‘வாய்தா ராணி’, ‘ஓசி பயணம்…’ வாய்த்துடுக்கால் வீழ்ந்த பொன்முடி
ஜெயலலிதாவை வாய்தா ராணி என்றும், பெண்களுக்கான இலவச பேருந்துப் பயணத்தை ஓசி பயணம் என்றும் பொதுவெளியில் வாய்த்துடுக்கு காட்டிய அமைச்சர் பொன்முடிக்கு, சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை என்பதை சொந்தக் கட்சியினரே ரசிக்கின்றனர்.
தமிழகத்தில் தந்தை பெரியார் மீது ஈர்ப்பு கொண்டவர்கள், பேரறிஞர் அண்ணா, திராவிடர் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய பிறகு அக்கட்சியை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். அப்படி பெரியாரிய பட்டறையில் இருந்து திமுகவுக்குள் காலடி வைத்தவர்தான் பேராசிரியர் பொன்முடி. பொதுமேடை, அரசியல் மேடை என எந்த மேடயாக இருந்தாலும் திராவிட சித்தாந்தங்களைப் பேசாமல் இருக்கவே மாட்டார். அந்தளவுக்கு திராவிட சிந்தனைகளில் ஊறிப்போனவர்.
திராவிட இயக்கத்தின் மீது பொன்முடி கொண்ட சித்தாந்த பிடிப்பைச் சுட்டிக்காட்ட, அவர் எழுதிய, 'The Dravidian Movement and the Black Movement' என்ற ஒரு புத்தகமே போதுமானது....