
எல்எஸ்டி எனும் எமன்! மாணவர்களை சீரழிக்கும் புதுவித போதை!!
மெட்ரோ நகரங்களில்
மேல்வர்க்கத்து இளைஞர்கள்,
கல்லூரி மாணவர்களிடையே
பரவி வரும் புதுவித போதை
கலாச்சாரம், தற்போது முதல்வர்
எடப்பாடி பழனிசாமியின் சொந்த
மாவட்டமான சேலத்திலும்
எட்டிப்பார்க்கத் தொடங்கி இருப்பது,
காவல்துறைக்கு கூடுதல் தலைவலியை
ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மண்டல போதைப்பொருள்
தடுப்புப்பிரிவு டிஎஸ்பி
திருநாவுக்கரசுவுக்குக் கிடைத்த
ரகசிய தகவலின்பேரில்,
ஆய்வாளர் அம்பிகா தலைமையில்
காவலர்கள் தர்மபுரி மாவட்ட
எல்லையான தொப்பூர் சுங்கச்சாவடி
அருகே, அண்மையில் வாகனத்
தணிக்கையில் ஈடுபட்டனர்.
சந்தேகத்தின்பேரில், மோட்டார் சைக்கிளில்
வந்த இரு இளைஞர்களை தடுத்து,
அவர்களிடம் பையை சோதனை
செய்தபோது 2.60 கிலோ கஞ்சா
இருப்பது தெரிய வந்தது.
ஒரு இளைஞரின் பேன்ட் பாக்கெட்டில்
உள்ள பொருள்களை எடுத்து
சோதித்தபோது, அதில் தபால்தலை
வடிவத்தில் உள்ளங்கை
அளவிலான ஒரு அட்டையைக்
...