Friday, March 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

கல்லீரல் பாதிப்பு: பிரபல நடிகர் மரணம்

கல்லீரல் பாதிப்பு: பிரபல நடிகர் மரணம்

சினிமா, முக்கிய செய்திகள்
கல்லீரல் பாதிப்பால் பிரபல நகைச்சுவை நடிகர் 'அல்வா' வாசு நேற்று (17/08/17) காலமானார். தமிழின் முன்னணி நகைச்சுவை, குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான அல்வா வாசு, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கல்லீரல் அழற்சி நோய் ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் தெரிய வந்தது. கடந்த சில மாதங்களாக அவர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய உடல்நலம் மிகவும் மோசமடைந்ததை அடுத்து, கடந்த இரு நாட்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று காலமானார். நடிகர் சங்கm சார்பில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்வா வாசுவுக்கு அமுதா என்ற மனைவியும், கிருஷ்ண ஜெயந்திகா என்ற மகளும் உள்ளனர். மறைந்த இயக்குநரும், நடிகருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, பின்னர் நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் மு...
கட்டாயத் தேர்ச்சி ரத்து : மீண்டும் அடிமை வம்சத்தை உருவாக்கும்!

கட்டாயத் தேர்ச்சி ரத்து : மீண்டும் அடிமை வம்சத்தை உருவாக்கும்!

இந்தியா, முக்கிய செய்திகள்
பள்ளிகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறை ரத்து செய்யப்பட்டால், மீண்டும் அடிமை வம்சத்தை உருவாக்கும் என்று கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்டு வரும் கட்டாயத் தேர்ச்சி நடைமுறையானது, அடுத்தக் கல்வி ஆண்டில் இருந்து ரத்து செய்ய மத்திய அமைச்சரவை கொள்கை முடிவெடுத்துள்ளது. அத்துடன், சர்வதேச தரத்தில் 20 கல்வி நிலையங்கள் தொடங்கப்படும் என்றும் தீர்மானித்துள்ளது. 24 மாநிலங்கள் இதற்கு இசைவும் தெரிவித்துள்ளன. மத்திய அரசின் இந்த முடிவால், விளிம்பு நிலை மக்களுடைய பிள்ளைகளின் கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் அபாயம் உள்ளதாக கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதேநேரம், ஆசிரியர்கள் தரப்பில் கணிசமான வரவேற்பும் பெற்றுள்ளது. இந்திய அரசு, 'காட்' ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போதே இனி, இந்தியாவில் கல்வி என்பது 100% வணிகமாகிவிடும் என்று கல்வியாளர்கள் எச்சரித்தனர...
பாஜக: ஒழுங்கீன அரசியலின் குறியீடு!

பாஜக: ஒழுங்கீன அரசியலின் குறியீடு!

அரசியல், முக்கிய செய்திகள்
ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே வரி என்ற கொள்கைகளின் நீட்சியாக நாட்டில் இனி ஒரே கட்சிதான் என்கிற சித்தாந்தத்தை நிருவப் பார்க்கிறது பாரதிய ஜனதா கட்சி. அதற்காகவே, தாங்கள் காலூன்றாத மாநிலங்களில் ஆளும் கட்சிகளை பிளவு படுத்துவதற்கான சகுனி ஆட்டத்தில் மும்முரமாக காய் நகர்த்துகிறது. ராஜ்யசபையில் அக்கட்சிக்கு மெஜாரிட்டி இல்லாததால், இத்தகைய கொல்லைப்புற வேலைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறது. அண்மையில், பீஹாரில் நடந்த அரசியல் நகர்வுகள் கொஞ்சம்கூட அரசியல் நாகரீகத்திற்கு ஒவ்வாதது. ஆதாயத்திற்காக அரசியல் கட்சிகள் எந்தளவுக்கு தரம் தாழ முடியும் என்பதற்கு தமிழ்நாடுதான் சிறந்த உதாரணம் என்று நினைத்திருந்தோம். அப்படி அல்ல. பீஹார், தமிழகத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டது. மன்மோகன்சிங் அமைச்சரவையில் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ரயில்வே மந்திரியாக இருந்தபோது உலகத்தரம் வாய்ந்த ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பித...
”இணைப்பு சாத்தியமில்லை”- தங்க தமிழ்ச்செல்வன்

”இணைப்பு சாத்தியமில்லை”- தங்க தமிழ்ச்செல்வன்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜெயலலிதா மரணம் குறித்து, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை  ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுகுறித்து கருத்து கூறிய ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ தான் விசாரிக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணையை ஏற்க முடியாது என்று கூறினார். இதுகுறித்து கருத்து கூறிய டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ, ''கே.பி.முனுசாமி, தமிழ்நாட்டு போலீசாரையோ, ஓய்வுபெற்ற நீதிபதியையோ நம்ப மாட்டாரா? அவருக்கு மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ தான் விசாரிக்க வேண்டுமா? ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒருபோதும் இணையவே இணையாது. அதற்கான சாத்தியமே இல்லை,'' என்றார்....
சிபிஐ விசாரணை தேவை – முனுசாமி அடம்

சிபிஐ விசாரணை தேவை – முனுசாமி அடம்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை அணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை அறிவித்துள்ள நிலையில், சிபிஐ விசாரணைதான் வேண்டும் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கே.பி.முனுசாமி கூறுகையில், ''ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணையை ஏற்க முடியாது. சிபிஐ தான் விசாரிக்க வேண்டும்,'' என்றார். காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், ''பாஜகவின் தூண்டுதலின்பேரிலும், ஓபிஎஸ் அணியுடன் இணைவதற்காகவும்தான் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக கருதுகிறேன். வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். அந்த சொத்து யாரிடம் இருக்கிறது? அவரிடம் ஒப்புதல் பெறப்பட்டதா என்பதெல்லாம் தெரியவில்லை,'' என்றார்....
ஜெ., மரணம்: விசாரணை கமிஷன் அமைப்பு – முதல்வர்

ஜெ., மரணம்: விசாரணை கமிஷன் அமைப்பு – முதல்வர்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் அறிவித்துள்ளார். அவர் வாழ்ந்து வந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் இல்லம், அரசு நினைவு இல்லமாக மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2016ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டார். லண்டன் மருத்துவர் ரிச்சர் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இறந்தார். அவர் சிகிச்சையில் இருந்த காலக்கட்டத்தில் சசிகலா குடும்பத்தினர், மருத்துவர்கள் தவிர வெளிநபர்கள் யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அதனால் ...
நோயாய் நெஞ்சினில் நீ நுழைந்தாய்…! திரை இசையில் வள்ளுவம் (தொடர்)

நோயாய் நெஞ்சினில் நீ நுழைந்தாய்…! திரை இசையில் வள்ளுவம் (தொடர்)

இலக்கியம், சினிமா, முக்கிய செய்திகள்
திரை இசையில் வள்ளுவம்: (தொடர் - 8/17) நோயாய்  நெஞ்சினில் நீ நுழைந்தாய் மருந்தை ஏனடி தர மறந்தாய்...   கடந்த இரண்டு தொடர்களிலும் 'ஊக்கம் உடைமை', 'மெய்ப்பொருள் அறிதல்' என அடுத்தடுத்து அறிவுரை மழையாகி விட்டதே என்று வாசகர்கள் சிலர் நினைத்திருக்கக் கூடும். அதனால்தான் இந்த முறை, நோயும் நோய் தீர்க்கும் மருந்தையும் பாடுபொருளாக எடுத்துக் கொண்டோம்.   'என்னது மருத்துவக் கட்டுரையா?. அதற்குத்தான் 'நலமறிய ஆவல்' என்ற பகுதி இருக்கிறதே' என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. பதற்றம் கொள்ள வேண்டாம். நான் குறிப்பிடும், நோய் என்பது நோய் அல்ல; மருந்து என்பதும் மருந்து அல்ல. ஆனால், அந்த நோயும் மருந்தும் ஆதாம் ஏவாள் காலத்து அரதப்பழசு.   சரி. பீடிகை போடாமல் விஷயத்திற்கு வருகிறேன். 'மகாதேவி' (1957) படத்தில் ஒரு சிறுவனின் காலில் பாம்பு கடித்து விடும். எந்தப் பாம்பு கடித...
நடிகர் ‘அல்வா’ வாசு கவலைக்கிடம்

நடிகர் ‘அல்வா’ வாசு கவலைக்கிடம்

சினிமா, முக்கிய செய்திகள்
தமிழின் முன்னணி நகைச்சுவை, குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான அல்வா வாசு உடல்நலம் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. மறைந்த இயக்குநரும், நடிகருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, பின்னர் நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் முத்திரை பதித்தவர் அல்வா வாசு. அமைதிப்படை, சிவாஜி, கருப்பசாமி குத்தகைதாரர், எல்லாம் அவன் செயல் உள்பட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, நடிகர் வடிவேலுவின் காமெடி கூட்டணியில் இணைந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களிடம் பெரிய அளவில் அல்வா வாசுவை கொண்டுபோய் சேர்த்தன. கடந்த சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பால் சிகிச்சையில் இருந்து வந்த அவர், படங்களில் நடிப்பதையும் குறைத்துக்கொண்டார். சமீபத்தில் அவர் நடித்த சில படங்களிலும் உடல் அளவில் மெலிந்து காணப்பட்டார். கல்லீரல் பிரச்னைக்காக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ஆறு மாதங்களுக்கும்...
காஞ்சி பட்டுச்சேலையிடம் மனதை தொலைத்த அமெரிக்க பெண் தூதர்

காஞ்சி பட்டுச்சேலையிடம் மனதை தொலைத்த அமெரிக்க பெண் தூதர்

இந்தியா, முக்கிய செய்திகள்
புதுடில்லி : மேற்கத்திய கலாச்சார மோகம் கொண்டு அலையும் இந்தியர்கள் மத்தியில், இந்தியாவுக்கான, அமெரிக்க பெண் தூதர், மேரிகே கார்ல்ஸன், காஞ்சிபுரம் பட்டுச்சேலை அணிந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சுதந்திர தினமான நேற்று, இந்தியாவுக்கான, அமெரிக்க துாதர், மேரிகே கார்ல்ஸன், காஞ்சிபுரம் பட்டு உடுத்தி எடுத்த புகைப்படத்தை, 'டுவிட்டர்' சமூகவலைதளத்தில் வெளியிட்டு, வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான அமெரிக்கா பெண் தூதர் மேரிகே கார்ல்ஸன். இவர், இந்திய கலாசாரத்தில் மிகுந்த பற்று கொண்டவர். இந்திய சுதந்திர தினத்தில், பாரம்பரிய புடவை உடுத்த விரும்பிய அவர், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், அது தொடர்பான பதிவை, ஒரு மாதத்துக்கு முன் வெளியிட்டார். அதில், தனக்கு பொருத்தமான உடையை தேர்ந்தெடுத்து சொல்லும்படி, இணையவாசிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். 'நெட்டிசன்'களின் ஆலோசனைப்படி, காஞ்சிபுரம் பட்டு புட...
சிங்கத்துடன் மோத வேண்டாம் கமல்-அமைச்சர் மிரட்டல்

சிங்கத்துடன் மோத வேண்டாம் கமல்-அமைச்சர் மிரட்டல்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை: ஆளுங்கட்சியை தொடர்ந்து விமர்சித்து வருவதால் பொறுமை இழந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சிங்கத்துடன் மோத வேண்டாம் என மிரட்டல் விடுத்துள்ளார். தமிழக அரசின் நடவடிக்கைகளை, நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதன் உச்சகட்டமாக, 'ஊழலுக்கு பொறுப்பேற்று, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாமா?' என, கேள்வி எழுப்பி இருந்தார் கமல்ஹாசன். மேலும், 'என் இலக்கு, தமிழகம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே. என் குரலுக்கு வலு சேர்க்க, யாருக்கு துணிச்சல் உள்ளது; இதற்கு, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் உதவியாக வரலாம். அவர்கள் மழுங்கி போயிருந்தால், வேறு ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும். ஊழலிலிருந்து சுதந்திரம் பெறாத வரை, நாம் இன்னும் அடிமைகளே... புதிய சுதந்திர போராட்டத்திற்கு சூளுரைக்க, துணிவு உள்ளவர்கள் வரலாம்; நிச்சயம் வெல்வோம்,' என்று, பதி...