Wednesday, October 22மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

உலகம்

நியூஸிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா;  தொடரை வென்று சாதனை

நியூஸிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா; தொடரை வென்று சாதனை

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
திருவனந்தபுரத்தில் இன்று (நவம்பர் 7, 2017) நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று, 2-1 கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா வந்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் மற்றும் 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. டெல்லியில் நடந்த முதல் இருபது ஓவர் போட்டியில் இந்தியாவும், ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் நியூஸிலாந்தும் வென்று 1-1 கணக்கில் சமநிலையில் இருந்தன. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடந்தது. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் என்பதால் இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய் ந்ததாக இருந்தது. மேலும், 29 ஆண்டுகளுக்குப் பிறகு திருவனந்தபுரம் மைதானத்தில் ஐசிசி போட்டி நடப்பதால் எதிர்பார்த்ததைவிட ரசிகர...
வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் யார் யார்?

வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் யார் யார்?

அரசியல், இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
வெளிநாடுகளில் பல்லாயிரம் கோடிக்கணக்கில் சொத்துகளை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்கள் 'பாரடைஸ் ஆவண கசிவு' மூலம் வெளியாகியுள்ளது. இது, இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. வளரும் நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கருப்பு பணம் பதுக்குவது ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, கடந்த 2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்து மட்டும் 343.04 பில்லியன் டாலர் மதிப்பிலான கருப்புப் பணம் அயல் நாடுகளில் பதுக்கப்பட்டு உள்ளதாக ஓர் ஆய்வு கூறுகிறது. இதன்மூலம் கருப்புப் பணம் பதுக்கலில் உலகளவில் இந்தியாவுக்கு 5வது கிடைத்துள்ளது. அதேநேரம், 2011ம் ஆண்டில் மட்டும் 84.93 பில்லியன் டாலர் கருப்புப் பணம் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அந்த ஆண்டில் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்தியாவுக்கு 3...
மோடி சொல்வது வேடிக்கையாக இருக்கிறது!

மோடி சொல்வது வேடிக்கையாக இருக்கிறது!

அரசியல், இந்தியா, உலகம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மதவாத அரசியலால் இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் ஆண்டுக்கு ஆண்டு பின்னோக்கிச் சென்றுகொண்டுள்ள நிலையில், ஊடகவியலாளர்களின் கடமை பற்றி பிரதமர் நரேந்திர மோடி வகுப்பெடுப்பது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் இருக்கிறது. தினத்தந்தி நாளிதழின் பவள விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (நவம்பர் 6, 2017) சென்னை வந்திருந்தார். விழாவில் கலந்து கொண்ட அவர் ஊடகவியலாளர்களின் கடமை குறித்தும் பேசத்தவறவில்லை. ஊடகங்கள் குறித்து அவர் பேசியதில் முக்கியமான இரண்டு செய்திகள் கவனத்துக்குரியவை. ஒன்று, இந்தியாவில் ஊடகங்கள் அரசை சுற்றியே சுழல்கின்றன. இரண்டாவது, 125 கோடி மக்களை சுற்றியே இருக்க வேண்டும். அவர்களின் எண்ணங்களை பத்திரிகைகள் பிரதிபலிக்க வேண்டும் என்பதுதான் அந்த இரண்டு செய்திகள். அவர் எந்த அர்த்தத்தில் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. இந்தியாவில் தனி முதலாளிகளின் கையில் ஊடக...
இந்திய புலிகளை வீழ்த்தின நியூஸிலாந்து கிவிக்கள்!

இந்திய புலிகளை வீழ்த்தின நியூஸிலாந்து கிவிக்கள்!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ராஜ்கோட்டில் இன்று (நவம்பர் 4, 2017) நடந்த இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை, நியூஸிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணியின் கோலின் முன்ரோ சதம் அடித்து சாதனை படைத்தார். இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ட்வென்டி-20 கிரிக்கெட் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடந்தது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில், முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா 1-0 கணக்கில் முன்னிலை பெற்றது. அதனால் இந்த ஆட்டத்திலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்தியாவும், வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நியூஸிலாந்தும் களமிறங்கின. அதிரடி தொடக்கம்: இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதன்முதலாக வாய்ப்பு பெற்றார். நியூஸிலாந்து அணியில் டிம் சவுத்தீ, டாம் லேதம் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, கிளைன் ...
விடுதலைப்புலிகளின் லட்சிய நெருப்பு தமிழ்ச்செல்வன்!

விடுதலைப்புலிகளின் லட்சிய நெருப்பு தமிழ்ச்செல்வன்!

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரமரணம் அடைந்து இன்றுடன் (நவம்பர் 2, 2017) பத்து ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், உலகத்தமிழர்கள் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர். தமிழ்ச்செல்வன் யார்? விடுதலைப்புலிகள் இயக்க செயல்பாடுகள் மீது பற்றுகொண்டு, தன்னுடைய 17வது வயதில் இயக்கத்துடன் இணைத்துக் கொண்ட சு.ப.தமிழ்ச்செல்வன், இலங்கையின் கிளிநொச்சியைச் சேர்ந்தவர். எனினும், இயக்கத்தில் இணைந்த பிறகு, யாழ்ப்பாணமே அவருடய களமானது. இலங்கை அரச பயங்கரவாதத்தின் சதியால் வான்வெளி ராணுவக் குண்டு வீச்சில் 2.11.2007ம் தேதி காலை 6 மணியளவில் தமிழ்ச்செல்வன் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். அவர் மரணிக்கும் வரை கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்காக நெஞ்சுரத்துடன் உழைத்த முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராகவே விளங்கினார், தமிழ்ச்செல்வன். துவக்கத்தில் ப...
முதல் ட்வென்டி-20; நியூஸிலாந்தை புரட்டி எடுத்தது இந்தியா!

முதல் ட்வென்டி-20; நியூஸிலாந்தை புரட்டி எடுத்தது இந்தியா!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ட்வென்டி - 20 கிரிக்கெட் போட்டியில், அந்த அணியை இந்தியா துவம்சம் செய்து, 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ட்வென்டி-20 கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று (நவம்பர் 1, 2017) நடந்தது. இரவு 7 மணிக்கு போட்டி துவங்கியது. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஸ் நெஹ்ரா இன்றைய போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதை கவுரவிக்கும் விதமாக அவருக்கு இந்த ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல் இளம் வீரரான ஸ்ரேயாஸ் அய்யர், முதன்முதலாக சர்வதேச ட்வென்டி - 20 கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் இறங்கினார். தவான் - ரோஹித் அபாரம்: டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், தனது அணி முதலில் பந்து வீச அழைத்தார். போல்ட், டிம் சவுத்தீ ப...
பரபரப்பான ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா; தொடரையும் கைப்பற்றியது

பரபரப்பான ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா; தொடரையும் கைப்பற்றியது

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அத்துடன் 2 - 1 கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் மற்றும் மூன்று ட்வென்டி - 20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் நியூஸிலாந்து அணியும் வெற்றி பெற்று 1-1 கணக்கில் சமநிலையில் இருந்தது. இன்று (அக்டோபர் 29, 2017), கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடந்தது. இந்த தொடரை எந்த அணி வெல்லப்போகிறது என்பதை நிர்ணயிக்கும் போட்டி என்பதால், ரசிகர்களிடையே பெரும் ஆரவாரம் காணப்பட்டது. மைதானமும் நிரம்பி வழிந்தது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்க...
கோஹ்லி 9000 ரன்களை கடந்து சாதனை!

கோஹ்லி 9000 ரன்களை கடந்து சாதனை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இன்று (அக்டோபர் 29, 2017) நடந்து வரும்,  இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸி. அணிக்கு 338 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 29 ஓவர்களில், நியூசிலாந்து அணி  3 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்து இருந்தது. தொடர்ந்து விளையாடி வருகிறது. கோஹ்லியின் சாதனைகள்: 202வது ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, இன்றைய ஆட்டத்தில் 32வது சதம் அடித்து அசத்தினார். இந்த ஆட்டத்தில் அவர் 106 பந்துகளில் மொத்தம் 113 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதில், 8 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இன்றைய போட்டியில் அவர் 83 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் ஒருநாள் போட்டிகளில் 9000 ரன்கள் என்ற புதிய மைல்கல் இலக்கை எட்டினார். ஏற்கனவே தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ஏபி டிவில்லியர்ஸ் 205 இன்னிங்ஸ்களில் ...
ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை: உலகை ஆளப்போகும் தமிழ்!

ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை: உலகை ஆளப்போகும் தமிழ்!

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உலகப்புகழ் பெற்ற அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் தமிழ் அறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக டாக்டர் ஜானகிராமன், டாக்டர் சம்பந்தம் ஆகியோர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். தமிழ் இருக்கைக்காக நிதியுதவியும் வழங்கினர். அதைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது, ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையிலும் ஜெயலலிதா அறிவித்தார். இதற்காக சுமார் ரூ.33 கோடி செலவாகும் என்று தமிழ் அறிஞர்கள் கூறினர். மேலும், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து இதுவரை ரூ.19 கோடி திரட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைவதற்காக தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.10 கோடி வழங்கப்படுவதாக தமிழக முதல்வ...
”சிங்கப்பூரின் உன்னதமான சர்வாதிகாரத்தை விரும்புகிறோம்” – கமல் ட்வீட்

”சிங்கப்பூரின் உன்னதமான சர்வாதிகாரத்தை விரும்புகிறோம்” – கமல் ட்வீட்

உலகம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடிகர் கமல்ஹாசன், சிங்கப்பூர் நாட்டின் உன்னதமான சர்வாதிகாரத்தை விரும்புவதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வழக்கம்போல் அவருடைய கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளன. மத்திய, மாநில அரசுகள் மீதான விமர்சனங்களை ட்விட்டர் சமூக வலைத்தளம் மூலம் நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். 'மெர்சல்' படத்தின் சில காட்சிகளுக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்தப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார் கமல்ஹாசன். இந்நிலையில், திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்படுவது குறித்து மறுபரிசீலனை செய்யலாம் என்று சில நாள்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்தது. இது தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''சிங்கப்பூரில் தேசிய கீதம் தினமும் நடுநிசியில் மட்டுமே இசைக்கப்படுகிறது. அதேபோல் தூர்தர்ஷனில் செயல்ப...