Thursday, December 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: ஆதார்

நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்;  ஆதார் கார்டு அவசியம்; சிபிஎஸ்இ அறிவிப்பு

நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; ஆதார் கார்டு அவசியம்; சிபிஎஸ்இ அறிவிப்பு

இந்தியா, கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் (National Eligibility cum Entrance Test- NEET 2018) தேர்வுக்கு இன்றுமுதல் (பிப்ரவரி 8, 2018) விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. ஆதார் கார்டு விவரங்கள் இருந்தால்தான் தேர்வு எழுத முடியும். மார்ச் 9ம் தேதி, கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய மருத்துவப்படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. கடந்த ஆண்டு முதல் தமிழகத்திலும் நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்நிலையில், நடப்பு 2018-2019ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் (பிப்ரவரி 8, 2018) விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ (The Central Board of Secondary Education- CBSE) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முட...
இனிமேல் பெட்டிக்கடை வைக்கவும் ஆதார் கட்டாயம்; ஹைகோர்ட் சொல்லிடுச்சு!

இனிமேல் பெட்டிக்கடை வைக்கவும் ஆதார் கட்டாயம்; ஹைகோர்ட் சொல்லிடுச்சு!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிறப்பு முதல் இறப்பு வரை ஆதார் அட்டை அவசியம் என்ற நிலையில், இப்போது சாலையோரங்களில் பெட்டிக்கடை வைப்பதென்றாலும் ஆதார் அட்டை அவசியம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலையோரம் பெட்டிக்கடை வைக்க அனுமதி வழங்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அப்போது மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெட்டிக்கடை நடத்த உரிமம் பெறுபவர்கள் வேறு நபர்களுக்கு விற்றுவிடுவதாகக் கூறினார். இதனையடுத்து, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: ஒரு நபர் அதிக பெட்டிக்கடைகளை திறக்க தடை விதிக்க ஏதுவாக, அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்போது, ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். அவ்வாறு விண்ணப்பம் செய்யும் போது, ஒரு மாதத்தில் பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அருகே பெட்டிக்கடை வைக்கவும், சிகரெட் ...
பாஜக உறுப்பினர் படிவம் இதுக்குத்தான் பயன்பட்டுச்சு!

பாஜக உறுப்பினர் படிவம் இதுக்குத்தான் பயன்பட்டுச்சு!

அரசியல், கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'மிஸ்டு கால்' மூலம் உறுப்பினர் சேர்க்கை நடத்த திட்டமிட்ட பாஜகவுக்கு ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், அக்கட்சியின் உறுப்பினர் படிவங்கள் காகித தட்டுகளாக உருமாற்றம் பெற்றுள்ளது, சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனால் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் வலுவாக காலூன்றி விடலாம் என்ற எதிர்பார்ப்பில் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கைக்கு இலக்கு நிர்ணயித்து, 'மிஸ்டு கால்' திட்டத்தை அறிவித்தது. அதாவது, மிஸ்டு கால் கொடுத்தால் போதும். அவர்கள் பாஜகவின் உறுப்பினராக வீடு தேடி வந்து சேர்த்துக் கொள்ளப்ப டுவர். இதற்காக அச்சிடப்பட்ட புதிய உறுப்பினர் படிவங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கட்சி நிர்வாகிளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திமுகவில் இருந்த நடிகர் நெப்போலியன் கூட, 'மிஸ்டு கால்' கொடுத்த பின்னர்தான்...
எடப்பாடி பழனிசாமி இப்படி; மம்தா பானர்ஜி அப்படி!

எடப்பாடி பழனிசாமி இப்படி; மம்தா பானர்ஜி அப்படி!

இந்தியா, சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாவற்றுக்கும் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கிய காவி கும்பலை எதிர்க்கும் மிகப்பெரும் சக்தியாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உருவெடுத்துள்ளார். மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் எண்ணை அனைத்து திட்டங்களுடனும் இணைக்கும் படி மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதேபோல் சிம் கார்டுகளை சமூக விரோதிகள், தீவிரவாதிகள் பயன்படுத்துவதைத் தடுக்க மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் கடந்த மார்ச் 23-ஆம் தேதி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவில் ஒரு பொதுக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ''நான் என்னுடைய மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க மாட்டேன். ஆதார் இணைக்குமாறு கட்டாயப்படுத்துவது தனிநபர் உரிமை மீது நடத்தப்படும் தாக்குதலாகும். இதனால் என் மொபைல் எண் இணைப்பை துண்டித்தாலும் பரவாயில...