Wednesday, January 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சினிமா

திரை இசையில் வள்ளுவம்!: வரவு எட்டணா செலவு பத்தணா…: (தொடர்)

திரை இசையில் வள்ளுவம்!: வரவு எட்டணா செலவு பத்தணா…: (தொடர்)

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள்
தேனினும் இனிய குறள் அமுதத்தை, திரை இசையில் நயம்பட, எல்லோரையும் ஈர்க்கும்படி செய்வதன் நம் இளங்கம்பன் கவியரசர் கண்ணதாசன். 'குந்தித் தின்றால் குன்றும் கரையும்' என்பது முதுமொழி. அதுபோல், 'ஆடம்பரம், அழிவையே தரும்' என்பது சான்றோர் அனுபவ மொழி.     வெட்டி பந்தா குடும்பத்திற்கு ஆகாது என்பதை நகைச்சுவையுடன், தனக்கே உரிய மேதைமைத் தனத்துடன் 'பாமா விஜயம்' படத்தில் சொல்லி இருப்பார் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர். 24.2.1967ல் வெளியான 'பாமா விஜயம்' படத்தின் ஒரு வரி கதை ரொம்பவே எளிமையானது.     ஊரே கொண்டாடும் திரைப்பட நடிகை பாமா, அவருடைய குடியிருப்பு அருகில் கூட்டுக்குடும்பமாக வாழும் தனது ரசிகர்களின் வீட்டிற்கு ஒரு நாள் விஜயம் செய்கிறாள். அவளுடைய வருகைக்காக, நடுத்தர வரக்கத்தைச் சேர்ந்த அந்த ரசிகர்கள், சக்திக்கு மீறி கடனை உடனை வாங்கி விலை உயர்ந்த சோஃபா, கட்டில் ம...
இதுதான் ‘மெர்சல்’ படத்தின் கதையா?; அட்லி அதிர்ச்சி

இதுதான் ‘மெர்சல்’ படத்தின் கதையா?; அட்லி அதிர்ச்சி

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இயக்குநர்கள் சங்கர், முருகதாஸ், மணிரத்னம் போனற பிரபல இயக்குநர்கள் தங்கள் படத்தின் கதை திரைக்கு வரும் வரை எள்ளளவு கசிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அதேபோல், படமாக்கும் காட்சிகள்கூட வெளியாகக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு தளங்களில் நடிகர்கள் உள்பட ஊழியர்கள் மொபைல் போன் பயன்படுத்தவும் தடை விதிப்பார்கள். இப்போது ஏறக்குறைய எல்லா இயக்குநர்களுமே இதேபோன்ற கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், படு ரகசியமாக வைக்கப்பட்டிருந்த விஜயின் மெர்சல் படத்தின் கதை கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜயின் 61வது படமாக பிரம்மாண்ட பொருட்செயலரில் தயாராகி இருக்கிறது மெர்சல். முதல்முறையாக இந்தப் படத்தில் விஜய் மூன்று பாத்திரங்களில் நடித்துள்ளார். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். வடிவேலுவும் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமை...
ஆசிரியர்களுக்கு குரல் கொடுக்கும் கமல்!

ஆசிரியர்களுக்கு குரல் கொடுக்கும் கமல்!

அரசியல், சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆசிரியர்கள் பணிக்கு வராமல், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாட்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படாது எனில், ரிசார்ட்டில் தங்கியுள்ள குதிரைபேர எம்எல்ஏக்களுக்கு மட்டும் சம்பளம் கொடுக்கலாமா? என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக உள்கட்சி பூசல்களால் தமிழக மக்கள் நலன் பாதிக்கப்படுவது குறித்தும், ஆளுங்கட்சியின் ஊழல்கள் குறித்தும் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது, நல்லதொரு மாற்றம் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார். 'டுவிட்டர் அரசியல்வாதி' என்று ஆளும் தரப்பும், பாஜகவும் கமல்ஹாசனை கிண்டல் அடித்தாலும், 'டுவிட்டரும் போராட்ட களம்தான்' என்று சளைக்காமல் பதிலடி கொடுத்தார். சமகால அரசியல் நகர்வுகள், சமூக பிரச்னைகள் குறித்து அவர் சமூகவலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டு வருவது, அ...
மக்கள் முட்டாள்களா?: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு!

மக்கள் முட்டாள்களா?: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு!

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிக்பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேறியதில் இருந்து அந்த நிகழ்ச்சி மீதான சுவாரஸ்யங்கள் குறைந்து விட்டது. மீண்டும் டிஆர்பி-ஐ எகிற வைக்கும் விதமாக காஜல், சுஜா, ஹரீஷ் போன்றவர்களை அழைத்து வந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி என்னவோ களைகட்டவில்லை. தினமும் காலையில் ஒலிபரப்பப்படும் 'வேக்-அப்' பாடலுக்கு ஆடும் ஓவியாவின் நடனத்தை ரசிகர்கள ரொம்பவே இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது இருப்பவர்களில் பிந்து மாதவி, 'வேக்-அப் பாடலுக்கு ஆடினாலும், ஓவியாவின் எனர்ஜி அவரிடம் மிஸ்ஸிங். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக மீண்டும் ஹாரத்தி, ஜூலியானாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. நேற்று (27/8/17), நிகழ்ச்சியின் இடையே ஜூலியானா, ஹாரத்தி, காயத்ரி, பரணி 'டிரிக்கர்' சக்தி ஆகியோர் அழைக்கப்பட்டு இருந்தனர். பரணியைத் தவிர, மற்றவர்கள் மேடைக்கு வந்தபோது அரங்கில் இருந்த பார்வைய...
ரஜினி: ‘மேக்கிங் ஆஃப் 2.0’ ரிலீஸ்!

ரஜினி: ‘மேக்கிங் ஆஃப் 2.0’ ரிலீஸ்!

சினிமா, முக்கிய செய்திகள்
ரஜினி நடிப்பில், சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படமாக்கப்பட்ட விதம் குறித்த, 'மேக்கிங் ஆஃப் 2.0' வீடியோ இன்று (25/8/17) மாலை வெளியிடப்பட்டு உள்ளது. 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமாக '2.0' படம் தயாராகி வருகிறது. ஏற்கனவே ரஜினியை வைத்து முழு படப்பிடிப்பும் முடித்துவிட்ட நிலையில், தற்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஏமி ஜாக்ஸன் நாயகியாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இந்தப்படம் மூலம் தமிழில் களம் இறங்குகிறார். இசை, ஏ.ஆர்.ரஹ்மான். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். லைகா நிறுவனம் இந்தப்படத்தை 15 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. சுமார் 450 கோடி ரூபாயில் படம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. 3டி தொழில்நுட்பத்தில் படம் வெளியாகிறது. இந்தப்படம் தொடர்பான முக்கிய தகவலை வெளியிடுவதாக நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் இயக்குநர் சங்கர் தெரிவ...
‘விவேகம்’ விமர்சனம் – ‘மாஸ் லெவல்’!

‘விவேகம்’ விமர்சனம் – ‘மாஸ் லெவல்’!

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெரும் எதிர்பார்ப்புகளுடன் இன்று (24/8/17) வெளியாகி இருக்கிறது 'விவேகம்'. நடிப்பு: அஜித்குமார், காஜல் அகர்வால், அக்ஷராஹாஸன், விவேக் ஓபராய், கருணாகரன். இசை: அனிருத். இயக்கம்: 'சிறுத்தை' சிவா. சர்வதேச உளவுப்பிரிவு போலீஸ் அதிகாரியாக வருகிறார் ஏகே என்ற அஜெய்குமார் என்ற அஜித்குமார். வழக்கம்போல் அவருடைய குழுவில் நான்கு போலீஸ் அதிகாரிகள் வருகின்றனர். அவர்களில் ஒருவர் ஆர்யன் என்ற விவேக் ஓபராய். இந்தியாவில் சர்வதேச தீவிரவாதிகள் மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த அணு குண்டுகளை வைத்து விடுகின்றனர். அவற்றில் ஒரு குண்டு வெடித்து, நூற்றுக்கணக்கானோர் மரணமடைகின்றனர். மீதம் உள்ள இரண்டு குண்டுகளையும் வெற்றிகரமாக அகற்றினாரா? கர்ப்பிணியாக இருக்கும் தன் காதல் மனைவி காஜல் அகர்வாலை வில்லன் கும்பலிடம் இருந்து காப்பாற்றினாரா? என்பதை விவரிக்கிறது, 'விவேகம்'. இதன் பிறகு, இந்தியாவில் இருந்து செர்பியா நாட்டிற்கு...
ரஜினி, அஜீத்திற்கு சமூக அக்கறை இல்லை – பொன்னுசாமி

ரஜினி, அஜீத்திற்கு சமூக அக்கறை இல்லை – பொன்னுசாமி

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ரஜினி, அஜித்திற்கு சமூக அக்கறையே இல்லை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பால் உற்பத்தியில் இந்தியா முன்னணிக்கு வந்துவிட்டாலும், இன்னும் அனைத்து மக்களுக்கும் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. 20 விழுக்காடு வளரிளம் பெண் குழந்தைளுக்கு பாலில் உள்ள கால்சியம் போதிய அளவில் கிடைக்கவில்லை என்கிறது ஓர் ஆய்வு.   அதேபோல் வயதான, கர்ப்பிணி பெண்களுக்கும் கால்சியம் பற்றாக்குறை இருப்பது தெரியவந்துள்ளது. பெண் குழந்தைகள் போதிய அளவுக்கு பால் அல்லது பால் பொருட்களை எடுத்துக் கொள்வதில்லை என்கிறார்கள் உணவியல் ஆய்வாளர்கள். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தமிழகத்திலோ சினிமா ரசிகர்கள் தங்களின் ஆதர்ஷ நடிகர்களின் கட்-அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்யும் மூடத்தனமான போக்கு இன்றும் நிலவுகிறது. இது போன்ற செயல்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்...
இம்சை அரசன் 24-ம் புலிகேசி பராக் பராக்!

இம்சை அரசன் 24-ம் புலிகேசி பராக் பராக்!

சினிமா, முக்கிய செய்திகள்
தமிழ் திரையுலகில் காமெடி கதாபாத்திரங்களில் முடிசூடா மன்னனாகத் திகழந்த வடிவேலுவுக்கு, கடந்த 2011ம் ஆண்டுக்குப் பிறகு சினிமா மார்க்கெட் இறங்குமுகம்தான். 2011ம் ஆண்டில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக அவர் தேர்தல் பிரச்சாரம் செய்ததால் இந்த சரிவு ஏற்பட்டது. சந்தானம், சூரி, சதீஸ், ரோபோ சங்கர் போன்றோர்கள் வடிவேலுவின் வெற்றிடத்தை நிரப்ப முயற்சித்தாலும், மக்களிடம் அவர்களின் காமெடி எடுபடவில்லை. கடந்த ஓராண்டாக வடிவேலு மீண்டும் அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டாலும், கடைசியாக அவர் கதாநாயகனாக நடித்த தெனாலிராமன், எலி படங்கள் சரியாக போகவில்லை. விஷாலுடன் இணைந்து நடித்த காமெடி கதாபாத்திரமும் எடுபடவில்லை. இந்நிலையில் வடிவேலுக்கு சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம், சரிந்த தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் வேலைகளில் இறங்கியுள...
அஜித்தின் ‘விவேகம்’ பைசா வசூல் ஆகுமா?

அஜித்தின் ‘விவேகம்’ பைசா வசூல் ஆகுமா?

சினிமா, முக்கிய செய்திகள்
ரசிகர்களால் அன்புடன் ‘தல’ என்று அழைக்கப்படும் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படம், வரும் 24ம் தேதி ரிலீஸ் ஆகிறது. திரைக்கு வருவதற்கு முன்பே திரையரங்க விநியோக உரிமை, சாட்டிலைட் உரிமம், வெளிநாட்டு உரிமம் மூலம் ரூ.120 கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தின் சினிமா வாழ்வில், இந்தப்படம்தான் மிக அதிக பொருட்செலவில் தயாராகி உள்ளது. அதுவும் போட்ட பட்ஜெட்டுக்கு மேல். பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடத்தப்பட்டு உள்ளது. காஜல் அகர்வால், கதாநாயகியாக நடித்துள்ளார். கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் இந்தப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். அவருடைய கேரக்டர் இதுவரை சஸ்பென்சாக வைக்கப்பட்டு உள்ளது. பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயும் நடித்துள்ளார். வணிக ரீதியான அம்சங்கள் இத்தனை இருந்தாலும், அஜித்தின் முந்தைய ‘வேதாளம்’, ‘வீரம்’ ஆகிய படங்கள் திரையரங்க உரிமையாளர்...
நடிகர் தனுஷ் வலையில் ரஜினி?

நடிகர் தனுஷ் வலையில் ரஜினி?

சினிமா, முக்கிய செய்திகள்
திரைத்துறையில் கால் பதித்த நாள் முதல் தொடர்ந்து மூத்த இயக்குநர்களிடம் மட்டுமே பணியாற்றி வந்த 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், 'கபாலி' படம் மூலமாக இளம் இயக்குநர்களின் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறார். கடந்த 1999-ல் வெளியான 'படையப்பா', பெரிய அளவில் பேசப்பட்டதைத் தொடர்ந்து, 'முத்து', 'லிங்கா' வரை ரஜினியின் ஆஸ்தான இயக்குநராக, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இடம் பெற்றிருந்தார். அதற்கு முன்பு, ரஜினி - தீபிகா படுகோன் நடிப்பில் 'ராணா' படத்தை இயக்கும் வாய்ப்பையும் கே.எஸ்.ரவிக்குமாரே பெற்றிருந்தார். ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கத்தில் வெளியான 'கோச்சடையான்' அனிமேஷன் படத்தில்கூட, திரைக்கதை உள்ளிட்ட பணிகளை கே.எஸ்.ரவிக்குமாரே ஏற்றிருந்தார். 'சிவாஜி', 'எந்திரன்' என பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் உடனும், 'சந்திரமுகி', 'குசேலன்' என இயக்குநர் பி.வாசுவுடனும் பணியாற்றி வந்தார் ரஜினி. இப்போது, இயக...