Friday, March 13மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சேலம்

சேலம்: முதல் தேர்தலிலேயே பாமகவை கிளீன்போல்டு ஆக்கிய 22 வயது இளம்பெண்!

சேலம்: முதல் தேர்தலிலேயே பாமகவை கிளீன்போல்டு ஆக்கிய 22 வயது இளம்பெண்!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் அருகே, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே பாமகவை வீழ்த்தி, 22 வயதே ஆன இளம்பெண் அபார வெற்றி பெற்றுள்ளார்.   சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை (ஜன. 2) எண்ணப்பட்டன. ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலா ஒரு வாக்கு எண்ணும் மையம் வீதம் மொத்தம் 20 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.   சேலத்தை அடுத்த, அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பதிவான வாக்குகள், மாசிநாயக்கன்பட்டியில் உள்ள வைஸ்யா கல்லூரியில் எண்ணப்பட்டன. அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் சுக்கம்பட்டி, பூவனூர் கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட 3வது வார்டில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு மோகன் மனைவி பிரீத்தி என்பவர் திமுக சார்பில் உதயசூரியன்  சின்னத்தில் போட்டியிட்டார். பிரீத்திக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. 22 வயதே ...
உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடிகளில் ஆளுங்கட்சியினர் அத்துமீறல்கள்!

உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடிகளில் ஆளுங்கட்சியினர் அத்துமீறல்கள்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உள்ளாட்சித் தேர்தல் என்றாலே, ஆட்சியில் இருக்கும் கட்சியினரின் அதிகார வரம்பு மீறல்களுக்கு பஞ்சமிருக்காது. அது, இப்போது நடந்து முடிந்த இரண்டு கட்ட தேர்தல்களிலும் பட்டவர்த்தனமாக எதிரொலித்தன.   வாக்குச்சாவடிக்குள் பரப்புரை:   பொதுவாக, வாக்குச்சாவடி மையங்களில் வேட்பாளர்கள் தங்கள் சின்னத்திற்கு பேச்சு, சைகைகள் உள்ளிட்ட எந்த விதத்திலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதிகளில் சொல்லப்பட்டு உள்ளது. ஆனால், சொல்லி வைத்தாற்போல் எல்லா வாக்குச்சாவடிகளிலுமே அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பு வேட்பாளர்கள், சுயேச்சைகள் என எல்லோருமே வாக்களிக்க வரிசையில் நின்றவர்களிடம் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். உடையாப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிமுக சார்பில் சந்தானராஜ் என்பவர் கட்சி கரை வேட்டியுடன் குண்டர்களுடன் நின்று கொண்டு, வாக்கு சேகரிப்பில் ஈ...
சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு?

சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு?

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில், இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 81.50 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக டிசம்பர் 27, 2019ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்டமாக திங்கள்கிழமை (டிச. 30, 2019) வாக்குப்பதிவு நடந்தது.   சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, மொத்தம் 20 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில், முதல்கட்டமாக 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27ம் தேதி தேர்தல் நடந்தது. அதில், 81.68 சதவீதம் பேர் வாக்களித்து இருந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் எஞ்சியுள்ள ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம், தலைவாசல், வாழப்பாடி...
சேலம்: எப்படி நடந்தது முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல்?

சேலம்: எப்படி நடந்தது முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல்?

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில், டிசம்பர் 27ம் தேதி நடந்த முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 81.68 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு படையெடுத்து வந்தது, வாக்குப்பதிவு அதிகரிக்க முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2016ம் ஆண்டுடன் முடிந்த நிலையிலும், இட ஒதுக்கீடு, வார்டுகள் மறு வரையறை உள்ளிட்ட நீதிமன்ற வழக்குகளால், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது காலதாமதம் ஆனது. மூன்று ஆண்டுகள் பல்வேறு வழக்குகளைக் கடந்து, தற்போது இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது.   முதல்கட்டமாக மாநிலம் மு-ழுவதும் 156 ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 2019ம் தேதி தேர்தல்...
சேலம்: உள்ளாட்சி தேர்தலில் 17216 பேர் வேட்புமனு; இன்று பரிசீலனை!

சேலம்: உள்ளாட்சி தேர்தலில் 17216 பேர் வேட்புமனு; இன்று பரிசீலனை!

சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மொத்தம் 17216 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் மீது இன்று (டிச. 17) பரிசீலனை நடக்கிறது. கடைசி நாளான நேற்று ஒரே நாளில், 8219 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.   தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 27ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 30ம் தேதியும் நடக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை நீங்கலாக எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் இத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, கடந்த 9ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, கடைசி நாளான நேற்று (டிசம்பர் 16, 2019) மட்டும் 29 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 163 பேரும், 20 ஒன்றியங்களில் உள்ள 288 ஊராட...
சேலம்: உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

சேலம்: உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

சேலம், முக்கிய செய்திகள்
ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (டிசம்பர் 9) தொடங்குகிறது. சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நேரடியாக 4299 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.   தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை நீங்கலாக எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல்கட்ட தேர்தல் வரும் 27.12.2019ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 30.12.2019ம் தேதியும் நடக்கிறது. தேர்தல் நடக்கும் நாளன்று, வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை, வரும் 2.1.2020ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.   மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர்...
நிலம் உங்களுக்கு… ஆனால் உரிமை எங்களுக்கு! சதிராடும் சேலம் ஆவின்!!

நிலம் உங்களுக்கு… ஆனால் உரிமை எங்களுக்கு! சதிராடும் சேலம் ஆவின்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
கடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழகத்தில் ஒன்பது முறை ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கிறது. ஆனால், ஆவின் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்து, வீட்டு மனை பெற்றவர்களுக்கு இன்னும் கிரய பத்திரம் வழங்காமல் சேலம் ஆவின் நிறுவனம் வஞ்சித்து வருகிறது.   சேலத்தை அடுத்த தளவாய்ப்பட்டியில், கடந்த நாற்பது ஆண்டுகளாக 'சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட்' எனப்படும் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. தொடக்கத்தில் பால் கொள்முதல், விற்பனையில் மட்டும் கவனம் செலுத்தி வந்த இந்நிறுவனம், சில ஆண்டுகளிலேயே பால் பவுடர் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் ஆலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆலை விரிவாக்கத்திற்காக தளவாய்ப்பட்டி, அதைச் சுற்றியுள்ள சித்தனூர், ரொட்டிக்காரன் வட்டம், பெருமாள் கரடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 25 அப்பாவி குடும்பங்களுக்குச் சொந்தமான நிலங்களை ஆர்ஜி...
ஆத்தூர் அருகே சேகோ ஆலையில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி!

ஆத்தூர் அருகே சேகோ ஆலையில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆத்தூர் அருகே, சேகோ ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொட்டியின் மேல் மூடியை திறந்தபோது விஷ வாயு தாக்கியதில் கூலித்தொழிலாளி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.   சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள கெங்கவல்லி பள்ளக்காட்டைச் சேர்ந்தவர் மாணிக்கம் (65). அப்பகுதியில் சண்முகா சேகோ பேக்டரி என்ற பெயரில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் அம்மம்பாளையம் கண்ணகி நகரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் மணி என்கிற ஜெயச்சந்திரன் (35) கூலி வேலை செய்து வந்தார். அவருடன், பள்ளக்காட்டைச் சேர்ந்த மாது (55), காங்கமுத்து (50), கலியன் (48) ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.   ஜவ்வரிசி, ஸ்டார்ச் தயாரிப்பதற்கான மரவள்ளிக் கிழங்குகளை அரைத்த பின்னர் வெளியேற்றப்படும் கழிவு நீரை தேக்கி வைக்க, 6...
சேலம்: மாநகராட்சி பள்ளி அருகே நுண்ணுயிரி உரக்கிடங்கு! குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஆபத்து!!

சேலம்: மாநகராட்சி பள்ளி அருகே நுண்ணுயிரி உரக்கிடங்கு! குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஆபத்து!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில், மாநகராட்சி துவக்கப்பள்ளி அருகே நுண்ணுயிரி உரக்கிடங்கு தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மேலும், பள்ளி குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய்த்தொற்று ஏற்படும் என்பதோடு, 123 ஆண்டுகால பழமையான பள்ளியும் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் என்றும் கூறுகின்றனர்.   சேலம் நகராட்சி, கடந்த 1994ம் ஆண்டு மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி 91.35 சதுர கி.மீ., பரப்பளவு உடையது. பத்து லட்சம் பேர் மக்கள் தொகையும், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டடங்களும் இருக்கின்றன. நாள்தோறும் சராசரியாக 400 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகின்றன. மாநகரில் சேகரமாகும் குப்பைகள் கிச்சிப்பாளையத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு வந்த நிலையில், கடந்த திமுக ஆட்சியின்போது மாநகராட்சி எல்லைக்கு வெளியே ...
வெல்லத்தில் சலவைத்தூள், உரம் கலப்பு! சேலத்தில் 41 டன் பறிமுதல்!!

வெல்லத்தில் சலவைத்தூள், உரம் கலப்பு! சேலத்தில் 41 டன் பறிமுதல்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உருண்டை வெல்லம் என்றால் அதன் தித்திப்பு சுவை மட்டும்தான் நினைவுக்கு வரும் என்று நினைத்தால் அது உங்களின் அறியாமைதான். ஏனெனில், கரும்புச்சாறை பிழிந்து, காய்ச்சி தயாரிக்கப்படும் வெல்லத்தில் கரும்புச்சாறு மட்டுமின்றி சூப்பர் பாஸ்பேட் உரம், சோடியம் ஹைட்ரோசல்பைடு சலவைத்தூள் ஆகிய வேதிப்பொருள்களும், இன்ன பிற நிறமூட்டிகளும் கலந்திருக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்து இருக்கிறது உணவுப்பாதுகாப்புத்துறை.   சேலத்தில் ஓமலூர், கருப்பூர், தாரமங்கலம், இடைப்பாடி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், சங்ககிரி ஆகிய பகுதிகளில் பரவலாக வெல்லம் உற்பத்தி ஆலைகள் சிறியதும், பெரியதுமாக இயங்கி வருகின்றன. தைப்பொங்கலை குறிவைத்து இப்போது வெல்லம் உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது. பொங்கல் மட்டுமின்றி இனிப்பு பண்டங்கள் தயாரிப்பிலும் முக்கிய பங்கு வகிப்பதால், எல்லா காலத்திலும் உருண்டை வெல்லத்திற்கு மிகப்பெரும...