Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கோஹ்லி சதம்.. இந்தியா செம பேட்டிங்.. பெரும் தோல்வியை நோக்கி இலங்கை!

காலே: காலே முதல் டெஸ்ட் போட்டியில் விராத் கோஹ்லியின் அபார ஆட்டத்தால் இலங்கை அணி பெரும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்தியா தனது 2வது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்த நிலையில் இன்று காலை டிக்ளேர் செய்தது. இதையடுத்து 550 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை தற்போது இலங்கை துரத்திக் கொண்டிருக்கிறது.

காலே முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 600 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 291 ரன்களுக்கு இழந்தது. இந்தியா இன்று காலை தனது 2வது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களில் டிக்ளேர் செய்தது.

இன்றைய ஆட்டத்தின் சிறப்பு கோஹ்லி போட்ட சதம். நேற்று 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் என்ற நிலையில் ஆட்டத்தை முடித்திருந்த இந்தியா இன்று மேலும் 51 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. கோஹ்லி சிறப்பான சதம் போட்ட கையோடு டிக்ளேர் செய்யப்பட்டது ஆட்டம்.

இது கோஹ்லியின் 17வது சதமாகும். இதன் மூலம் வெங்சர்க்கரின் சத சாதனையையும் சமன் செய்தார் கோஹ்லி. வெங்சர்க்கர் 116 டெஸ்ட் போட்டிகளில் 17 சதங்களைப் போட்டிருந்தார். அதை தனது 58வது டெஸ்ட் போட்டியில் சமன் செய்துள்ளார் கோஹ்லி. தற்போது இலங்கை அணி கடும் இலக்கை துரத்திக் கொண்டிருக்கிறது… சீரான இடைவெளியில் விக்கெட்களைப் பறிகொடுத்தபடி.