Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

இளையராஜாவின் மகள் பவதாரணி திடீர் மரணம்!

இளையராஜாவின் மகள் பவதாரணி திடீர் மரணம்!

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இளையராஜாவின் மகளும், பிரபல திரையிசை பின்னணி பாடகியுமான பவதாரணி இன்று (ஜன. 25) மாலை உடல்நலக்குறைவால் திடீரென்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47. இசைஞானியும், ராஜ்யசபா எம்.பி.,யுமான இளையராஜாவின் ஒரே மகள் பவதாரிணி. இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் சிறு வயதிலேயே இசைத்துறைக்குள் காலடி வைத்துவிட்ட பவதாரணி, பின்னணி பாடகி, இசையமைப்பாளர், கவிஞர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கினார். இவருடைய உடன்பிறந்தவர்களான கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா ஆகியோரும் பிரபல இசையமைப்பாளர்களாகத் திகழ்ந்து வருகின்றனர். பிரபுதேவா நடித்த ராசய்யா படத்தில்தான் இவர் முதன்முதலில் பின்னணி பாடகியாக அறிமுகம் ஆனார். பாரதி படத்தில் இவர் பாடிய, மயில்போல பொண்ணு ஒண்ணு... என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றார். இதற்கிடையே, அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்...
பங்குச்சந்தை: உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ்; புதிய உச்சம் தொட காத்திருக்கும் நிப்டி!

பங்குச்சந்தை: உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ்; புதிய உச்சம் தொட காத்திருக்கும் நிப்டி!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் ஓரளவு உயர்வுடன் முடிவடைந்துள்ளது. வாரத்தின் இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை (ஜன. 12), மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 847.28 (1.18%) புள்ளிகள் உயர்ந்து 72568 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குசந்தையான நிப்டி 247.35 புள்ளிகள் உயர்ந்து (1.14%) 21894 புள்ளிகளில் முடிவடைந்தது. வரும் வாரத்தில், நிப்டி 22000 புள்ளிகளை கடந்து வரலாற்று உச்சத்தை எட்டும் என சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கடைசி மூன்று அமர்வுகள் ஏற்றத்துடன் இருந்ததால் முதலீட்டாளர்கள் உற்சாக மனநிலையில் இருக்கிறார்கள். அதேநேரம், அடுத்தடுத்து வெளியாக உள்ள மூன்றாவது காலாண்டு முடிவுகளைப் பொறுத்து, சந்தையில் அதிகளவில் ஏற்ற, இறக்கங்களும் இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஜன. 8 - ஜன. 12 வரையிலான வாரத்தில், தேசிய பங்குச்சந்தையில் ஐடி துறை சார்ந்த பங்குக...
திண்ணை: ஆளுங்கட்சி ‘கடாரம் கொண்டான்’ – சேலம் மாநகராட்சி அதிகாரி மோதல்?

திண்ணை: ஆளுங்கட்சி ‘கடாரம் கொண்டான்’ – சேலம் மாநகராட்சி அதிகாரி மோதல்?

சேலம், முக்கிய செய்திகள்
''அரசியல் சதுரங்கத்தில் சில நேரம், நல்ல அதிகாரிகளின் தலைகள் உருட்டப்படுவது சகஜம்தான்,'' என்றபடியே நக்கல் நல்லசாமியின் வீட்டுத் திண்ணையில் வந்தமர்ந்தார் நம்ம பேனாக்காரர்.   ''என்ன பேனாக்காரரே... வந்ததும் வராததுமா புதிர் போடுறீரு...?'' என கேட்டபடியே, சூடான தேநீரை எடுத்து வந்தார் நக்கல் நல்லசாமி. ''அது ஒண்ணுமில்ல... ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி, மாங்கனி மாவட்டத்துல ஆளுங்கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகியான 'நேதாஜி' பெயர் கொண்ட ஒருத்தரு, மாவட்டத்தைக் கட்டி ஆளும் கருமேக அதிகாரியும், மாநகராட்சியின் முக்கிய அதிகாரியான 'இயக்குநர் சிகரம்' பெயர் கொண்ட அதிகாரியும் இலைக்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அவருடைய குரல் பதிவுதான், சமூக ஊடகங்களில் வைரல் ஆகிட்டு இருக்கு.   அவரை இப்படி பேசச்சொல்லி தூண்டி விட்டதும் கூட ஆளுங்கட்சியின் முக...
பாஸ்போர்ட் மட்டும் போதும்… இந்தியர்கள் இனி 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்!

பாஸ்போர்ட் மட்டும் போதும்… இந்தியர்கள் இனி 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்!

இந்தியா, முக்கிய செய்திகள்
இந்திய பாஸ்போர்ட் மூலம் இனி மலேஷியா, இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட 62 நாடுகளுக்கு விசா இல்லாமலேயே இந்தியர்கள் பயணிக்க முடியும்.  உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகள் இடம் பிடித்துள்ளன. சர்வதேச வான் போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) அளித்த தகவலின்படி, உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் குறித்த பட்டியலை ஹென்லே பாஸ்போர்ட் குறியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் பாஸ்போர்ட் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நாடுகளின் குடிமக்கள் அவர்களின் பாஸ்போர்ட் மூலம் 194 நாடுகளுக்கு விசா இல்லாமலேயே செல்ல முடியும். இவற்றில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டுக்...
சர்வோதய சங்க ஊழல் விவகாரம்: அதிகாரிகளுக்கு ‘கில்மா’ மேட்டர்களை சப்ளை செய்தது அம்பலம்!

சர்வோதய சங்க ஊழல் விவகாரம்: அதிகாரிகளுக்கு ‘கில்மா’ மேட்டர்களை சப்ளை செய்தது அம்பலம்!

கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சர்வோதய சங்கத்தில் நடந்த ஊழல் முறைகேடுகளைக் கண்டுகொள்ளாமல் இருக்க, கேவிஐசி துறை அதிகாரிகளுக்கு மது, மாது இத்யாதிகளை சப்ளை செய்து கவிழ்த்த விவகாரம் சிபிஐ விசாரணையில் அம்பலமாகி உள்ளது. கோவை மாவட்டம் ரெட் ஃபீல்ட்ஸ் பகுதியில், குப்புசாமி லேஅவுட்டில், ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் 28 கிளைகள் உள்ளன. காந்தியக் கொள்கையான கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுதான் சர்வோதய சங்கங்களின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, கிராமப்புற கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், அவர்களுக்கு பட்டு பாவு, ஊடு நூல் கொடுத்து, அதன்மூலம் பட்டுச்சேலைகள் நெய்து, விற்பனை செய்வதுதான் சர்வோதய சங்கங்களின் முதன்மைப் பணி ஆகும். மத்திய அரசின் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் எனப்படும் கேவிஐசி துறையின் கண்காணிப்பின் கீழ் இந்த சங்கங்கள் செயல்படுகின்றன. மைய அரசின் எம்எஸ்எம...
‘வாய்தா ராணி’, ‘ஓசி பயணம்…’ வாய்த்துடுக்கால் வீழ்ந்த பொன்முடி

‘வாய்தா ராணி’, ‘ஓசி பயணம்…’ வாய்த்துடுக்கால் வீழ்ந்த பொன்முடி

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
ஜெயலலிதாவை வாய்தா ராணி என்றும், பெண்களுக்கான இலவச பேருந்துப் பயணத்தை ஓசி பயணம் என்றும் பொதுவெளியில் வாய்த்துடுக்கு காட்டிய அமைச்சர் பொன்முடிக்கு, சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை என்பதை சொந்தக் கட்சியினரே ரசிக்கின்றனர். தமிழகத்தில் தந்தை பெரியார் மீது ஈர்ப்பு கொண்டவர்கள், பேரறிஞர் அண்ணா, திராவிடர் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய பிறகு அக்கட்சியை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். அப்படி பெரியாரிய பட்டறையில் இருந்து திமுகவுக்குள் காலடி வைத்தவர்தான் பேராசிரியர் பொன்முடி. பொதுமேடை, அரசியல் மேடை என எந்த மேடயாக இருந்தாலும் திராவிட சித்தாந்தங்களைப் பேசாமல் இருக்கவே மாட்டார். அந்தளவுக்கு திராவிட சிந்தனைகளில் ஊறிப்போனவர். திராவிட இயக்கத்தின் மீது பொன்முடி கொண்ட சித்தாந்த பிடிப்பைச் சுட்டிக்காட்ட, அவர் எழுதிய, 'The Dravidian Movement and the Black Movement' என்ற ஒரு புத்தகமே போதுமானது....
சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவருடையய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் டிச. 21ம் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இருவரும், விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய 30 நாள்கள் அவகாசமும் வழங்கி உத்தரவிட்டுள்ளது. திமுகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான க.பொன்முடி, தற்போது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ளார். இவர், கடந்த 2006 - 2011 வரையிலான திமுக அமைச்சரவையில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில், விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு ...
சிபிஐ பிடியில் சிக்கியது சர்வோதய சங்கம்! கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது வெட்டவெளிச்சம்!!

சிபிஐ பிடியில் சிக்கியது சர்வோதய சங்கம்! கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது வெட்டவெளிச்சம்!!

கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சேலம், தேனி, மதுரை, முக்கிய செய்திகள்
கோவை அருகே, சர்வோதய சங்கத்தில் போலி கைத்தறி நெசவாளர்கள் பெயரில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது சிபிஐ போலீசார் விசாரணையில் வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. விரைவில், இந்த வழக்கில் முக்கிய புள்ளிகள் மீது எப்ஐஆர் பாய்கிறது. கோவை அருகே, ரெட் ஃபீல்ட்ஸ் பகுதியில் ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கம், 1966ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொண்டாமுத்தூர், சரவணம்பட்டி, பீளமேடு, கருமத்தம்பட்டி, வாகராயம்பாளையம், நீலாம்பூர், ஒண்டிப்புதூர், காமாட்சிபுரம், இடையர்பாளையம், ராம் நகர் மற்றும் ஊத்துக்குளி, ஸ்ரீவில்லிப்புத்தூர், சுப்ளாபுரம், செங்கோட்டை, தேனி ஜக்கம்பட்டி உள்பட 28 இடங்களில் இதன் கிளைகள் உள்ளன. செயலாளர், பொருளாளர், மேலாளர், எழுத்தர், தினக்கூலி பணியாளர்கள் என மொத்தம் 500 பேர் வேலை செய்து வருகின்றனர். தலைமையிடம் மற்றும் கிளைகளில் 1000 கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளதா...
திண்ணை: அப்படி என்னய்யா செஞ்சிட்டான் என் கட்சிக்காரன்…?

திண்ணை: அப்படி என்னய்யா செஞ்சிட்டான் என் கட்சிக்காரன்…?

சேலம், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
மார்கழி பொறந்துடுச்சு. சீசனுக்கு இதமா இருக்கட்டுமேனு சுடச்சுட ஒரு சங்கதிய கொண்டு வந்திருக்கேன்னு சொன்னாரு நம்ம பேனாக்காரர். ''சொல்லுங்களேன்...கேட்போம்'' - இது நக்கல் நல்லசாமி.   ''அறிவுக்கோயில் தலைவரு போன பிப்ரவரி மாசம் சேலத்துல அனைத்துத் துறை முக்கியஸ்தர்களுடன் ஆய்வுக்கூட்டம் போட்டாரே ஞாபகம் இருக்கா...?,'' ''ஓ... நல்லா ஞாபகம் இருக்கு. கள ஆய்வில் தலைவருனு சொல்லிட்டு, கடவுள் அன்பு, யுசி டீம் எல்லாம் ஆய்வு நடத்துனதே... தலைவரு பேரளவுக்கு சும்மா உட்கார்ந்துட்டுப் போனாரே... அந்தக் கூட்டத்தைதானே சொல்றீங்க... நல்லா ஞாபகம் இருக்கு...,''   ''நக்கலாரே... உமக்கு குசும்பு ஜாஸ்தியா''   ''அன்னிக்கு சாயங்காலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வளைவு முன்னாடி நின்னு அறிவுக்கோயில் தலைவரு, அவரோட அப்பா நினைவாக செல்பி எடுத்துக்கிட்டாரு. புரோக்கர் ஊடகங்கள் எல...
திண்ணை: ”எதையும் நியாயமாதான் செய்வோம்…!” பெரியார் பல்கலையில் அக்கப்போர்!

திண்ணை: ”எதையும் நியாயமாதான் செய்வோம்…!” பெரியார் பல்கலையில் அக்கப்போர்!

சேலம், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
''தலைநகரையே புரட்டிப்போட்ட மிச்சாங் புயல் ஓய்ந்தாலும் கூட, சேலம் பெரியார் பல்கலையில் சனாதனத்திற்கும், திராவிடத்திற்குமான மோதல் இப்போதைக்கு ஓயாது போலருக்கு,'' என்று நேரடியாக சப்ஜெக்டுக்கு வந்தார் பேனாக்காரர். காதுகளை தீட்டிக்கொண்டு ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினார் நம்ம நக்கல் நல்லசாமி. ''பெரியார் பல்கலையில் முருகக்கடவுள் பேர் கொண்ட அந்தப் பேராசிரியர், பெரியார் பற்றி சில புத்தகங்களை தொகுத்து வெளியிட்டு இருந்திருக்கிறார். அவரும்கூட கருப்புச்சட்டை சிந்தனாவாதிதான். இந்த புத்தகம் வெளியிட்டு, அதையெல்லாம் விடியல் தலைவர்கிட்ட காட்டி அந்த பேராசிரியர் வாழ்த்தெல்லாம்கூட வாங்கிய படங்கள் பொதுவெளியில் வந்துச்சு,'' ''அது தெரிஞ்ச சேதிதானே. மேலே சொல்லுங்க'' அவசரம் காட்டினார் நக்கல் நல்லசாமி. ''பல்கலைக்கழக சாசன விதிகளின்படி, முன்அனுமதி பெற்றுதான் புத்தகம் வெளியிடணுமாம். அந்த பேராசிரியர் பர்...