Thursday, October 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சேலம்

பெரியார், பாரதிதாசன் பல்கலைகளுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம்

பெரியார், பாரதிதாசன் பல்கலைகளுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம்

கோயம்பத்தூர், சிவகங்கை, சேலம், தமிழ்நாடு, திருச்சி, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை நியமித்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று (ஜனவரி 6, 2018) உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர் குழந்தைவேலு புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது, கோவை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அதேபோல், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறை புல முதன்மையராக பணியாற்றி வரும் பேராசிரியர் பி.மணிசங்கர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் விரைவில் பதவியேற்பார்கள் எனத்தெரிகிறது....
”புயலோ மழையோ குளிரோ எதுவும் எங்களுக்கு துன்பமில்லை!” – செய்தித்தாள் ‘லைன் பாய்’கள் கதை!

”புயலோ மழையோ குளிரோ எதுவும் எங்களுக்கு துன்பமில்லை!” – செய்தித்தாள் ‘லைன் பாய்’கள் கதை!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சில பணிகளில் குறைந்த உழைப்பு இருக்கும். அதீத லாபம் கிடைக்கும். சில பணிகளில் உழைப்பு விழுங்கும் அளவுக்கு பணப்பலன்கள் இருக்காது. இதில் இரண்டாவது வகையிலானது, வீட்டுக்கு வீடு செய்தித்தாள் போடும் 'லைன் பாய்'களின் வாழ்க்கை. செய்தித்தாளும் ஒரு கோப்பை தேநீரும்:   ''காலையில பேப்பர் பார்க்கலைனா எனக்கு பொழுதே ஓடாது. அதுவும், ஒரு கையில தேநீர் கோப்பையை பிடித்து ஒவ்வொரு மிடறாக உறிஞ்சி சுவைத்தபடி, செய்தித்தாள் வாசிக்கும் அனுபவமே தனிதான்,'' என பலர் சுகானுபவமாக சொல்வதுண்டு.     அவர்களில் பலர், செய்தித்தாள் விநியோகத்தில் இருக்கும் வலைப்பின்னல் அமைப்பு, உழைப்பு, கூலி, 'லைன் பாய்'களின் வாழ்க்கை போராட்டம் பற்றி அறிந்து இருக்க வாய்ப்பே இல்லை.   முகவர்கள்:   தினசரி செய்தித்தாளோ அல்லது வார / மாத சஞ்சிகைகளோ எதுவாக இருந்தாலும், அவை மாவட்ட அளவில் நியமிக்...
”புகைப்பிடித்தால் மட்டுமல்ல தூங்காவிட்டாலும் மரணம் வரும்!”

”புகைப்பிடித்தால் மட்டுமல்ல தூங்காவிட்டாலும் மரணம் வரும்!”

அலோபதி, சேலம், தமிழ்நாடு, மருத்துவம், முக்கிய செய்திகள்
உலக அளவில், இந்தியாவில்தான் இருதய நோயாளிகள் அதிகம் என்கிறது ஓர் ஆய்வு. அதாவது, 2015ம் ஆண்டின் கணக்கீட்டின்படி, நம் நாட்டில் 62 மில்லியன் இருதய நோயாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 45 வயதுக்கும் குறைவானவர்கள் மாரடைப்பால் இறப்பது அதிகரித்து உள்ளதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. போதாக்குறைக்கு உலக சுகாதார நிறுவனமும், 2030ம் ஆண்டுவாக்கில் உலகம் முழுவதும் வருடத்திற்கு 23 மில்லியன் பேர் இருதய நோய்களால் இறக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. ''நமக்கெல்லாம் இருதய நோய்க்கான காரணம் என்னவென்று தெளிவாக தெரியும். அதை தடுப்பதற்கான வேலைகளில்தான் கவனம் செலுத்துவதில்லை. இரவு நேரத்தில் சரியாக தூங்காவிட்டால்கூட இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை,'' என்கிறார், மருத்துவர் ஜோதி ஆனந்த். சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தீவிர...
‘துறுதுறு’ குழந்தைகள் ‘திருதிரு’ பெற்றோர்கள்!; ஏடிஹெச்டி செய்யும் மாயம்!!

‘துறுதுறு’ குழந்தைகள் ‘திருதிரு’ பெற்றோர்கள்!; ஏடிஹெச்டி செய்யும் மாயம்!!

அலோபதி, குழந்தைகள் நலம், சிறப்பு கட்டுரைகள், சேலம், மருத்துவம், முக்கிய செய்திகள்
''அடடடடா....உங்க மகன், ஒரு நிமிஷம்கூட கிளாஸ்ல உட்கார மாட்டேன்கிறான், மேடம். அவனுக்கு வகுப்பறை விதிகளைக் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க...'' ''நாங்களும் எவ்வளவோ கோச்சிங் கொடுத்துட்டோம். அவனால அடிப்படை கணக்குப்பாடம் கூட சரியாக செய்ய முடியறதில்ல...'' இதுபோல இன்னும் நிறைய. இப்படி எல்லாம் உங்கள் பிள்ளைகள் மீது புகார்கள் வந்திருந்தால், நிச்சயம் உங்கள் குழந்தைக்கு, 'அட்டென்ஷன் டெஃபிஸிட் ஹைப்பர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (Attention Deficit Hyperactivity Disorder)' பிரச்னை இருக்கலாம், என்கிறது மருத்துவ உலகம். இது நோய் அல்ல; குறைபாடு. சுருக்கமாக ஆங்கிலத்தில், 'ADHD'. தமிழில், 'கவனக்குறைவு மற்றும் மிகுசெயல்பாடு கோளாறு'. குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு ஏற்படும் உளவியல் கோளாறுகள், கற்றலில் ஏற்படும் சிக்கல்களைக் களைவது குறித்து, சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள 'டாக்டர் ராமு லைஃப்கேர் மருத்து...
சேலம்: கேன்சர் நோயால் உயிருக்குப் போராடும் இலங்கை தமிழரின் மகன்;  ‘உதவும் உள்ளங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்’!!

சேலம்: கேன்சர் நோயால் உயிருக்குப் போராடும் இலங்கை தமிழரின் மகன்; ‘உதவும் உள்ளங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்’!!

உலகம், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள குறுக்குப்பட்டி (அட்டை) இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் யோகராஜா. பெயிண்டர். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். மகளும், மகனும் ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கின்றனர். இரண்டாவது மகன் பூபாலன் (16), எஸ்எஸ்எல்சி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த ஏராளமான தமிழர்களில் யோகராஜா குடும்பமும் ஒன்று. கடந்த 1990ம் ஆண்டு குறுக்குப்பட்டி முகாமில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்தார். பெயிண்ட் அடிக்கும் வேலைக்குச் சென்றால்தான் அன்றாடம் வீட்டில் அடுப்பெரியும். இந்த வேலையில் தினமும் அவருக்கு ரூ. 450 கூலி கிடைக்கிறது. 12 மணி நேரம் வேலை செய்தால் ரூ. 650 வரை கிடைக்கும். ஆனாலும் ஆண்டு முழுவதும் வேலை கிடைக்காது. சொற்ப கூலி, அரசு வழங்கும் உதவித்தொகை மூலம் குடும்பம் நடத்தி வந்த நில...
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு - 2018 எழுத உள்ள தனித்தேர்வர்கள், வரும் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு 2018ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20ம் தேதி வரை நடக்கிறது. முதன்முதலாக எஸ்எஸ்எல்சி தேர்வு எழுத உள்ள நேரடி தனித்தேர்வர்கள் வரும் 22.12.2017ம் தேதி முதல் 29.12.2017ம் தேதி வரை, அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசுத்தேர்வு சேவை மையத்திற்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமைகள் நீங்கலாக மற்ற அனைத்து வேலை நாள்களிலும் இந்த மையம் செயல்படும். முதன்முறையாக தேர்வு எழுதினாலும் அனைத்து பாடத்தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட நாள்களில் பதிவு செய்யாமல் தவறவிட்டவர்கள், 2.1.2018ம் தேதி முதல் 4.1.2108ம் தேதி வரை தட்கல்...
பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் திடீர் தற்கொலை ஏன்?;  கைது நடவடிக்கைக்கு பயந்து விஷம் குடித்தாரா?; திடுக்கிடும் தகவல்கள்!

பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் திடீர் தற்கொலை ஏன்?; கைது நடவடிக்கைக்கு பயந்து விஷம் குடித்தாரா?; திடுக்கிடும் தகவல்கள்!

அரசியல், ஈரோடு, கல்வி, சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அங்கமுத்து (58) திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தோப்புப்பாளையத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து (58). சேலம் பெரியார் பல்கலையில் உடல்கல்வி இயக்குநராக பணியாற்றி வந்தார். நேற்று (டிசம்பர் 18, 2017) காலை அவர் வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்தார். இதையறிந்த அவருடைய மனைவி விஜயலட்சுமி, உடனடியாக அருகில் உள்ள தன்வந்திரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு கைவிரித்த நிலையில், கணவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே அங்கமுத்து இறந்துவிட்டது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த பெருந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கவேல், தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறார். அவர...
”இயற்பியல் இல்லாமல் வாழ்க்கையே கிடையாது!”; சொல்கிறார் ஹரீஷ் பாண்ட்யா!!

”இயற்பியல் இல்லாமல் வாழ்க்கையே கிடையாது!”; சொல்கிறார் ஹரீஷ் பாண்ட்யா!!

கல்வி, சேலம், தமிழ்நாடு, திருப்பூர், முக்கிய செய்திகள்
''நம் வாழ்க்கையில் எந்த ஒரு செயல்பாட்டிலும் இயற்பியல் கோட்பாடுகள் பொதிந்திருக்கின்றன. உண்மையில், பலர் கருதுவதுபோல் இயற்பியல் ஒன்றும் அத்தனை கடினமான பாடமும் அல்ல,'' என்கிறார் பேராசிரியர் ஹரீஷ் எம் பாண்ட்யா. சேலம் இயற்பியல் ஆசிரியர்கள் சங்கம், அறிவியலை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்த ஆசிரியர்களிடம், குறிப்பாக இயற்பியல் ஆசிரியர்களிடையே இயற்பியல் துறையில் ஏற்பட்டுள்ள நவீன வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அவர்கள் மூலமாக மாணவர்களுக்கு இயற்பியல் மீதான ஆர்வத்தை வளர்ப்பதுதான் உள்ளார்ந்த நோக்கம். சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான ஆசிரியர்கள் ராஜரத்னம், வெங்கடேசன், அருளானந்தம் ஆகியோர் முதல்கட்டமாக சேலம் மாவட்டத்தில் உள்ள இயற்பியல் ஆசிரியர்கள், அறிவியல் ஆர்வலர்களுக்காக மாதந்தோறும் பயிற்சி பட்டறையை நடத்தி வருகின்றனர். இயற்பியல் துறை பேராசிரியர்கள், ...
சாதி ஆணவப் படுகொலையும் நீதிமன்ற தீர்ப்பும்!

சாதி ஆணவப் படுகொலையும் நீதிமன்ற தீர்ப்பும்!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, திண்டுக்கல், திருப்பூர், முக்கிய செய்திகள்
உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, வரலாற்றின் பக்கங்களில் நீடித்து நிலைத்து நிற்கும். ஆனால், இந்த தீர்ப்பு சமூக அடுக்குகளில் படிந்திருக்கும் சாதிய உணர்வுகளுக்கு சாவு மணி அடித்திருக்கிறதா என்றால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ''கேளடா மானிடாவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை'' என்று சாதிக்கு எதிராக புரட்சி கீதம் பாடிய பாரதியின் பிறந்த நாளுக்கு மறுநாள் (டிசம்பர் 12, 2017), இந்திய திருநாடே அதுவரை எதிர்பார்த்திராத ஒரு தீர்ப்பை, திருப்பூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் வழங்கினார். உடுமலை சங்கரின் காதல் மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் தண்டனையும் வழங்கினார் நீதிபதி. அதுவும், ஒரு பெண் நீதிபதியே இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க...
‘நாறும்’ முதலமைச்சரின் மாநகரம்!; ‘இருட்டை தேடும்’ பெண்கள்!!

‘நாறும்’ முதலமைச்சரின் மாநகரம்!; ‘இருட்டை தேடும்’ பெண்கள்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாநகரத்திலேயே போதிய பொதுக்கழிப்பறை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் ரயில் தண்டவாளம், இருட்டு நேரத்தில் முள் புதரோரங்களில் 'அவசரத்துக்கு ஒதுங்கும்' அவல நிலை நீடிப்பதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்ஐ) புகார் தெரிவித்துள்ளது. சேலம் நகராட்சி, 1994ம் ஆண்டில் மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது. தமிழகத்தின் ஐந்தாவது பெரிய மாநகரமாக இருந்து வருகிறது. ஆனாலும், அதற்குரிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமை பெறவில்லை. தனிநபர் வருவாய் உயர்விலும் மோசமான நிலையில் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, இந்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுக்கும் வகையில், சேலம் மாநகராட்சி நிர்வாகம் தனிநபர் கழிப்பறை திட்டம் குறித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 கோட்டங்களில் 52 கோட்டங்களில் திறந்தவெள...