Tuesday, October 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

இந்தியா

முதல் டெஸ்ட்: 304 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடியது இந்தியா

முதல் டெஸ்ட்: 304 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடியது இந்தியா

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கொழும்பு: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு ஆரம்பமே அட்டகாசமாக அமைந்துள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. காலேயில் நடைபெற்ற இந்த டெஸ்டில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 600 ரன்களையும், இலங்கை 291 ரன்களையும், இந்தியா 2வது இன்னிங்சில், 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்களையும் எடுத்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 550 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இன்று (29/07/17) 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும், ஷமி மற்றும் உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டையும் வீ...
முதல்வராக வந்தால்தான் வாய் திறப்பாரா ரஜினி?: சீமான் கடும் தாக்கு

முதல்வராக வந்தால்தான் வாய் திறப்பாரா ரஜினி?: சீமான் கடும் தாக்கு

அரசியல், இந்தியா, சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை: அமைதியாகவே இருந்துவிட்டு முதல்வராக வந்தால்தான் வாய் திறப்பேன் என்று சொல்லும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சீமான் அளித்த பேட்டியில், ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில், "ரஜினி போன்றவர்கள் தமிழகத்தில் வந்து பிழைக்கலாம். கட்சியை ஆரம்பித்து ஆட்சியை பிடிக்கக் கூடாது. ரஜினி இங்கு வந்து வேலை செய்ய ஒன்றும் இல்லை. அதனை நாங்களே செய்து கொள்கிறோம். என் தாய் நிலத்தை எங்கள் அளவிற்கு யாராலும் நேசிக்க முடியாது. நாங்கள் நீண்ட காலமாக காயம் பட்டுக் கிடக்கிறோம். என் மொழி சிதைந்து கிடக்கிறது. என் பண்பாடு செத்துப் போய்விட்டது. என் வேளாண்மை செத்துவிட்டது. என் வளங்கள் களவு போய்விட்டன. இதில் இருந்து எப்படியாவது நாங்கள் மீண்டெழத் துடிக்கும் போது, ம...
கோஹ்லி சதம்.. இந்தியா செம பேட்டிங்.. பெரும் தோல்வியை நோக்கி இலங்கை!

கோஹ்லி சதம்.. இந்தியா செம பேட்டிங்.. பெரும் தோல்வியை நோக்கி இலங்கை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
காலே: காலே முதல் டெஸ்ட் போட்டியில் விராத் கோஹ்லியின் அபார ஆட்டத்தால் இலங்கை அணி பெரும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்தியா தனது 2வது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்த நிலையில் இன்று காலை டிக்ளேர் செய்தது. இதையடுத்து 550 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை தற்போது இலங்கை துரத்திக் கொண்டிருக்கிறது. காலே முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 600 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 291 ரன்களுக்கு இழந்தது. இந்தியா இன்று காலை தனது 2வது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களில் டிக்ளேர் செய்தது. இன்றைய ஆட்டத்தின் சிறப்பு கோஹ்லி போட்ட சதம். நேற்று 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் என்ற நிலையில் ஆட்டத்தை முடித்திருந்த இந்தியா இன்று மேலும் 51 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. கோஹ்லி சிறப்பான சதம் போட்ட கையோடு டிக்ளேர் செய்ய...
‘நம்ம ஊரு ஐன்ஸ்டீன்’ ரிபாத் ஷாரூக்! கரூர் முதல் ‘நாசா’ வரை

‘நம்ம ஊரு ஐன்ஸ்டீன்’ ரிபாத் ஷாரூக்! கரூர் முதல் ‘நாசா’ வரை

இந்தியா, உலகம், கல்வி, தமிழ்நாடு, தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரிபாத் ஷாரூக், கையடக்க செயற்கைக்கோளை தயாரித்து, விண்ணில் செலுத்தியதன் மூலம் இன்று உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் ஈர்த்து இருக்கிறார். ரிபாத் ஷாரூக் மற்றும் அவருடைய குழுவினரின் சாதனையைப் பாராட்டி, தமிழக அரசு ரூ.10 லட்சம் பரிசு வழங்கி கவுரவித்திருக்கிறது. வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் ரிபாத். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான 'நாசா' (NASA), புதிய கண்டுபிடிப்புகளுக்கான 'கப்ஸ் இன் ஸ்பேஸ்'(Cubs in Space) என்ற போட்டி ஒன்றை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. மாணவர்கள், தங்களது ஆராய்ச்சி கட்டுரைகள், படைப்புகளை இந்தப் போட்டியில் சமர்ப்பிக்கலாம். இந்த போட்டியை, ஸ்ரீமதி கேசன் என்பவர் செயல் அதிகாரியாக இருக்கும் 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்ற அமைப்புதான் இந்தியாவில் வழிநடத்துகிறது. இதில் பங்கேற்ற ரிபாத் ஷாரூக் குழுவினர், தங்களின் கையடக்க செயற...
‘காவிகளின்’ ஆட்சியில் கலவர பூமியானது இந்தியா! “பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில்தான் அதிக வன்முறையாம்”

‘காவிகளின்’ ஆட்சியில் கலவர பூமியானது இந்தியா! “பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில்தான் அதிக வன்முறையாம்”

அரசியல், இந்தியா, குற்றம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியா முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் இனவாத, வகுப்புவாத போராட்டங்கள், குற்றச் சம்பவங்கள் அதற்கு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் 41 விழுக்காடு அதிகரித்து உள்ளதாக நடுவண் அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். மத்திய உள்விவகாரத்துறை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், கடந்த 2017 ஜூலை 25-ம் தேதியன்று பாராளுமன்றத்தில் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார். அதில் கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற வகுப்புவாத மற்றும் இனவாதக் கலவரங்கள் குறித்த புள்ளிவிவரக் கணக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை கிட்டத்தட்ட மோடி அரசின் மூன்றாண்டு ‘சாதனைகளின்’ ஒப்புதல் வாக்குமூலமாக அமைந்துள்ளது. தேசிய குற்றப் பதிவுத்துறை (NCRB) வெளியிட்டுள்ள தகவல்களின் படியே அந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதாலும், அதை மத்திய அமைச்சரே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாலும் அந்தப் புள்ளிவிவரங்களை மோடியின் பக்தாள்கள் யாரு...
‘நீட்’ தேர்வு: வெளிவராத ஓர் அதிர்ச்சித் தகவல்!

‘நீட்’ தேர்வு: வெளிவராத ஓர் அதிர்ச்சித் தகவல்!

அரசியல், அலோபதி, இந்தியா, உலகம், கல்வி, தமிழ்நாடு, தொழில்நுட்பம், மருத்துவம், முக்கிய செய்திகள்
நீட் தேர்வில் வட மாநிலங்களுக்கு காட்டிய சலுகையை, தமிழ்நாட்டிற்கு மட்டும் ஓரவஞ்சனையுடன் செயல்பட்டுள்ளதாக நடுவண் பா.ஜ.க., அரசு மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில், அத்தேர்வு குறித்த மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன.  “ஒரே தேசம், ஒரே தேர்வு” என்பது நீட் தேர்வு முறைக்கு சொல்லப்பட்ட வியாக்கியானம். பீற்றிக் கொள்ளப்பட்ட “ஒரே தேர்வு” என்பது நடைமுறையில் உள்ள மற்ற தேர்வுகளை ஒழிக்கவில்லை; என்பது ஒருபுறம் இருக்கட்டும். மேற்படி தேர்வுக்கு மாணவர்கள் தங்களைத் தயாரித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் ஏற்றத் தாழ்வாகவே இருக்கின்றது. வசதி படைத்த மாணவர்கள், பல லட்சங்கள் செலவு செய்து சி.பி.எஸ்.இ. பாட திட்டம் கொண்ட ஐந்து நட்சத்திர பள்ளிகளில் படிப்பதோடு, மேலும் சில லட்சங்கள் செலவு செய்து நீட் தேர்வுகளுக்கும் தங்களைத் தயாரித்துக் கொண்டனர். இவர்களோடு, மாநில அரசுகளின் பாட திட்டங்களில் பயின்ற ஏழை மாணவ...
இந்தியா, ஒற்றை நாடு அல்ல! “ஹிந்தியை திணித்தால் தமிழர்கள் ‘வெச்சி’ செய்வார்கள்” – சு.பொ.அகஸ்தியலிங்கம்

இந்தியா, ஒற்றை நாடு அல்ல! “ஹிந்தியை திணித்தால் தமிழர்கள் ‘வெச்சி’ செய்வார்கள்” – சு.பொ.அகஸ்தியலிங்கம்

அரசியல், இந்தியா
தமிழகம் உருவாக்கிய மொழி உணர்வு, இன்றைக்கும் இந்திய அரசியலில் ஓர் ஆக்கப்பூர்வமான பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது. அதில் சில தோல்விகள் இருக்கலாம்; பலகீனம் இருக்கலாம். நான் வரலாற்றை கொச்சைப்படுத்த வில்லை. இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் அடக்கி ஆண்டபோது ஏற்பட்ட சிப்பாய்க்கலகத்தை மடைமாற்றம் செய்வதற்காக, காங்கிரஸ் அமைப்பை உருவாக்கினர். அதை ஒரு 'சேஃப்டி வால்வு' ஆக பயன்படுத்தினர். ஆனால் அந்த காங்கிரஸ் கட்சி, பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான அமைப்பாக மாறியது. 1886ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சி துவக்கப்பட்ட மூன்றாவது மாநாடு, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் நடந்தது. இந்த மாநாட்டிற்கு முன்புவரை காங்கிரசார் ஆங்கிலத்தில்தான் எழுதுவார்கள். பேசுவார்கள். ஆனால் முதன்முறையாக அவரவர் தாய்மொழியில் பேசும் மாநாடாக அமைந்தது சென்னை மாநாடுதான். அந்த மாநாட்டில் மூக்கணாச்சாரி என்ற பொற் கொல்லர், எப்படி சிறுதொழில்கள் நசிந்தது என...