Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: இசை

‘திருட்டுப்பயலே-2’ – சினிமா விமர்சனம்!

‘திருட்டுப்பயலே-2’ – சினிமா விமர்சனம்!

சினிமா, முக்கிய செய்திகள்
'இந்த உலகத்தில் யாருமே நல்லவர்கள் இல்லை. எல்லோருக்கும் இரண்டு முகங்கள் இருக்கின்றன. வாய்ப்பு கிடைத்தால் அனைவருமே தவறு செய்யக்கூடியவர்கள்தான். ஆகையால் எல்லோரையுமே சந்தேகிக்க வேண்டும்' என்ற செய்தியை உரத்துச் சொல்கிறது, 'திருட்டுப்பயலே-2' படம். நடிகர்கள்: பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா, சுசி கணேசன், எம்எஸ் பாஸ்கர்; ஒளிப்பதிவு: செல்லதுரை; இசை: வித்யாசாகர்; தயாரிப்பு; ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்; கதை, திரைக்கதை, இயக்கம்: சுசி கணேசன். ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளமே கதியாகக் கிடக்கும் ஒரு திருமணம் ஆன பெண்ணிற்கு, அதனூடாக அறிமுகம் ஆகும் ஓர் ஆணின் மூலமாக விரும்பத்தகாத நெருக்கடிகள் ஏற்படுகிறது. அந்த நெருக்கடியில் இருந்து அந்தப் பெண்ணை கணவர் காப்பாற்றினாரா?, ஃபேஸ்புக்கில் அறிமுகம் ஆன அந்த ஆண் அந்தக் குடும்பத் தலைவிக்கு எதற்காக குடைச்சல் கொடுக்கிறார்?, குடும்பத்தலைவியின் நிலை என்ன ஆனது? என்பதை...
‘அவள்’ – சினிமா விமர்சனம்

‘அவள்’ – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி மற்றும் பலரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இன்று (நவம்பர் 3, 2017) வெளியாகி இருக்கிறது 'அவள்'. உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இயக்கம்: மிலிந்த் ராவ்; இசை: கிரிஷ்; ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா; எடிட்டிங்: லாரன்ஸ் கிஷோர்; தயாரிப்பு: வயாகாம்18 மோஷன் பிக்சர்ஸ், ஏடாகி எண்டர்டெயின்மென்ட். புதுமணத் தம்பதிகளான சித்தார்த்தும், ஆண்ட்ரியாவும் ஒரு தனி வீட்டில் தங்கி இருக்கின்றனர். அவர்களுடைய வீட்டிற்கு அருகில், இன்னொரு குடும்பம் புதிதாக குடி வருகிறது. அந்த வீட்டில் உள்ள ஜென்னி என்ற இளம்பெண்ணுக்கு திடீரென்று பேய் பிடித்து விடுகிறது. அந்தப் பேய், மெல்ல மெல்ல சித்தார்த் வீட்டுக்குள் நுழைகிறது. அதன்பிறகு நாயகனும், நாயகியும் என்ன ஆனார்கள்? அவர்கள் அந்த பேயை விரட்டினார்களா?...