம் சேலத்திலும் இன்று (ஜூன் 3, 2018) நடந்துள்ளது.   சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூரில் இன்று மதியம் 2 மணியளவில் வட இந்தியப் பெண் ஒருவர் அழுக்கடைந்த டி-ஷர்ட்டும், அரைக்கால் டிரவுசர் ஒன்றும் அணிந்தபடி ஊருக்குள் சுற்றி வந்துள்ளார். ஒரு சில தெருக்களில் அடிக்கடி சுற்றி வந்துள்ளார். இதைப்பார்த்த சிலர், அந்தப்பெண் குழந்தைகளைக் கடத
சேலம்: ஆர்கானிக் மாம்பழம், சப்போட்டா உற்பத்தியில் அசத்தும் ஷாஜஹான்!; தித்திக்கும் சுவையால் பெருகும் வாடிக்கையாளர்கள்

சேலம்: ஆர்கானிக் மாம்பழம், சப்போட்டா உற்பத்தியில் அசத்தும் ஷாஜஹான்!; தித்திக்கும் சுவையால் பெருகும் வாடிக்கையாளர்கள்

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-சிறப்புக் கட்டுரை-   முறையான பயிற்சியும், முடியும் என்ற நேர்மறையான சிந்தனையும் இருந்தால் இயற்கை வேளாண்மையில் உறுதியாக சாதிக்க முடியும் என்கிறார் சேலம் ஷாஜஹான். சேலம் கோட்டையைச் சேர்ந்த ஷாஜஹான் (62), எஸ்எஸ்எல்சி வரை படித்திருக்கிறார். விவசாயப் பின்னணி ஏதுமில்லை. பல்வேறு சுயதொழில்களைச் செய்து வந்தவர் கடைசியாக, ஆடியோ தொழில் செய்து வந்தார். அந்த தொழில் நன்றாக வளர்ந்த நிலையில், தன் நண்பர்களிடம் விட்டுவிட்டு முழுநேர விவசாயத்திற்கு மாறினார்.   சேலம் மாவட்டம் அடிமலைப்பட்டி கிராமத்தில் போதமலை அடிவாரத்தில் அமைத்திருக்கிறது அவருடைய மாந்தோப்பும் சப்போட்டா தோப்பும். பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அதுவும் வெற்றிகரமாக.   முழுக்க முழுக்க இயற்கையை நேசிக்கும் மனிதராக தென்பட்டார். அவர் பேச்சிலும், நீண்ட நேர உரையாடலிலும
கருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்!-EXCLUSIVE

கருந்துளைகள் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; சாதனை படைத்த தமிழர்!-EXCLUSIVE

இந்தியா, உலகம், கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விஞ்ஞானம்
E-X-C-L-U-S-I-V-E சேலம் சித்தனூரை சேர்ந்தவர் சதீஸ்குமார் சரவணன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் இன்றைக்கு உலக அளவில் இந்தியாவின் நம்பிக்கைக்கு உகந்த முகமாக திகழ்கிறார் என்றால் மிகை ஆகாது. ஜெர்மன் நாட்டில் இளநிலை விஞ்ஞானியாக (Junior Scientist) இருக்கிறார். இயற்பியலாளர். சதீஸ்குமார் உள்பட நான்கு பேர் கொண்ட குழுவினர், ஐன்ஸ்டீன் சொல்லிச்சென்ற முக்கியமான ஒரு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, கருந்துளைகள் (Black Holes) பற்றிய புதியதொரு கருத்தியல் கொள்கையை உருவாக்கி, விஞ்ஞான உலகின் கவனத்தை ஈர்த்துள்ளனர். அதில், சதீஸ்குமாரின் பங்களிப்பு முக்கியமானது. ''எங்களது ஆராய்ச்சிக்கு ஐன்ஸ்டீன் கருத்தியல்தான் அடிப்படை. அதை மையமாக வைத்துக்கொண்டு, விண்வெளியில் (SPACE) உள்ள கருந்துளைகளைப் பற்றி சில புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வந்திருக்கிறோம்,'' என சதீஸ்குமார் அடக்கத்துடன் சொல்கிறார். கருந