Thursday, June 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

தமிழ்நாடு

ஜெ., மரணம்: விசாரணை கமிஷன் அமைப்பு – முதல்வர்

ஜெ., மரணம்: விசாரணை கமிஷன் அமைப்பு – முதல்வர்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் அறிவித்துள்ளார். அவர் வாழ்ந்து வந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் இல்லம், அரசு நினைவு இல்லமாக மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2016ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டார். லண்டன் மருத்துவர் ரிச்சர் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இறந்தார். அவர் சிகிச்சையில் இருந்த காலக்கட்டத்தில் சசிகலா குடும்பத்தினர், மருத்துவர்கள் தவிர வெளிநபர்கள் யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அதனால் ...
சிங்கத்துடன் மோத வேண்டாம் கமல்-அமைச்சர் மிரட்டல்

சிங்கத்துடன் மோத வேண்டாம் கமல்-அமைச்சர் மிரட்டல்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை: ஆளுங்கட்சியை தொடர்ந்து விமர்சித்து வருவதால் பொறுமை இழந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சிங்கத்துடன் மோத வேண்டாம் என மிரட்டல் விடுத்துள்ளார். தமிழக அரசின் நடவடிக்கைகளை, நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதன் உச்சகட்டமாக, 'ஊழலுக்கு பொறுப்பேற்று, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாமா?' என, கேள்வி எழுப்பி இருந்தார் கமல்ஹாசன். மேலும், 'என் இலக்கு, தமிழகம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே. என் குரலுக்கு வலு சேர்க்க, யாருக்கு துணிச்சல் உள்ளது; இதற்கு, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் உதவியாக வரலாம். அவர்கள் மழுங்கி போயிருந்தால், வேறு ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும். ஊழலிலிருந்து சுதந்திரம் பெறாத வரை, நாம் இன்னும் அடிமைகளே... புதிய சுதந்திர போராட்டத்திற்கு சூளுரைக்க, துணிவு உள்ளவர்கள் வரலாம்; நிச்சயம் வெல்வோம்,' என்று, பதி...
திமுக தலைவர் கருணாநிதி டிஸ்சார்ஜ்

திமுக தலைவர் கருணாநிதி டிஸ்சார்ஜ்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை: தொண்டையில் பொருத்தப்பட்டு இருந்த செயற்கை உணவுக்குழாய் மாற்றப்பட்டதை அடுத்து, திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்து சற்றுமுன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தி.மு.க., தலைவர் கருணாநிதி, சில மாதங்களுக்கு முன், உடல் நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொண்டையில் துளையிட்டு, 'டிராக்கியோஸ்டமி' சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 7 மாதங்களாக அவர் கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். வீட்டிலிருந்தபடியே அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று (16/07/17) அதிகாலை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி திடீரென்று அனுமதிக்கப்பட்டார். தொண்டையில் உணவு செலுத்துவதற்கான குழாய் மாற்றப்பட்டது. தொடர்ந்து 2 மணி நேர ஓய்வுக்கு பின் கருணாநிதி, கோபாலபுரம் வீட்டிற்கு திரும்பினார். ராசாத்தி , கனிமொழி, தமிழரசு மற்றும் செல...
சொந்த வீடு எல்லோருக்கும் சாத்தியம்!: ‘விஜயஸ்ரீ பில்டர்ஸ்’ டி.ஜே. ராஜேந்திரன்

சொந்த வீடு எல்லோருக்கும் சாத்தியம்!: ‘விஜயஸ்ரீ பில்டர்ஸ்’ டி.ஜே. ராஜேந்திரன்

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள், வெற்றி பிறந்த கதை
-வெற்றி பிறந்த கதை-   சேலத்தின் முக்கிய பிரமுகர்களுள் ஒருவர்... சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் என வெகு சிலரையே சொல்ல முடியும். அந்தப்பட்டியலில் டி.ஜே.ராஜேந்திரன், தவிர்க்க முடியாத ஆளுமை.   மிகச்சமீபத்தில், பழனியில் வனதுர்க்கை, மகிஷாசுரமர்த்தினி கோயிலுக்கு கோடிக்கணக்கில் செலவிட்டு, மண்டபம் கட்டிக்கொடுத்து, கும்பாபிஷேகம் நடத்தி முடித்த அருளாளர். கல்வி உதவி கேட்டு செல்லும் ஏழைகளுக்காக இவருடைய அலுவலக கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்றால் மிகை இல்லை.   தமிழகம் முழுவதும் கல்லூரி, பள்ளி கட்டடங்களை தனது 'விஜயஸ்ரீ கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்', விஜயஸ்ரீ பில்டர்ஸ், விஜயஸ்ரீ புரமோட்டர்ஸ் நிறுவனங்களின் மூலம் கட்டிக்கொடுத்து, சேலத்தின் பெயரை பறைசாற்றி வருகிறார். உழைப்பால் உயர்ந்த டி.ஜே.ராஜேந்திரன் அவர்களை, 'வெற்றி பிறந்த கதை' பகுதிக்காக அவருடைய அலுவலகத்தில் ...
”நான்தான் ஜெயலலிதாவின் கதாசிரியர்!”; மறக்கப்பட்ட படைப்பாளியின் கதை! #Jayalalitha #Rajinikant

”நான்தான் ஜெயலலிதாவின் கதாசிரியர்!”; மறக்கப்பட்ட படைப்பாளியின் கதை! #Jayalalitha #Rajinikant

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை 'ரன் மெஷின்' என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, 'எழுத்து இயந்திரம்' என்றே சொல்லலாம்.   இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக்குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை. இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. 'சூப்பர் ஸ்டார்' ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, 'புவனா ஒரு கேள்விக்குறி' (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.   தவிர, 'பனிமலை' என்ற நாவல், 'என்னதான் முடிவு?' (1965) படமாக ஆக்கம் பெற்றது. 'பத்ரகாளி' (1976), 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' (1977), 'வட்டத்துக்குள் சதுரம்' (1978), 'நதியை தேடிவந்த கடல்' (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன. &...
கதிராமங்கலத்தில் எந்த பிரச்னையும் இல்லையாம்! : ஓ.என்.ஜி.சி. சொல்கிறது

கதிராமங்கலத்தில் எந்த பிரச்னையும் இல்லையாம்! : ஓ.என்.ஜி.சி. சொல்கிறது

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கும்பகோணம்: கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் நிறுவனத்தைக் கண்டித்து அந்தக் கிராம மக்கள் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் இன்று (12/07/17) அளித்த பேட்டி: கதிராமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் ஓஎன்ஜிசியால் எந்த பாதிப்பும் கிடையாது. அங்கு தொடர்ந்து செயல்படும். எண்ணெய் வளம் உள்ள இடங்களில் கிணறு அமைக்கப்பட்டு, கச்சா எண்ணெய் தொடர்ந்து எடுக்கப்படும். மக்களின் அச்சத்தை போக்க விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படும். எண்ணெய் எடுப்பதால் விவசாய நிலங்கள் பாதிப்பு கிடையாது. ஓஎன்ஜிசி மக்களுக்காக செயல்படும் நிறுவனம். சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினார்....
பிரதமரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி:  நீட் விவகாரமா? உள்கட்சி பிரச்னையா?

பிரதமரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி: நீட் விவகாரமா? உள்கட்சி பிரச்னையா?

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டெல்லி : துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ற முதல்வர் பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியை இன்று (11/08/17) சந்தித்தார். அதிமுகவில் தினகரன் நியமனம் செல்லாது என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அரசியலில் பரபரப்பை கிளப்பினார் முதல்வர் பழனிச்சாமி. முதல்வரின் இந்த அறிவிப்பால் தினகரன் அணி கடும் கொதிப்படைந்து உள்ளது. முதல்வரின் அறிவிப்புக்கு, மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தில் பதிலடி கொடுப்போம் என்று தினகரன் அணியினர் பேசி வருகின்றனர். இந்நிலையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்வர் பழனிச்சாமி நேற்று டெல்லி சென்றார். இன்று காலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பழனிச்சாமி பின்னர் நாடாளுமனற் வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும் உடனிருந்தார். இச்ச...
தமிழக மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்குமா?  மருத்துவ படிப்பில் 85% உள் ஒதுக்கீடு: தமிழக அரசின் அப்பீல் தள்ளுபடி

தமிழக மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்குமா? மருத்துவ படிப்பில் 85% உள் ஒதுக்கீடு: தமிழக அரசின் அப்பீல் தள்ளுபடி

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டெல்லி: மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில், 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். முதல் 25 இடங்களைக் கூட பிடிக்காத நிலையில், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவிகிதமும், சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 15 சதவிகித இடமும் ஒதுக்கப்படும் என்ற அரசாணையைக் கடந்த ஜூன்-22 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. தமிழக அரசின் அரசாணையின் படி சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஏறக்குறைய 300 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. எனவே, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்திலும் தஞ்சாவூரை சேர்ந்த தார்...
இயற்கை விவசாயியாக மாறிய இன்ஜினீயர்!

இயற்கை விவசாயியாக மாறிய இன்ஜினீயர்!

சேலம், தன்னம்பிக்கை, முக்கிய செய்திகள், விவசாயம்
வெளிநாட்டு வேலை கனவில் மிதக்கும் இந்திய இளைஞர்கள் மத்தியில், பிரபாகரன் தனித்து தெரிகிறார். அடிப்படையில் சுயத்தை விரும்பக்கூடிய இவர், இன்றொரு வெற்றிகரமான இயற்கை விவசாயி. 'ஜீரோ பட்ஜெட்' எனப்படும் செலவில்லா வேளாண்மை மூலம் கணிசமாக சம்பாதிக்க முடியும் என்பதை நிரூபித்தும் வருகிறார். சேலம் அம்மாபேட்டை மெத்தை தெருவில் வசிக்கிறார் பிரபாகரன், வயது 38. எம்.இ., கணினி பொறியியல் படிப்பை முடித்த கையோடு, அப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காக்னிஸன்ட் (சிடிஎஸ்) மென்பொருள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். பழகுநர் -குழுத்தலைவர் - திட்ட மேலாளர் வரை பதவி உயர்வுபெற்றார். நிறுவனத்தின் சார்பில், அமெரிக்காவுக்கும் செல்கிறார்...அங்கு மூன்று ஆண்டு காலம் பணியாற்றினார். அங்கு பணியாற்றிய காலத்தில் மாதம் ரூ.4.50 லட்சம் ஊதியம் பெற்று வந்த பிரபாகரன், திடீரென்று பணியில் இருந்து விலகினார். அதன்பின் அவர் தொட...
பூவனம்: நீரில் ஆடும் நிலா (கவிதை)

பூவனம்: நீரில் ஆடும் நிலா (கவிதை)

இலக்கியம், திண்டுக்கல், புத்தகம், மதுரை
நீரில் ஆடும் நிலா...!  திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கவிஞர் பெ.அறிவுடைநம்பி எழுதி இருக்கிறார். தமிழக அரசின் கதர் வாரியத்தில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர். பல்வேறு சிற்றிதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன. கவிஞர் மு.மேத்தாவின் முன்னுரையுடன், திண்டுக்கல் அய்யனார் பதிப்பகம் நூலை வெளியிட்டு உள்ளது. நூலில் இருந்து... கீழே விழுவது புவி ஈர்ப்பு மேலே எழுவது விலைவாசி அது நியூட்டன் விதி இது அரசியல் சதி என நையாண்டி செய்கிறார். ஒவ்வொருமுறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரும்போதும் நாட்டில் விலைவாசியும் உயர்ந்து விடுகிறது என்பதை அனுபவ ரீதியாக அறிந்தவர்தானே நம் கவிஞர். மற்றொரு இடத்தில், தீச்சட்டி எடுப்போம் பேருந்தையும் உடைப்போம் இது நேர்த்திக்கடன்! என்று சமீபத்திய தமிழக அரசியல் நிகழ்வுகளை பகடி செய்கிறார். இதைவிட கவிஞரின் இன்னொரு நுட்பமான பதிவு, ந...