Saturday, March 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

தமிழக பட்ஜெட் தாக்கல்: கடன் சுமை 5.70 லட்சம் கோடியாக உயரும்!

தமிழக பட்ஜெட் தாக்கல்: கடன் சுமை 5.70 லட்சம் கோடியாக உயரும்!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் அறிக்கை, சட்டப்பேரவையில் செவ்வாயன்று (பிப். 23) தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தின் கடன் சுமை, அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் 5.70 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.   தமிழக சட்டப்பேரவையில், 2021-2022ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட், செவ்வாய்க்கிழமை (பிப். 23) தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். விரைவில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.   நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:   தமிழக அரசின் நிதி பற்றாக்குறை மாநில அரசின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2021-2022ம் நிதியாண்டில் 4 சதவீதத்திற்குள்ளும், 2022-2023ம் நிதியாண்டில் 3.5 சதவீதத்திற்குள்ளும்,...
நீ தெய்வம் தந்த அதிசயம்…!

நீ தெய்வம் தந்த அதிசயம்…!

சினிமா, முக்கிய செய்திகள்
(பனை ஓலை)   சில பாடல்கள், சில நிகழ்வுகள் நம்மையும் அத்துடன் ஒன்றச் செய்துவிடும். இளையராஜா, கண்ணதாசன், ஜென்சி ஆகியோரின் கூட்டணி அவர்களின் படைப்புகளுடன் நம்மை அடிக்கடி ஒன்றிப் போகச் செய்யும் மாயாஜாலங்களை அடிக்கடி நிகழ்த்தி இருக்கின்றன. அந்தக் கூட்டணி எப்போதும் வெற்றிக் கூட்டணியாக மட்டுமே அமைந்திருக்கின்றன. அவர்களின் ராஜாங்கத்தை யாரும் சதி செய்து கவிழ்த்து விட முடியாது. எப்போதும் பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறார்கள். இவர்களின் கைவண்ணத்தில் உருவானதுதான், 'இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன...' என்ற பாடல். படம், நிறம் மாறாத பூக்கள். 1979 ஆகஸ்ட் 31ல் வெளியானது.   பாரதிராஜாவின் நாயகிகள் எப்போதும் வெள்ளை உடை அணிந்த தேவதைகள். இந்தப் பாடலிலும் ராதிகா, வெள்ளுடை தேவதையாக பனிச்சிற்பம்போல் (பனிச்சிற்பம் என வேறு ஒருவரை வர்ணித்து விட்டேன்....
பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!; திடீர் வீழ்ச்சி ஏன்?

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!; திடீர் வீழ்ச்சி ஏன்?

முக்கிய செய்திகள், வர்த்தகம்
வர்த்தகத்தின் முதல் நாளான இன்று (பிப். 22) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வணிகத்தைத் தொடங்கின. பகல் 1.50 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் அதிகபட்சமாக 1015 புள்ளிகள் (2.61 சதவீதம்) சரிந்து 49971 புள்ளிகளும், நிப்டி 251 புள்ளிகள் சரிந்து (1.61 சதவீதம்) 14741 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆகின.   நிப்டி காலையில் 14999 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியது. அதிகபட்சமாக 15010 புள்ளிகளை தொட்டது. குறைந்தபட்சமாக 14740 புள்ளிகள் வரை சரிந்தது. காலையில் 50910 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 50986 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 49860 புள்ளிகள் வரையிலும் சென்றன. மருந்து தயாரிப்பு துறைகள், நிதிச்சேவை துறைகளின் பங்குகள் பெருமளவு வீழ்ச்சி கண்டதே சந்தையின் சரிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இரண்டு சந்தைகளும் முதல் செஷனிலேயே கிட்டத்தட்ட 1...
திமுகவில் ராசிபுரம் தொகுதிக்கு முதல் விருப்ப மனு தாக்கல்!

திமுகவில் ராசிபுரம் தொகுதிக்கு முதல் விருப்ப மனு தாக்கல்!

அரசியல், முக்கிய செய்திகள்
திமுக சார்பில் ராசிபுரம்  தனித்தொகுதியில் போட்டியிட  மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த  ஒன்றியக்குழு 1வது வார்டு  கவுன்சிலரின் கணவர் முருகேசன், முதல் நபராக ஞாயிற்றுக்கிழமை (பிப். 21) விருப்ப மனு தாக்கல் செய்தார்.   தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, வழக்கத்தை விட முன்னதாகவே திமுக, அதிமுக கட்சிகள் தேர்தல் பரப்புரையை தொடங்கி விட்டன.   இந்நிலையில், திமுக சார்பில் தமிழகம், புதுச்சேரியில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்பமனுக்கள் பெறும் பணிகளையும் திமுக பிப். 17ம் தேதி தொடங்கியது. 28ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.   நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டப்பேரவைத் தனித்தொகுதியில் போட்டியிட இம்முறை 20க்கும் மேற்பட்டோர் ஆர்வம் காட்டுகின்றனர். எனினும், விருப்பமனு படிவம் ...
இபிஎஸ் தொகுதியில் அதிகாலையில் பயங்கரம்! மகளை சுத்தியலால் தாக்கி கொன்ற காய்கறி வியாபாரி; மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை!

இபிஎஸ் தொகுதியில் அதிகாலையில் பயங்கரம்! மகளை சுத்தியலால் தாக்கி கொன்ற காய்கறி வியாபாரி; மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை!

சேலம், முக்கிய செய்திகள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதிக்கு உட்பட்ட மணியகாரம்பாளையம் அருகே, பெற்ற மகளை தந்தையே சுத்தியலால் தாக்கிக் கொலை செய்தார். ஊர் மக்கள் கூடியதை அறிந்து அவரும் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள மணியகாரம்பாளையம் ஆதிகாட்டுரைச் சேர்ந்தவர் கோபால் (54). உள்ளூரில் தள்ளுவண்டி மூலம் காய்கறி விற்று வந்தார். இவருடைய மனைவி மணி. இவர்களுக்கு பிரியா (15) என்ற மகள் இருந்தார். அவர், தாதாபுரம் அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர்களுக்கு ரமேஷ்கண்ணன் என்ற மகனும் இருக்கிறார். கோபாலின் மனைவி மணி, கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி. அடிக்கடி வேலைக்காக வெளியூருக்குச் சென்று விடுவார். மகன் ரமேஷ்கண்ணன், செட்டிமாங்குறிச்சியில் உள்ள ஒரு பேக்கரி...
மாங்கனி மாவட்ட திமுகவில் யாருக்கு சீட்? விருப்ப மனுக்கள் பெறுவதில் உடன்பிறப்புகள் ஆர்வம்!

மாங்கனி மாவட்ட திமுகவில் யாருக்கு சீட்? விருப்ப மனுக்கள் பெறுவதில் உடன்பிறப்புகள் ஆர்வம்!

தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது அதன் மீது இயல்பாகவே எழும் அதிருப்தி, ஜெயலலிதா என்ற மிகப்பெரும் ஆளுமை இல்லாத நிலை ஆகியவற்றால் எப்படியும் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் நடந்தே தீரும் என்ற அதீத எதிர்பார்ப்பு திமுக தரப்பில் நிலவுகிறது. இதனாலேயே வரும் தேர்தலில் வேட்பாளர் சீட் கேட்டு, திமுகவில் 'பசையுள்ள' விஐபிகள் பலரும் விருப்பமனு தாக்கல் செய்ய அறிவாலயத்துக்கு படையெடுத்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், சேலம் வடக்கில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. 1996, 2006 தேர்தல்களில் அதிமுக மீதான கடும் அதிருப்தி நிலவிய காலக்கட்டத்தில் மட்டுமே சேலம் மாவட்டத்தில் திமுக கணிசமான இடங்களை கைப்பற்றி இருக்கிறது. மற்ற காலங்களில், ம...
காஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் இரண்டாம் முறையாக உயர்வு; சேலத்தில் 803; சென்னையில் 785 ஆக நிர்ணயம்!

காஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் இரண்டாம் முறையாக உயர்வு; சேலத்தில் 803; சென்னையில் 785 ஆக நிர்ணயம்!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
வீடுகளில் பயன்படுத்தப்படும் மானியமில்லா எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை, நடப்பு பிப்ரவரி மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது. தற்போது மேலும் 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உள்நாட்டு சந்தையில் தேவை அளவு, உற்பத்தித்திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் காஸ் சிலிண்டர் விலை மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. எண்ணெய் நிறுனங்களின் கூட்டமைப்பு கூடி, விலை நிர்ணயம் செய்கின்றன.   நடப்பு பிப்ரவரி முதல் தேதியில் புதிய விலை அறிவிக்கப்படும் என வழக்கம்போல் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அன்றைய நாளில், காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நடைமுறைக்கு மாறாக, பிப். 4ம் தேதியன்று எல்பிஜி சிலிண்டர் விலை 25 ரூபாய்...
மல்லசமுத்திரம்: திமுக கவுன்சிலரின் கணவரை காரில் விரட்டிச்சென்று கொல்ல முயற்சி! முன்னாள் ஊழியர் உள்பட 7 பேர் மீது புகார்!!

மல்லசமுத்திரம்: திமுக கவுன்சிலரின் கணவரை காரில் விரட்டிச்சென்று கொல்ல முயற்சி! முன்னாள் ஊழியர் உள்பட 7 பேர் மீது புகார்!!

நாமக்கல், முக்கிய செய்திகள்
மல்லசமுத்திரம் அருகே, திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவரை, அவருடைய முன்னாள்  ஊழியர் உள்பட 7 பேர் காரில்  விரட்டிச்சென்று அடித்துக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள அவினாசிப்பட்டி காலனியை சேர்ந்தவர் முருகேசன் (50). திமுக பிரமுகர். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர், மல்லசமுத்திரம் ஒன்றியக்குழு திமுக கவுன்சிலராக உள்ளார்.   முருகேசன், சொந்த ஊரில் பேப்பர் கோன் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். மேலும், தனியார் நிறுவனங்களுக்கு தேவையான வடமாநில தொழிலாளர்களை ஒப்பந்தத்தின்பேரில் பணிக்கு அமர்த்தும் மேன்பவர் கன்சல்டசன்சி நிறுவனமும் நடத்தி வருகிறார்.   இவரிடம், மோர்பாளையம் அருகே உள்ள ராமாபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்ற வாலிபர், கார் ஓட்டுநராகவும், மேலாளராகவும் 7 ஆண்டுகளாக வேலை செய்து வந்த...
எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் திடீர் ஏற்றம்; சேலத்தில் 753க்கு கிடைக்கும்!

எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் திடீர் ஏற்றம்; சேலத்தில் 753க்கு கிடைக்கும்!

முக்கிய செய்திகள்
வீடுகளில் பயன்படுத்தப்படும் மானியமற்ற எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை நடப்பு பிப்ரவரி மாதத்தில் திடீரென்று 25 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் சேலத்தில் காஸ் சிலிண்டர் விலை நடப்பு மாதம் 728ல் இருந்து 753 ரூபாயாக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, நுகர்வுத்திறன், உற்பத்தித்திறன், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் வீட்டு உபயோக மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர் விலைகள் மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு விலை நிர்ணயம் செய்கிறது. மாதந்தோறும் 1ம் தேதி முதல் புதிய விலை நடைமுறைக்கு வரும். கடந்த டிசம்பர் மாதம் வீட்டு உபயோக எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை இரண்டு முறை தலா 50 ரூபாய் வீதம் 100 ரூபாய் உயர்த்தப்பட்டது. ஒரே மாதத்தில் இரண்டு முறை விலையேற்றம் என்பதால் அரசியல் அர...
தொடர்ந்து இரண்டாவது மாதமாக மாறாத சமையல் காஸ் சிலிண்டர் விலை! சேலத்தில் 728க்கு கிடைக்கும்!!

தொடர்ந்து இரண்டாவது மாதமாக மாறாத சமையல் காஸ் சிலிண்டர் விலை! சேலத்தில் 728க்கு கிடைக்கும்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வீடுகளில் பயன்படுத்தப்படும்  மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து இரண்டாவது  மாதமாக நடப்பு பிப்ரவரி மாதத்திலும் உயர்த்தப்படவில்லை. முந்தைய  மாதத்தைப் போலவே சேலத்தில்  இவ்வகை சிலிண்டர் 728க்கு  கிடைக்கும்.   உலகச்சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரம், உள்ளூர் சந்தை தேவை, உற்பத்தித்திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் காஸ் சிலிண்டர் விலைகள் மாதத்திற்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.     கடந்த டிசம்பர் மாதம், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை தலா 50 ரூபாய் வீதம் ஒரே மாதத்தில் இரண்டுமுறை உயர்த்தப்பட்டது. சந்தையில் திடீர் தேவை அதிகரிப்பும், கச்சா எண்ணெய் விலை உயர்வும் அதன் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்பட்டது.   ஒரே மாதத்தில் அப்போது 100 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது, வாடிக்கையாளர்களி...