Wednesday, November 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

சென்னையில் சுடுகாட்டில் படுத்துக்கிடந்தேன்!:  சீமானின் அறியப்படாத பக்கங்கள்

சென்னையில் சுடுகாட்டில் படுத்துக்கிடந்தேன்!: சீமானின் அறியப்படாத பக்கங்கள்

சினிமா, சிவகங்கை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கனல் தெறிக்கும் உரை வீச்சும், அனல் பறக்கும் அரசியலுமாகவே திரைப்பட இயக்குநரும், 'நாம் தமிழர்' கட்சித் தலைவருமான சீமானை அறிந்து வைத்திருக்கிறார்கள் வெகுசன மக்கள். அவருடைய தனிப்பட்ட வாழ்வின் அறியப்படாத நிகழ்வுகளையும், நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி, தனியார் தொலைக்காட்சியில் இன்று (மார்ச் 18, 2018) ஒளிபரப்பானது. இயற்கை வெளியில் நடந்து கொண்டே உரையாடுவது போன்ற நிகழ்ச்சியின் வடிவம் என்பது, பல ஆண்டுகளாக ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் பின்பற்றி வரும் நடைமுறைதான். அப்படித்தான் இருந்தது சீமான் உடனான சந்திப்பும். சீமானின் மேடைப் பேச்சுகளைத் தொடர்ந்து அவதானித்து வருபவர்களுக்கு, அவர் சமகால உலக அரசியல் போக்கை உடனுக்குடன் 'அப்டேட்' செய்து கொள்ளக்கூடியவர் என்பது நன்றாகவே தெரியும். ஆழமான புத்தக வாசிப்பாளர் என்பதையும் அறியலாம். அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் சீமானின் இளம் பிராய வாழ...
அமமுகவில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்; பின்னணி என்ன?

அமமுகவில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்; பின்னணி என்ன?

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டிடிவி தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகியதன் பின்னணியில் கட்சிப் பெயர் மீதான அதிருப்தி மட்டுமின்றி, மேலும் சில காரணங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு எதிராக டிடிவி தினகரன் கம்பு சுழற்றத் தொடங்கியது முதலே, அவருக்காக மேடைதோறும் முழங்கியவர் நாஞ்சில் சம்பத். தினகரன் அணியில் கொள்கை பரப்புத் துணைச்செயலாளராகவும் இருந்து வந்தார். மதிமுகவில் இருந்து பிரிந்த அவர், கடந்த 2012ல் அதிமுகவில் ஐக்கியமானார். அப்போது ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட அதே பதவியில்தான் டிடிவி தினகரனும் அமர்த்தி இருந்தார். அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றம் டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும், அவர் கேட்டிருக்கும் கட்சிப் பெயர்களில் ஒன்றை வழங்கலாம் என்றும் தீர்ப்பு அளித்தது. இதை வரவேற்ற நாஞ்...
ஆந்திரா: பாஜகவின் மோடி மஸ்தான் விளையாட்டு ஆரம்பம்!#NoConfidenceMotion

ஆந்திரா: பாஜகவின் மோடி மஸ்தான் விளையாட்டு ஆரம்பம்!#NoConfidenceMotion

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
ஆந்திரா மாநிலத்தில் தெலுங்குதேசம் கட்சிக்கு நாலாபுறமும் முட்டுக்கட்டைகள் பெருகி வருவதை மிக தாமதமாக உணர்ந்து கொண்ட பிறகே, சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சரவையில் இருந்தும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் வெளியேறியிருக்கிறார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலின்போது பாஜகவின் புதிய பங்காளியாக இணைந்து கொண்ட சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, இன்று மத்திய பாஜகவுடன் உடனான உறவை முறித்துக் கொண்டுள்ளது. அரசியல் சதுரங்கத்தில் ஒவ்வொரு காய் நகர்த்தலின் பின்னணியிலும் வாக்கு வங்கி, சுயலாபமே மேலோங்கி இருக்கும். மக்கள் நலன், மாநில சுயாட்சி என்பதெல்லாம் அதற்கான சப்பைக்கட்டு வாதமே. மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறியதற்கு இரண்டு காரணங்களை முன்வைக்கிறது தெலுங்கு தேசம். ஒன்று, ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படாதது; இன்னொன்று,...
சிபிஎஸ்இ பிளஸ்2 வினாத்தாள் முன்கூட்டியே வாட்ஸ்அப்-ல் வெளியானது!;  மறுதேர்வு கோரும் பெற்றோர்#CBSE

சிபிஎஸ்இ பிளஸ்2 வினாத்தாள் முன்கூட்டியே வாட்ஸ்அப்-ல் வெளியானது!; மறுதேர்வு கோரும் பெற்றோர்#CBSE

இந்தியா, கல்வி, முக்கிய செய்திகள்
இன்று (மார்ச் 15, 2018) நடந்த சிபிஎஸ்இ பிளஸ்2 மாணவர்களுக்கான கணக்குப்பதிவியல் (அக்கவுண்டன்சி) தேர்வு வினாத்தாள் நேற்று மாலையில் முன்கூட்டியே வாட்ஸ்-அப் செயலியில் வெளியானதால் மாணவர்களும், பெற்றோர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 5ம் தேதி முதல் நாடு முழுவதும் தேர்வு நடந்து வருகிறது. பிளஸ்2 மாணவர்களுக்கு இன்று கணக்குப்பதிவியல் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வுக்கான வினாத்தாள் நேற்று மாலையிலேயே வாட்ஸ்-அப் செயலியில் வெளியானதாகக் கூறப்படுகிறது. வினாத்தாளின் சில பகுதிகள் மட்டும் வெளியாகி இருந்தன. பொருத்துக விடையளிக்கும் வினாவிற்கான விடைகள் தரப்பட்டிருந்தன. ஒருவேளை, விஷமிகள் யாராவது போலியாக அவ்வாறு பரப்பியிருக்கலாம் என மாணவர்கள் கருதினர். எனினும், தேர்வுக்காக தயாராகி வருவதால் வாட்ஸ் அப்-ல் ...
தமிழக பட்ஜெட்: விவசாயிகளுக்கு ரூ.8000 கோடி பயிர்க்கடன்;  3 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

தமிழக பட்ஜெட்: விவசாயிகளுக்கு ரூ.8000 கோடி பயிர்க்கடன்; 3 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விவசாயம்
வரும் 2018-19ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு, ரூ.8000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என்றும், 3 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்றும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.   திமுக வெளிநடப்பு:   2018&2019ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15, 2018) தாக்கல் செய்தார். காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசைக் கண்டித்தும், இது தொடர்பாக சந்தித்துப் பேச தமிழக கட்சிகளுக்கு பிரதமர் நேரம் ஒதுக்காததைக் கண்டித்தும் திமுக எம்எல்ஏக்கள் இன்று கருப்பு சீருடையில் வந்திருந்தனர். ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கியதுமே, திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவையி...
ஸ்டீபன் ஹாக்கிங் எனும் பின்நவீன பெரியார்!; #StephenHawking #Periyar

ஸ்டீபன் ஹாக்கிங் எனும் பின்நவீன பெரியார்!; #StephenHawking #Periyar

ஈரோடு, உலகம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
- சிறப்புக் கட்டுரை -   உலகம் கொண்டாடிய இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், இன்று (மார்ச் 14, 2018) தனது 76வது வயதில் மரணம் அடைந்தார். கடவுள், மத நம்பிக்கைகளுக்கு எதிரான கோட்பாடுகளில் பெரியார் சிந்தனைகளுடன், ஸ்டீபன் ஹாக்கிங் பல இடங்களில் ஒத்துப்போகிறார்.   ரகசியங்கள் இல்லை:   ஸ்டீபன் ஹாக்கிங் என்ற விஞ்ஞானி இந்த சமூகத்திற்கு தன்னையே உதாரண மனிதராக நிரூபித்துக் காட்டிச்சென்றிருக்கிறார். அவருக்கென தனித்த ரகசியங்கள் எதுவுமே இல்லை. அதனால்தான், 'நான் சுயசரிதை எழுத வேண்டிய அவசியமே இல்லை' என்று அவரால் துணிவுடன் சொல்ல முடிந்திருக்கிறது.     முதலாளித்துவ சிந்தனை மேலோங்கிக் கிடக்கும் பிரிட்டனில் ஒரு குக்கிராமத்தில் 1942ம் ஆண்டு, ஜனவரி 8ம் தேதி பிறந்தார் ஸ்டீபன் ஹாக்கிங். அப்பா ஆசைப்பட்டதற்கிணங்க தான் ஒரு மருத்துவராகி விட வேண்டும் என்ற ஆசை, இளம் பிராயத்தில் அவ...
குரங்கணி: ஆசிரியர்களே இது தகுமா?; செல்ஃபி மோகத்தில் கரைந்த மனிதம்!

குரங்கணி: ஆசிரியர்களே இது தகுமா?; செல்ஃபி மோகத்தில் கரைந்த மனிதம்!

ஈரோடு, சென்னை, தமிழ்நாடு, தேனி, மதுரை, முக்கிய செய்திகள்
குரங்கணி கொழுக்கு மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்பதற்காக வந்த ஹெலிகாப்டர் முன்பு ஆசிரியர் பயிற்சி மாணவிகள், ஆசிரியர்கள் ஆர்வமாக நின்று கொண்டு செல்பி, குழு புகைப்படம் எடுத்துக்கொண்டது உள்ளூர் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாள்களுக்கு முன்புதான், 'அடிமேல் அடி வாங்கும் ஆசிரியர்கள்; திரும்பிய திசையெல்லாம் இடி' என்ற தலைப்பில் புதிய அகராதி இணையத்தில் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். தொடக்கக் கல்வித்துறை மட்டுமின்றி ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட துறை அதிகாரிகளின் தலையீட்டால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சளுக்கு ஆளாவது பற்றியும், அதனால் குழந்தைகளின் கல்வி நலன் பாதிக்கப்படுவது குறித்தும் விரிவாகவே எழுதியிருந்தோம். ஆசிரியர்களிடம் பரவலாக வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், குரங்கணியில் ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்...
ஆதார் எண் கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம்

ஆதார் எண் கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம்

இந்தியா, முக்கிய செய்திகள்
ஆதார் எண் கட்டாயமாக்குவது தொடர்பான வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வங்கிக்கணக்கு, மொபைல் போன் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடுவண் பாஜக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஆதார் அட்டை விநியோகம் மற்றும் ஆதார் எண்ணுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா இடத்திலும் ஆதார் எண் கட்டாயம் என்றது. வங்கிக் கணக்கு, மொபைல் போன், வருமான வரி, பான் அட்டை மற்றும் சமூக நலத்திட்ட பயன்களைப் பெறுவது வரை ஆதார் எண்களை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று அறிவித்தது. இதற்காக நடப்பு மார்ச் 31 வரை அவகாசம் அளித்திருந்தது. இதை எதிர்த்து பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து விதமான சேவைகளைப் பெறவும் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக காலக்கெடுவை நீட...
பிளஸ்2 கணித தேர்வு எளிமை;  ஆனால் சென்டம் குறையும்!

பிளஸ்2 கணித தேர்வு எளிமை; ஆனால் சென்டம் குறையும்!

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இன்று நடந்த பிளஸ்2 கணித பொதுத்தேர்வில் பழைய வினாத்தாளில் இருந்து ஏராளமான வினாக்கள் கேட்கப்பட்டு இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும், இந்த தேர்வில் வெகுவாக சென்டம் பெறுவது குறையும் என்றும் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 1ம் தேதி முதல் பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. 9 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். ஏப்ரல் 6ம் தேதி பிளஸ்2 தேர்வுகள் நிறைவு பெறுகின்றன. பிளஸ்2 மாணவர்களுக்கு இன்று (மார்ச் 12, 2018) கணித பாடத்தேர்வு நடந்தது. இந்த வினாத்தாள் கடினமும் அல்ல; அதேநேரத்தில் மிக எளிமை என்றும் சொல்ல முடியாது என்று கலவையான கருத்துகளை கணித ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். சேலத்தைச் சேர்ந்த மூத்த கணித ஆசிரியர் ஒருவர் கூறியது: பத்து மதிப்பெண் வினாக்கள் மிக எளிமையாக இருந்தது. 6 மதிப்பெண் பிரிவில் கடைசியாக ஒரு வினா கேட்க...
தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சமுதாய சீர்திருத்தவாதி யார்?;  காவலர்  போட்டித்தேர்வில் கேள்வி

தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சமுதாய சீர்திருத்தவாதி யார்?; காவலர் போட்டித்தேர்வில் கேள்வி

ஈரோடு, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இரண்டாம்நிலைக் காவலர் பணியிடத்திற்கான போட்டித்தேர்வில், தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சமுதாய சீர்திருத்தவாதி யார் என்ற கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது. பெரியார் பற்றிய சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்தக் கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகக் காவல்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறைகளில் காலியாக உள்ள 6140 இரண்டாம் நிலைக்காவலர் அந்தஸ்திலான பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு, தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 11, 2018) நடந்தது. 232 மையங்களில் சுமார் 3 லட்சம் பேர் தேர்வெழுதினர். இத்தேர்வு மொத்தம் 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. பொது அறிவு பகுதியில் இருந்து 50 வினாக்களும், உளவியல் பிரிவில் இருந்து 30 வினாக்களும் கேட்கப்பட்டன. இத்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும். அவர்களுக்கு உடற்திறன் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும். எழுத்துத்தேர்வுக்கான கால வர...