Wednesday, March 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Blog

கருணாநிதி: சந்தன பேழைக்குள் துயில் கொண்ட சூரியன்!

கருணாநிதி: சந்தன பேழைக்குள் துயில் கொண்ட சூரியன்!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  திமுக தலைவர் கருணாநிதி விரும்பியபடியே, மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அவருடைய உடல் இன்று (ஆகஸ்ட் 8, 2018) மாலை 6.50 மணியளவில் சந்தனப் பேழைக்குள் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றியதால் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகவே தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவருக்கு அவ்வப்போது மருத்துவமனையிலும், வீட்டிலும் மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.   இந்த நிலையில்தான் கடந்த 11 நாள்களாக காவேரி மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் ஐந்து முறை முதல்வர், தொடர்ச்சியாக 13 முறை சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியே காணாத எம்எல்ஏ என ஓய்வின்றி மக்களுக்கு உழைத்த கருணாநிதியின் நினைவுகள் தப்பின. சிகிச்சை பலனின்றி நேற்று (ஆகஸ்ட் 7, 2018) மாலை 6.10 மணியளவில் இறந்தார். தான் மறைந்த பிறகு, மெ...
கருணாநிதி: நகைச்சுவையிலும் சக்கரவர்த்திதான்!

கருணாநிதி: நகைச்சுவையிலும் சக்கரவர்த்திதான்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திமுக தலைவர் கலைஞர் தொடாத எல்லைகளே இல்லை. கலை, இலக்கியம், அரசியல் என இறுதி மூச்சு வரை பல தளங்களிலும் வெற்றிகரமாக பயணித்தவர். சட்டப்பேரவையிலும், பொது வெளியிலும் சொல்ல வந்த சேதியை சமயோசிதமாக நகைச்சுவையுடன் சொல்லி, எல்லோரின் கவனத்தையும் ஒருங்கே ஈர்த்துவிடும் பாங்கு கலைஞருக்கு மட்டுமே உரித்தானது. அரசியல் தளத்தில் அவரை எதிர்ப்போர் கூட அவரின் நகைச்சுவையை விரும்பி ரசிப்பார்கள். கவிஞர் தெய்வச்சிலை, 'கலைஞரின் நகைச்சுவை நயம்' என்ற தலைப்பில் சட்டப்பேரவை, விழாக்கள், செய்தியாளர்கள் சந்திப்பு, கட்சிக் கூட்டங்களில் கலைஞர் நகைச்சுவையாக சொன்ன 200 தகவல்களை தொகுத்து நூலாக வெளியிட்டு இருக்கிறார். 'நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்' இந்த நூலை வெளியிட்டுள்ளது. அந்த தொகுப்பில் இருந்து....   * கடவுள் இருக்கிறாரா? இல்லையா?   கடந்த 2006ம் ஆண்டு, அக்டோபர் மாதம் சன் டிவியில் ஒ...
காலமானார் கலைஞர் கருணாநிதி!

காலமானார் கலைஞர் கருணாநிதி!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்று (ஆகஸ்ட் 7, 2018) மாலை 6.10 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 94.   திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகவே உடல்நலம் குன்றி, சிகிச்சை பெற்று வந்தார். உணவுக்குழாயில் டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டது. இந்நிலையில், திடீரென்று அவருடைய உடல்நலம் மேலும் குன்றியதை அடுத்து, கடந்த 11 நாள்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு அவருடைய உடல்நலம் மேலும் மோசமடைந்ததாக தகவல்கள் வெளியாயின. திமுக எம்.பி., எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள், முக்கிய தளகர்த்தர்கள் அனைவரும் சென்னைக்கு அழைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பல ஊர்களில் இருந்தும் காவேரி மருத்துவமனை முன்பு விடிய விடிய திரண்டு நின்று, 'எழுந்து வா தலைவா எழுந்து வா தலைவா...' என்று முழக்கமிட்டபடியே இருந்தனர...
எங்களுக்கு குடும்பத்தோடு சமாதி கட்டிவிடுங்கள்!; எட்டு வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் மீண்டும் குமுறல்!!

எங்களுக்கு குடும்பத்தோடு சமாதி கட்டிவிடுங்கள்!; எட்டு வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் மீண்டும் குமுறல்!!

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைக்காக விவசாய நிலத்தை எடுத்துக்கொண்டு அரசு தருவதாகச் சொல்லும் வீட்டு மனைப்பட்டா நிலத்தில் விவசாயிகளுக்கு குடும்பத்துடன் சமாதி கட்டிவிடச் சொல்லுங்கள் என்று வருவாய்த்துறை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின்போது விவசாயிகள் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினர்.   எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வீட்டுமனைப் பட்டா நிலத்தில், விவசாயிகளை குடும்பத்தோடு வைத்து சமாதி கட்டிவிடுங்கள் என்று அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின்போது விவசாயிகள் மீண்டும் குமுறலை வெளிப்படுத்தினர். சேலத்தை அடுத்த குள்ளம்பட்டி கிராமத்தில் நேற்று காலை இருபதுக்கும் மேற்பட்ட விவசாயிகள், சேலம் - சென்னை இடையில் அமையவுள்ள எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் உண்ணாநோன்பு இருக்கத் தொடங்கினர்.   வாழப்பாடி ...
எட்டு வழிச்சாலையை எதிர்த்து அம்மன் கோயிலில் நோன்பு இருக்கவும் போலீசார் தடை! 15 விவசாயிகள் திடீர் கைது!!

எட்டு வழிச்சாலையை எதிர்த்து அம்மன் கோயிலில் நோன்பு இருக்கவும் போலீசார் தடை! 15 விவசாயிகள் திடீர் கைது!!

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, எட்டு வழிச்சாலையை எதிர்த்து அம்மன் கோயிலில் உண்ணாநோன்பு இருக்க முயன்ற 15 விவசாயிகளை போலீசார் இன்று (ஆகஸ்ட் 5, 2018) கைது செய்தனர்.   சேலம் - சென்னை இடையே அமையவுள்ள எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைக்கு எதிராக சேலம் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, ராமலிங்கபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கறவை மாடுகளுக்கு கருப்புக்கொடி கட்டியும், அம்மனுக்கு பொங்கலிட்டு கோரிக்கை மனு கொடுத்தும் பண்பாட்டுத் தளத்தில் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குள்ளம்பட்டியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயில் வளாகத்தில் இன்று காலை 10.15 மணியளவில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றுகூடினர். எட்டு வழிச்சாலையை வரவிடாமல் தடுக்க வேண்டும் என்றும், விவசாயிகளையும், விவசாயத்தையும் காக்க வேண்டும் என்று...
ஜெராக்ஸ் கடைகள் மூலம் லஞ்சம் வசூலித்த சேலம் ஆர்டிஓ அதிகாரிகள்!; விஜிலன்ஸ் சோதனையில் சிக்கினர்

ஜெராக்ஸ் கடைகள் மூலம் லஞ்சம் வசூலித்த சேலம் ஆர்டிஓ அதிகாரிகள்!; விஜிலன்ஸ் சோதனையில் சிக்கினர்

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, விஜிலன்ஸ் போலீசில் சிக்கி விடாமல் இருப்பதற்காக லஞ்சப் பணத்தை ஜெராக்ஸ் கடைகள் மூலம் நூதனமுறையில் வசூலித்த ஆர்டிஓ அதிகாரி, பிரேக் இன்ஸ்பெக்டர்கள் வசமாக சிக்கினர்.   சேலத்தை அடுத்த உடையாப்பட்டியில் சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து (ஆர்டிஓ) அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வாகனங்களை பதிவு செய்தல், உரிமம் வழங்குதல், உரிமம் புதுப்பித்தல், பர்மிட் வழங்குதல், தகுதிசான்று வழங்குதல் ஆகிய சேவைகளுக்காக அதிகாரிகள் லஞ்சம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுகுறித்து சேலம் மண்டல லஞ்ச ஒழிப்புப் போலீசார் நேற்று காலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நேற்று மாலை 5 மணியளவில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு டிஎஸ்பி சந்திரமவுலி தலைமையிலான போலீசார் கிழக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.   இந்த சோதனையில் மேஜை டிராயர்கள், கோப்புகளின் உள்ப...
மேட்டூரில் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா; புதுமண தம்பதிகள் புது தாலி, புத்தாடை அணிந்து வழிபாடு!

மேட்டூரில் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா; புதுமண தம்பதிகள் புது தாலி, புத்தாடை அணிந்து வழிபாடு!

சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
  பத்தாண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை நிரம்பி வழிந்ததால், இந்தாண்டு ஆடிப்பெருக்கு விழாவை பக்தர்கள் உற்சாகமாக கொண்டாடி தீர்த்தனர்.   பஞ்சபூதங்களில் ஒன்றான நீருக்கு மரியாதை அளிக்கும் விதமாக ஆடிப்பெருக்கு விழாவை காவிரிக்கரையோர மக்கள் காலங்காலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இத்தகைய வழிபாட்டு கலாச்சாரம் வழக்கத்தில் இல்லை. ஆனால் கொங்கு மண்டலத்தில் குறிப்பாக காவிரி கரையோரம் உள்ள ஈரோடு, திருச்சி, சேலம், நாமக்கல் மற்றும் ஒகேனக்கல் காவிரி ஆறு பாயக்கூடிய தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஆடி 18 அன்று, பக்தர்கள் நீர்நிலைகளில் கூடி வழிபடுவது நடைமுறையில் இருந்து வருகிறது.   ஆடிப்பெருக்கு நீராடலின் பின்னணியில் இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது. அதாவது, மஹாபாரத இதிகாசத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் தொடர்ந்து 18 நாள்கள் போர் நடந்ததாகவும், போரில...
சேலம் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

சேலம் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே உடையாப்பட்டியில் சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்டிஓ) செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வாகனங்களை பதிவு செய்தல், பர்மிட் வழங்குதல், மீள்பதிவு செய்தல், தகுதிச்சான்று வழங்குதல் ஆகிய சேவைகளுக்காக லஞ்சம் கரைபுரண்டு ஓடுவதாக சேலம் மண்டல லஞ்ச ஒழிப்புப் பிரிவுக்கு புகார்கள் வந்தன.     இதுகுறித்து இன்று காலை (ஆகஸ்ட் 2, 2018) வழக்குப்பதிவு செய்த போலீசார், கிழக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் மாலை 5 மணியளவில் திடீர் சோதனையிலும் ஈடுபட்டனர். டிஎஸ்பி சந்திரமவுலி தலைமையில் மூன்று இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பத்து பேர், இந்த சோதனையில் ஈடுபட்டனர்.   குறிப்பாக, ஆர்டிஓ அதிகாரி கதிரவன் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்திருந்ததால் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர். பிரேக் இன்ஸ்பெக்டர்கள் குலோத்துங்கன், பதுமைநாதன் ஆகியோரிடம...
பெரியார் பல்கலை பேராசிரியர் பதவி இறக்கம்!; சிண்டிகேட் ஒப்புதல்

பெரியார் பல்கலை பேராசிரியர் பதவி இறக்கம்!; சிண்டிகேட் ஒப்புதல்

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  பெரியார் பல்கலையில் பேராசிரியர் மற்றும் நூலகராக பணியாற்றி வந்த சுப்ரமணியனிடம் இருந்து பேராசிரியர் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டு (Re-Designation) உள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட மிகை ஊதியத்தை திரும்பப் பெறவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.   சேலம் பெரியார் பல்கலையில் பேராசிரியர் மற்றும் நூலகராக பணியாற்றி வருபவர் சுப்ரமணியன். 1.12.2004ம் தேதி நூலகர் பணியில் சேர்ந்தார். நூலகர் பதவிக்கு ரூ.8000-275-13500 என்ற விகிதப்படி ஊதியம் நிர்ணயம் செய்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கு ரூ.16500-450-22400 என்ற விகிதப்படி அதாவது பேராசிரியர் பதவிக்குரிய ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.     அந்த வகையில் மட்டும் அவருக்கு இதுவரை ரூ.18.72 லட்சம் மிகை ஊதியமாக வழங்கப்பட்டு இருப்பது, 2015-2016ம் ஆண்டின் தணிக்கை அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பெரியார் பல்கலை சட்டவிதிகளில்,...