சட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி?
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஓய்வு பெற்ற பெண் செவிலியர் உதவியாளர் ஒருவர், சட்ட விரோதமாக குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்து வந்த சம்பவம் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதுமே, ஆண், பெண் இருபாலரிடத்திலும் மலட்டுத்தன்மை பிரச்னை அதிகரித்து வருவதுதான் குழந்தையின்மைக்கு முக்கிய காரணம்.
இதனால், சட்டப்படி குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ள மத்திய, மாநில அரசுகளே அதற்கான வழிமுறைகளைச் செய்திருந்தாலும், அதற்கான நடைமுறைகளும், விதிமுறைகளும் அதிகம். அதனால்தான் குழந்தையில்லா தம்பதியினரில் பலர் தத்தெடுக்க தயாராக இருந்தாலும், அரசின் கெடுபிடிகள் காரணமாக சட்ட ரீதியான தத்தெடுத்தலை புறக்கணித்து விட்டு, சட்ட விரோதமாக குழந்தையை விலை கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
எனினும், புதிய அகராதி வாசகர்களுக்காக, சட்டப்பூர்வமாக ஒரு குழந்தையைத் தத்தெடுப்பத...