Friday, March 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Blog

சேலம் அரசு மருத்துவமனைக்கு புதிய முதல்வர் வந்தாச்சு!

சேலம் அரசு மருத்துவமனைக்கு புதிய முதல்வர் வந்தாச்சு!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய முதல்வராக இருதயவியல் துறை மருத்துவர் திருமால்பாபு (55) இன்று (ஜனவரி 29, 2019) பொறுப்பேற்றுக் கொண்டார்.   சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வந்த கனகராஜ், கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, ஜூலை 5, 2018ம் தேதி, பிளாஸ்டிக் சர்ஜரி துறை மூத்த மருத்துவர் எம்.கே.ராஜேந்திரன் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்றார்.   சேலம் மட்டுமின்றி, முதல்வர் பணியிடம் காலியாக இருந்த தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் புதிதாக முழுநேர முதல்வர்களை நியமித்து, தமிழக அரசு கடந்த ஆண்டு செப். 12ம் தேதி உத்தரவிட்டது. அப்போது, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வ...
விவசாயிகள் என்ன பயங்கரவாதிகளா?; இபிஎஸ் அரசின் தலைகீழ் விகிதங்கள்!!

விவசாயிகள் என்ன பயங்கரவாதிகளா?; இபிஎஸ் அரசின் தலைகீழ் விகிதங்கள்!!

காஞ்சிபுரம், சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
  எட்டுவழிச்சாலைக்கு எதிராக கிளர்ந்தெழும் விவசாயிகளிடம் திட்டத்தின் நோக்கம் குறித்து வெளிப்படையாக பேச மறுக்கும் அரசு, வெடிகுண்டு தடுப்புப்பிரிவு, கியூ பிரிவுகள் மூலம் உளவியல் ரீதியில் ஒடுக்குவதன் மூலம், அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயல்கிறதோ என்ற அய்யம் எழுந்துள்ளது. சேலம் முதல் சென்னை வரையில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் எட்டுவழிச்சாலை அமைப்பதற்கான வேலைகளில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியுள்ளன. இத்திட்டத்திற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் கையகப்படுத்தப்பட உள்ள தனியார் நிலங்களில் பெரும் பகுதி இருபோகம் விளைச்சலைத் தரக்கூடிய விளைநிலங்கள் ஆகும்.   இதனால் ஆரம்பத்தில் இருந்தே எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு மேற்சொன்ன ஐந்து மாவட்டங்களிலும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ...
பேராசிரியரை தாக்கியதாக பெரியார் பல்கலை மாஜி துணைவேந்தர், பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு!

பேராசிரியரை தாக்கியதாக பெரியார் பல்கலை மாஜி துணைவேந்தர், பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு!

கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  ஊழல் புகார்களைத் தொடர்ந்து தற்போது உதவி பேராசிரியரை தாக்கியதாக மற்றொரு சர்ச்சையிலும் பெரியார் பல்கலை முன்னாள் துணை வேந்தர், பதிவாளர், டீன் ஆகியோர் சிக்கியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலத்தை அடுத்த சித்தனூர் புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் (52). இவர் பெரியார் பல்கலையில் பொருளாதார துறையில் உதவி பேராசிரியராக கடந்த 2005ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவர் சேலம் மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதன் சாராம்சம்: கடந்த 29.3.2017ல் திருச்சியில் இருந்து வெளியான தினமலர் நாளிதழில் பெரியார் பல்கலையில் நடந்து வரும் ஊழல் தொடர்பாக ஒரு செய்தி வெளியானது. அந்த செய்தியில், அப்போது துணை வேந்தராக இருந்த சுவாமிநாதன், லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதாகவும், பதவி ...
கோகுல்ராஜ் கொலை வழக்கு: ‘சிறப்பான, தரமான சம்பவங்கள் இனிமேல்தான் வரப்போகுது!’ #Gokulraj #Day17

கோகுல்ராஜ் கொலை வழக்கு: ‘சிறப்பான, தரமான சம்பவங்கள் இனிமேல்தான் வரப்போகுது!’ #Gokulraj #Day17

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசுத்தரப்பில் அடுத்தடுத்து விஞ்ஞானப்பூர்வ தடயங்கள் பற்றி, சாட்சிகள் வாக்குமூலம் அளிக்க உள்ளனர். அதனால் யுவராஜ் தரப்பு மற்றும் அரசுத்தரப்பு வழக்கறிஞர்களிடையே நீதிமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என்பதால் இப்போதே எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23), கடந்த 2015, ஜூன் 23ம் தேதி சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். ஜூன் 24ம் தேதி மாலை, திருச்செங்கோடு கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, உடல் வேறாக துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றினர்.   இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். குமார் என்கிற சிவக்குமார், சதீஸ் என்கிற சதீஸ்கும...
காவல்நிலையங்களுக்கு தனி வாட்ஸ்அப் குழு! ‘சிறப்பான பணிகளை பதிவேற்றுங்கள்!!’

காவல்நிலையங்களுக்கு தனி வாட்ஸ்அப் குழு! ‘சிறப்பான பணிகளை பதிவேற்றுங்கள்!!’

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையமும் தங்களுக்கென தனி வாட்ஸ்அப் குழுவை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.   தமிழக காவல்துறையை புலனாய்வில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக ஒப்பிட்டு பேசப்பட்டு வந்தாலும், அண்மைக்காலமாக மக்களுடன் நெருங்கிச் செல்ல காவல்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன.   ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களின் வாழ்நிலை, முக்கிய பிரமுகர்கள், அவர்களின் தொழில், முக்கிய தொடர்புகள் குறித்த விவரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், மக்கள் எளிதில் காவல்துறை உதவியை நாடும் வகையில் அந்தந்த சரக காவலர் முதல் உயரதிகாரிகளின் செல்போன் எண்களை பொது இடங்களில் வெளியிட உத்தரவிடப்பட்டு உள்ளது.   பல மாநகரங்களில் பொதுமக்கள் நேரடியாக வாட்ஸ்அப் மூலம் புகார்களை பதிவு செய்யவும் ...
‘சேலம் சங்கமம்’ தமிழர் கலைவிழா! நாளை நடக்கிறது!!

‘சேலம் சங்கமம்’ தமிழர் கலைவிழா! நாளை நடக்கிறது!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  காணும் பொங்கல் விழாவையொட்டி, சேலத்தில் நாளை (17.1.2019, வியாழக்கிழமை) மாலை 'சேலம் சங்கமம் - 2019' என்ற பெயரில் சிறப்பு கலை விழா நடக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய விழாக்களுள் ஒன்றான பொங்கல் விழா, பழையன கழிந்து புதியன புகும் போகியில் தொடங்கி, உற்றார், உறவினர்களை நேரில் சென்று சந்தித்து உறவாடும் காணும் பொங்கலுடன் நிறைவடைகிறது. பொங்கல் விழாவின் நான்காவது மற்றும் கடைசி நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில், உறவினர்களைச் சந்தித்து கூடிப்பிரிதல் மட்டுமின்றி, கேளிக்கைகளிலும் ஈடுபடுவது நம் மரபு.   இந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், கந்தாஸ்ரமம் முருகன் கோயில் பின்புறம் உள்ள கிரீன் வேலி ஸ்போர்ட்ஸ் கிளப்புக்குச் சொந்தமான கிரிக்கெட் மைதானத்தில், 'சேலம் சங்கமம்-2019' என்ற கேளிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.   இந்நிகழ...
கோகுல்ராஜ் கொலை வழக்கு: குற்றவாளியை தவறாக அடையாளம் காட்டிய அரசுத்தரப்பு சாட்சி!#Gokulraj #Day16

கோகுல்ராஜ் கொலை வழக்கு: குற்றவாளியை தவறாக அடையாளம் காட்டிய அரசுத்தரப்பு சாட்சி!#Gokulraj #Day16

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், குற்றவாளிக்கூண்டில் இருந்த முக்கிய எதிரியை தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் தவறாக அடையாளம் காட்டிய அரசுத்தரப்பு சாட்சியால் சிபிசிஐடி போலீசார் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23), கடந்த 23.6.2015ம் தேதியன்று ஆணவக்கொலை செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் அவருடைய சடலம், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, அருண், சங்கர், சதீஸ் என்கிற சதீஸ்குமார், குமார் என்கிற சிவக்குமார் உள்ளிட்ட 17 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.   ஆணவக்கொலை போன்ற பரபரப்பான வழக்குகளை ஆறு மாதத்தி...
சேலத்தில் கோயிலில் ரகசிய அறை அமைத்து லஞ்சம் வசூல்: இந்துசமய அறநிலைய அதிகாரி சிக்கினார்!

சேலத்தில் கோயிலில் ரகசிய அறை அமைத்து லஞ்சம் வசூல்: இந்துசமய அறநிலைய அதிகாரி சிக்கினார்!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்தில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோயிலில் ரகசிய அறை அமைத்து ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரை கையும்களவுமாக காவல்துறையினர் பிடித்தனர்.   சேலத்தில் மிகவும் பழமையான சுகவனேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் குடமுழுக்குப் பணிக்காக தற்போது மராமத்துப்பணிகள், திருப்பணிகள் நடந்து வருகின்றன. இதுபோன்ற பணிகளை இந்துசமய அறநிலையத்துறை ஒப்பந்ததாரர்கள் மூலம் செய்து வருகிறது.   இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒப்பந்ததாரர்களிடம் இனாம் வழங்குமாறு இந்துசமய அறநிலைய உதவி ஆணையர் தமிழரசு கேட்டுள்ளார். அவ்வாறு இனாம் கொடுத்தால்தான், இனி வரும் காலத்திலும் கோயில் மராமத்துப்பணிகள் ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும் மிரட்டி வந்துள்ளார். லஞ்சப்பணத்தை, சேலம் தேர்வீதியில் உள்ள ராஜகணபதி கோயிலை ஒட்டியுள்ள ரகசிய அறையில் வந்து கொடுக்கும்பட...
திமுகவை திணறடித்த ரூ.1000 டோக்கன்! சொதப்பிய ஊராட்சி சபைக்கூட்டங்கள்!!

திமுகவை திணறடித்த ரூ.1000 டோக்கன்! சொதப்பிய ஊராட்சி சபைக்கூட்டங்கள்!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  மக்களவை தேர்தலையொட்டி, கடைக்கோடி மக்களையும் சந்திக்கும் வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்த திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. 'மக்களிடம் செல்வோம்; மக்களிடம் சொல்வோம்; மக்கள் மனதை வெல்வோம்' என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் ஜனவரி 9ம் தேதி, ஊராட்சி சபைக் கூட்டங்களை தொடங்கியது திமுக. ஊராட்சி சபைக் கூட்டங்கள் என்பது கிட்டத்தட்ட, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே நடத்திய 'நமக்கு நாமே' பயணத்தின் இரண்டாம் பாகம்போலதான் இருக்கிறது. இதில், மு.க.ஸ்டாலினுக்கு பதிலாக அந்தந்த தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் மக்களை சந்தித்து குறைகளைக் கேட்கின்றனர்.   சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் எம்எல்ஏ ராஜேந்திரன் உடல்நலம் குன்றியதால், மக்களவை தேர்தல் பணிகள் வேகமெடுக்காமல் இருந்தன.   கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட உடன்பிறப்புகளும், தேர்தல் பணிகளை மறந்த நிலைய...
சேலம்: ஓசியில் கறி கேட்டு முதியவரிடம் வீரம் காட்டிய காக்கிகள்! இடமாற்றத்தால் மன்னிப்பு கேட்டு கெஞ்சல்!!

சேலம்: ஓசியில் கறி கேட்டு முதியவரிடம் வீரம் காட்டிய காக்கிகள்! இடமாற்றத்தால் மன்னிப்பு கேட்டு கெஞ்சல்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்தில் ஓசியில் இறைச்சி தர மறுத்த முதியவரை ஏக வசனத்தில் பேசியதுடன், அடித்து உதைத்த இரண்டு எஸ்ஐக்கள் அதிரடியாக இடமாறுதல் செய்யப்பட்டனர்.   சேலத்தை அடுத்த கம்மாளப்பட்டியைச் சேர்ந்தவர் மூக்குத்தி கவுண்டர் (75). இவர், சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையம் அருகே கறிக்கடை நடத்தி வருகிறார். நேற்று (ஜனவரி 13) காலை காவல்துறை ஜீப்பில் வந்த அன்னதானப்பட்டி உதவி காவல் ஆய்வாளர் பாலசுப்ரமணி, வாகனத்தில் இருந்தபடியே, '2 கிலோ ஆட்டுக்கறி சீக்கிரம் வெட்டுடா....' என அதிகார தொனியில் கேட்டார். ஓரளவு கூட்டம் இருந்த நிலையில், பலர் முன்னிலையில் உதவி ஆய்வாளர் கண்ணியக்குறைவாக கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மூக்குத்தி கவுண்டர், 'ஏங்க உங்க வயசு என்ன... என்னோட வயசு என்ன... கொஞ்சமாவது வயசுக்கு மரியாதை கொடுங்க,' என்று கூறினார்.   இதனால் ஆத்திரம...