Tuesday, November 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

இயற்பியல், வேதியியல் கடினம்!; நீட் தேர்வர்கள் அதிர்ச்சி

இயற்பியல், வேதியியல் கடினம்!; நீட் தேர்வர்கள் அதிர்ச்சி

இந்தியா, கல்வி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
இயற்பியல், வேதியியல் பாடப்பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததாக நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் சோகத்துடன் கூறினர். பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்காமல் போனால், இத்தேர்வை எதிர்கொள்வதே சவாலானதுதான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் போட்டித்தேர்வு, நாடு முழுவதும் இன்று (மே 6, 2018) நடந்தது. காலை 10 மணிக்குத் தொடங்கிய இத்தேர்வு, மதியம் 1 மணி வரை நடந்தது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நீட் தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. அதேபோல, வினாத்தாள் தாமதாக வந்தது, மொழி மாறி வந்த வினாத்தாள், பதிவெண் மாற்றம் என பல்வேறு குளறுபடிகளுக்கும் பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது. சேலம் மெய்யனூரில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியும் நீட் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மையத...
சேலம் பெரியார் பல்கலை; சிண்டிகேட் உறுப்பினர் நியமனத்தில் விதிமீறல்!

சேலம் பெரியார் பல்கலை; சிண்டிகேட் உறுப்பினர் நியமனத்தில் விதிமீறல்!

கல்வி, கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
பணி நியமனத்தில் ஊழல், முன்னாள் பதிவாளர் திடீர் தற்கொலை என அடுத்தடுத்து திகில் கிளப்பும் சேலம் பெரியார் பல்கலை, விதிகளை மீறி சிண்டிகேட் உறுப்பினர் நியமித்ததன் மூலம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. பல்கலைக்கழகங்களை நிர்வாகிக்க துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் தன்னிச்சையாக யாதொரு நடவடிக்கையும் எடுத்து விட முடியாது. அவரின் ஒவ்வொரு செயல்பாடும் பல்கலையில் உள்ள சிண்டிகேட் குழுவின் தீர்மானங்களின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். அந்தளவுக்கு சிண்டிகேட் குழுவுதான், பல்கலைகளைப் பொருத்தவரை ஆகப்பெரிய அதிகார அமைப்பு. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புதல், தொலைதூர படிப்பு மையங்களுக்கு ஒப்புதல் அளித்தல், டெண்டர்களை முடிவு செய்தல், புதிய கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவு தொடங்குவதற்கு ஒப்புதல் அளித்தல், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல் என சிண்டிகேட் குழு...
‘பீக்குஸ்கோத்தெ’ எனும் வாய்ப்பூட்டு!: “பிச்சை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் சவுராஷ்டிரர்கள்”

‘பீக்குஸ்கோத்தெ’ எனும் வாய்ப்பூட்டு!: “பிச்சை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் சவுராஷ்டிரர்கள்”

கலாச்சாரம், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
கடந்த 2016-ம் ஆண்டு தமிழ், தெலுங்கில் வெளியான 'பிச்சைக்காரன்' படத்தில், தாயின் உயிரைக் காப்பாற்ற நாயகன் தெருத்தெருவாக பிச்சை எடுப்பார். சாமியார் ஒருவரின் ஆலோசனையின்பேரில் இப்படி நேர்த்திக்கடன் செலுத்தி, தாயின் உயிரைக் காப்பாற்றுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.   மொழி, கலாச்சார ரீதியாக பாரம்பரியத்தை கட்டிக்காத்து வரும் சவுராஷ்டிரா சமூக மக்களிடையே இப்படி ஒரு சம்பிரதாயம் இன்றளவிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.   குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டால், அவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும் என திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டிக் கொள்கிறார்கள். அவர்கள் குணமடைந்த பிறகு, பாதிக்கப்பட்டவர் உள்பட வேண்டுதல் வைத்த அனைவரும் கோயிலில் சென்று வாயில் 'அலகு பூட்டு' குத்திக்கொள்கின்றனர். சிலர், இதை 'வாய்ப்பூட்டு' என்றும் சொல்கின்றனர்.     குறைந்தபட்சம் ஏ...
சேலம்: எடப்பாடி வீடு அருகே உருவான ‘மினி கூவம்!’; நாறும் மாம்பழ நகரம்

சேலம்: எடப்பாடி வீடு அருகே உருவான ‘மினி கூவம்!’; நாறும் மாம்பழ நகரம்

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் போடிநாயக்கன்பட்டி ஏரி, ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளதோடு, இறைச்சிக் கழிவுகளால் நிரம்பி இன்னொரு கூவமாக உருமாறி வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற சில நாள்களில் நடந்த அனைத்துத்துறை ஆய்வு க்கூட்டத்தில், ஏரிகள், நீர்நிலைகளை தூர்வாரும் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்தார். இதற்காக, கடந்த நிதியாண்டில் மட்டும் 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 1519 பணிகள் இந்த நிதியில் மேற்கொள்ளப்படும் என்றும் அப்போது கூறினார். குடிமராமத்துப் பணிகள் என்பது, நிலத்தடி நீரை செறிவூட்ட ஆகச்சிறந்த வழிமுறை என்பதால், துவக்க நிலையில் இத்திட்டத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே பல ஏரிகள் ...
மெர்குரி – சினிமா விமர்சனம்; ‘கார்ப்பரேட் சுரண்டலை தோலுரிக்கிறது’

மெர்குரி – சினிமா விமர்சனம்; ‘கார்ப்பரேட் சுரண்டலை தோலுரிக்கிறது’

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சினிமா துறையினரின் நீண்ட வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு வெளியாகி இருக்கும் மெர்குரி, போற்றக்கூடிய புதிய முயற்சி எனலாம். கதை என்ன?: பாதரச (மெர்குரி) கழிவினால் செவித்திறன், பேச்சுத்திறன், பார்வையை இழக்கும் ஆறு முக்கிய பாத்திரங்களைச் சுற்றி பின்னப்பட்ட கதைதான் மெர்க்குரி. ஓசைகளற்ற உலகத்தில் குரலற்றவர்களுக்கு ஏற்படும் வலி நிறைந்த வாழ்வியல் எத்தகையது என்பதைச் சொல்கிறது மெர்குரி. இதுதான் படத்தின் ஒரி வரி கதையும் கூட. நடிப்பு: பிரபுதேவா, ரம்யா நம்பீசன், இந்துஜா, ஷனந்த் ரெட்டி, ஷஷாங்க், தீபக், அனிஷ் மற்றும் பலர். தொழில்நுட்பக் கலைஞர்கள்: ஒளிப்பதிவு - திரு, இசை - சந்தோஷ் நாராயண், தயாரிப்பு: ஸ்டோன் பெஞ்ச், இயக்கம் - கார்த்திக் சுப்புராஜ். திரைமொழி: இந்துஜா, ஷனந்த் ரெட்டி, ஷஷாங்க், தீபக், அனிஷ் ஆகிய ஐந்து பேரும் நண்பர்கள். இவர்களால் வாய் பேச இயலாது. காது கேட்கும் திறனும் அற்றவர்கள்...
தமிழனாக இருந்தால் ஷேர் பண்ணியே தீரணுமா?#விழிப்புணர்வு

தமிழனாக இருந்தால் ஷேர் பண்ணியே தீரணுமா?#விழிப்புணர்வு

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும் என்ற கோரிக்கையுடன் வாட்ஸ் அப்பில் தகவல் வந்தால் போதும். என்ன ஏது என்று கூட முழுவதும் படித்துப் பார்ப்பதில்லை. உடனடியாக அடுத்தடுத்த வாட்ஸ் அப் குழுக்களுக்கு அதை பகிர்ந்துவிட்டுத்தான் மறுவேலை. தமிழன் என்ற உணர்வைக் காட்டிக்கொள்ள அதுவே ஆகச்சிறந்த மற்றும் எளிமையான வழிமுறையாகப் பழகிவிட்டோம். நீங்கள் மட்டுமல்ல. அப்படிச் செய்து வந்தவர்களில் நானும் ஒருவன். பிறகு அப்படி செய்வதில்லை. வெகுசன வாட்ஸ் அப் பயனர்கள், பகிர்வதன் மூலமே தமிழர் என்ற உணர்வில் உச்சி குளிர்ந்து கிடக்கும் சக தோழர்களுக்காக இந்தக் கட்டுரை. கடந்த பதினைந்து நாள்களாக வாட்ஸ் அப்பில், ''தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷம் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்படப் போகிற விஷயம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?'' என்ற தலைப்பிலான ஒரு பதிவு உலா வருகிறது. அந்தப்...
தையா? சித்திரையா?: தமிழ்ப் புத்தாண்டிற்கு தர்க்க ரீதியிலான விளக்கம்!

தையா? சித்திரையா?: தமிழ்ப் புத்தாண்டிற்கு தர்க்க ரீதியிலான விளக்கம்!

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
காலங்காலமாக சித்திரை முதல் நாளில், தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடி பழக்கப்பட்டு விட்ட தமிழர்களிடம், திடீரென்று அன்றைய நாளில் புத்தாண்டு இல்லை என்று சொன்னால் எப்படி இருக்கும்?. வெகுசன மக்களிடம் அதிர்ச்சியும், குழப்பங்களும், எதிர்மறை விமர்சனங்களும் எழுமல்லவா? அத்தனையும் எழுந்தன முந்தைய திமுக ஆட்சியின் மீது.   புரையோடிப் போன நம்பிக்கை:   கடந்த 2008ல் ஆட்சியில் இருந்த திமுக, 'நித்திரையில் இருக்கும் தமிழா உனக்கு சித்திரை அல்ல புத்தாண்டு' என்று புரட்சிக்கவியின் வரிகளை மேற்கோள் காட்டி, 'தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு' என்று ஆணையிட்டது. சரியோ தவறோ... புரையோடிப் போன ஒரு நம்பிக்கையை, அரசாணை வாயிலாக தடுத்து அணை போட்டு விட முடியுமா?. இது ஹர்ஷவர்த்தனர் காலம் இல்லை.     இந்த அரசாணைக்கு முன்பே, திரு.வி.க., தைதான் ஆண்டின் தொடக்கம் என்றார். யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலி...
கூட்டு வன்புணர்வு… கழுத்தை நெரித்தோம்… சுவர் மீது தலையை மோதினோம்… போதை மருந்து கொடுத்தோம்… எல்லாமே கடவுளின் கண் முன்னே நடந்தது!#Asifa#JusticeForAsifa

கூட்டு வன்புணர்வு… கழுத்தை நெரித்தோம்… சுவர் மீது தலையை மோதினோம்… போதை மருந்து கொடுத்தோம்… எல்லாமே கடவுளின் கண் முன்னே நடந்தது!#Asifa#JusticeForAsifa

இந்தியா, குற்றம், முக்கிய செய்திகள்
சிறுமி ஆசிஃபாவை கூட்டு வன்புணர்வு செய்து காட்டு மிராண்டித்தனமாக படுகொலை செய்யப்பட்ட வழக்கு, இந்தியாவை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் பாஜக பிரமுகர், சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியைச் சேர்ந்த சிறுமி ஆசிஃபா (8). கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி, அந்தப் பகுதியில் இருந்த வனத்திற்குள் குதிரைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றவள் அதன்பின் வீடு திரும்பவில்லை. சிறுமியின் தந்தை யூசுப் பூஜ்வாலா, நண்பர்களுடன் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மனதளவில் நொந்து போனார். இரு நாள்கள் கழித்து காவல்துறையில் புகார் கொடுக்கச் சென்றபோது அவரை அலட்சியம் செய்து விரட்டி அடித்ததோடு, வழக்குப் பதிவு செய்யவும் மறுத்துவிட்டனர். ஜனவரி 17ம் தேதி, காட்டுப்பகுதிக்குள் சிறுமியின் சடலம் கிடப்பது தெரியவந்தது. அவளுடைய கை, கால் எலும்புகள் முறிக...
#ஓடிப்போ மோடி!: உலகளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங்#GoBackModi

#ஓடிப்போ மோடி!: உலகளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங்#GoBackModi

அரசியல், இந்தியா, உலகம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் நடத்தும் கருப்புக்கொடி போராட்டங்கள், ஆளும்தரப்பு மற்றும் பாஜக வட்டாரத்தில் கடும் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டரில் உருவாக்கப்பட்ட #ஓடிப்போமோடி என்ற ஹேஷ்டேக் உலகளவில் முதலிடம் பிடித்துள்ளது. நாடு முழுவதும் மோடி மீது எழுந்துள்ள அதிருப்தியை வெளிப்படுத்துவதாக இந்த ட்விட்டர் ட்ரெண்டிங் அமைந்துள்ளது. உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்குப் பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் போக்குக் காட்டி வருகிறது நடுவண் பாஜக அரசு. இதற்கான 6 வார கால அவகாசம் முடிவுற்ற கடைசி நாளில், இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள 'ஸ்கீம்' என்ற சொல்லுக்கு சரியான விளக்கம் தெரியவில்லை எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது இந்திய அரசு. எதிர்வரும் கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துத்தான் திட்டமிட்ட...
சேலம் கூட்டுறவு தேர்தல்: அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கோல்மால் செய்தது அம்பலம்!

சேலம் கூட்டுறவு தேர்தல்: அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கோல்மால் செய்தது அம்பலம்!

ஈரோடு, சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க தேர்தலில், அதிகாரிகள் கூட்டு சேர்ந்து வேட்புமனுத் தாக்கல் செய்யாதவர்களை எல்லாம் நிர்வாகிகளாக நியமிக்க சதி செய்திருப்பது அம்பலமாகி உள்ளது. சேலம் பள்ளப்பட்டியில் எஸ்.111, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம், கடந்த 1998ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த வீட்டுவசதி சங்க பணியாளர்கள் 400க்கும் மேற்பட்டோர் அங்கத்தினர்களாக உள்ளனர். இதன் உறுப்பினர்களிடம் இருந்து நிரந்தர இட்டு வைப்புகளை பெறுவதும், அவர்களுக்கு கடனுதவிகளை வழங்குவதும் இந்த சங்கத்தின் பணிகளாகும். கூட்டுறவு தேர்தல் என்றாலே, ஆளுங்கட்சிகளே அனைத்துப் பதவிகளையும் சட்ட விரோதமாக கைப்பற்றுவதுதான் தமிழ்நாட்டில் காலங்க...