Saturday, March 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Blog

நீங்கள் யாரையாவது பழிவாங்கணுமா? சாஹோ படத்திற்கு டிக்கெட் வாங்கி கொடுங்க!

நீங்கள் யாரையாவது பழிவாங்கணுமா? சாஹோ படத்திற்கு டிக்கெட் வாங்கி கொடுங்க!

சினிமா, முக்கிய செய்திகள்
சர்வதேச நிழல் உலக தாதா ஒருவர் திடீரென்று எதிரிகளால் கொல்லப்படுகிறார். அவருக்குப் பிறகு நிழல் உலகை ஆளப்போவது யார்? என்பதுதான் சாஹோ படத்தின் ஒரு வரி கதை. ஒரு கமர்ஷியல் படத்திற்கு இந்தக் கதையே போதுமானதுதான். பாகுபலி, பாகுபலி-2 படங்கள் பெற்ற பெரு வெற்றி காரணமாக பிரபாஸ் மீது ரொம்பவே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், அதற்காக வலுவான கதையோ, திரைக்கதையோ இல்லாமல் வெறும் பிரம்மாண்டத்தை மட்டுமே கட்டி எழுப்பி படத்தைக் கட்டமைக்க முடியுமா? பிரபாஸ் இருந்தாலே போதும், போட்ட பணத்தை கல்லா கட்டிவிட முடியும் என நம்பி படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் சுஜீத்.   கதைப்படி (கதை என்று ஒன்று இல்லை. ஆனாலும் 'ஒரு ஊர்ல...' என்று சொன்னால்தானே கதை வரும்? அதுபோலதான் 'கதைப்படி' என்பதும்), பிரபாஸ் அண்டர் கவர் ஆபரேஷனில் இருக்கும் போலீஸ் அதிகாரி. நமக்கு தெர...
டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10000 ரூபாய் உதவித்தொகை!

டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10000 ரூபாய் உதவித்தொகை!

கல்வி, தகவல், முக்கிய செய்திகள்
(தகவல்)   'பிச்சை புகினும் கற்கை நன்றே' என்பதுதான் அவ்வை வாக்கு. பொருளாதார நெருக்கடிகள் கல்வி பயிலும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு எந்த விதத்திலும் தடைக்கல்லாக இருந்து விடக்கூடாது என்பதற்காகவே, மத்திய அரசு உதவித்தொகை திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. மத்திய அரசின் பல உதவித்தொகைத் திட்டங்கள் மாணவர்களுக்கு தெரிவதில்லை அல்லது கல்வி நிலையங்கள் அதுபற்றி பெரிதாக அக்கறை காட்டுவதில்லை.   அது என்ன திட்டம்? பிளஸ்-2 முடித்துவிட்டு, நடப்புக் கல்வி ஆண்டில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்.   தகுதிகள் என்னென்ன?:   1. பிளஸ்-2வில் 80 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்   2. பிளஸ்-2வை பள்ளியில் சேர்ந்து பயின்றிருக்க வேண்டும். தனித்தேர்வராகவோ, தொலைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலமோ படித்திர...
உலகக்கோப்பை ஏர் ரைஃபிள் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை!

உலகக்கோப்பை ஏர் ரைஃபிள் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை!

உலகம், கடலூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விளையாட்டு
பிரேசிலில் நடந்த துப்பாக்கி சுடுதல் (ஏர் ரைஃபிள்) போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் கடலூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை இளவேனில் வாலறிவன். அவருக்கு உலகம் முழுவதும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.   பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில், தற்போது மூத்தோர்களுக்கான உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் (ஏர் ரைஃபிள்) போட்டி நடந்து வருகிறது. உலகம் முழுவதும் 72 நாடுகளைச் சேர்ந்த 541 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.   நேற்று (ஆகஸ்ட் 28, 2019) நடந்த இறுதிப்போட்டியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இரண்டாம் இடத்தை, பிரிட்டனை சேர்ந்த வீராங்கனை சியோனட் மின்டோஸ் பெற்றார். அவர் 250.6 புள்ளிகள் எடுத்தார்....
8 லட்சம் கடனுக்கு 6 கோடி ரூபாய் சொத்தை வளைத்துப்போட்ட சங்ககிரி தொழில் அதிபர்கள் கைது! சிபிசிஐடி போலீசார் அதிரடி!!

8 லட்சம் கடனுக்கு 6 கோடி ரூபாய் சொத்தை வளைத்துப்போட்ட சங்ககிரி தொழில் அதிபர்கள் கைது! சிபிசிஐடி போலீசார் அதிரடி!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
FOLLOW-UP   சங்ககிரியில், எட்டு லட்சம் ரூபாய் கடனுக்கு 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை சட்ட விரோதமாக கிரயம் செய்துகொண்ட பிரபல தொழில் அதிபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.   சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள காவடிக்காரனூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (52). விவசாயி. மனைவி, ஒரு மகள் உள்ளனர். இவர், சங்ககிரியைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர்களான சண்முகம், அவருடைய தம்பி மணி ஆகியோரிடம் கடந்த 1998ம் ஆண்டு 8 லட்சம் ரூபாய் கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். புதிதாக டிப்பர் லாரிகள் வாங்குவதற்காக கடன் பெற்றிருந்தார். 3 ரூபாய் வட்டிக்கு கடன் கொடுத்துள்ளனர்.   இதற்காக அவரிடம் இருந்து சண்முகமும், மணியும் 23 ஏக்கர் நிலத்தை 'பவர்' பத்திரம் எழுதி பெற்றுக்கொண்டனர். மேலும், வெங்கடேசன் தனித்தனியாக மூன்று வெற்றுக் காசோலைகளிலும், ஒரு வெற்று பாண்டு பத்திரத்தில...
பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

கல்வி, தகவல், முக்கிய செய்திகள்
-தகவல்-   பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேசிய திறனாய்வுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, தமிழக அரசுத்தேர்வுகள் இயக்ககம் அழைப்பு விடுத்துள்ளது.   பள்ளி மாணவர்களிடையே அறிவியல், சமூக அறிவியல் படிப்புகளின் மீது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் தேசிய திறனாய்வுத்தேர்வு (NTSE - National Talent Search Examination) நடத்தப்பட்டு, உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 1963ம் ஆண்டு முதல் இத்திட்டம் அமலில் இருந்து வருகிறது. தேசியக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு (NCERT) இத்தேர்வை நடத்தி வருகிறது. அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து அரசு, தனியார், நிதியுதவி பெறும் பள்ளிகளில் தற்போது பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.   இரண்டு நிலைகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் ...
சேலம் ஜி.ஹெச். டாக்டர் உள்பட தமிழகத்தில் 20 பேருக்கு சிறந்த மருத்துவர் விருது!

சேலம் ஜி.ஹெச். டாக்டர் உள்பட தமிழகத்தில் 20 பேருக்கு சிறந்த மருத்துவர் விருது!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தனபால் உள்பட தமிழகம் முழுவதும் 20 பேருக்கு சிறந்த மருத்துவர் விருது இன்று (2019 ஆகஸ்ட் 22) மாலை வழங்கப்படுகிறது.   மருத்துவத்துறையில் சிறப்பான பங்களிப்பைச் செய்து வரும் மருத்துவர்களைக் கவுரவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் சிறந்த மருத்துவர் விருது வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புற மக்களுக்கு சேவை, தனித்திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கும் இந்த விருது மற்றும் வெகுமதியை வழங்கி தமிழக அரசு கவுரவித்து வருகிறது. கடந்த 2012ம் ஆண்டில் இருந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2018ம் ஆண்டிற்கான சிறந்த மருத்துவர்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டது. மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்ககத்தின் கீழ் பணியாற்றி வரும் திருவள்ளூர் பொன்னேரி அ...
பெரியார் பல்கலையில் 28 கோடி ரூபாய் ஊழல்! தொடரும் தில்லுமுல்லு; தணிக்கையில் அம்பலம்!!

பெரியார் பல்கலையில் 28 கோடி ரூபாய் ஊழல்! தொடரும் தில்லுமுல்லு; தணிக்கையில் அம்பலம்!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலையில் போலி ஆசிரியர்கள் நியமனம், தவறான ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட புகார்கள் மட்டுமின்றி, 28 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கலாம் என்று 2016-2017ம் ஆண்டின் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.   ஒரு பல்கலைக்கழகம் எப்படி எல்லாம் இருக்கக்கூடாதோ அப்படி எல்லாமுமாக இருந்து வருகிறது சேலம் பெரியார் பல்கலைக்கழகம். இன்னும் சில ஆண்டுகளில் வெள்ளிவிழாவை எதிர்நோக்கி இருக்கும் இப்பல்கலை, யுஜிசி, பல்கலை விதிகள், உயர்கல்வித்துறை என எதன் சட்ட வரையறைக்குள்ளும் அகப்படாமல் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளால், கடும் சீர்கேடுகளை அடைந்திருக்கிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை மெய்ப்பிக்கும் நோக்கில் 1997ல் தொடங்கப்பட்டதுதான் பெரியார் பல்கலை. இந்நான்கு மாவட்டங்களிலும் த...
விடைத்தாள் டெண்டரில் ஊழல்! பெரியார் பல்கலை மீது புது புகார்; விஜிலன்ஸ் விசாரணை!!

விடைத்தாள் டெண்டரில் ஊழல்! பெரியார் பல்கலை மீது புது புகார்; விஜிலன்ஸ் விசாரணை!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆசிரியர் நியமனத்தில் ஊழல், போலி சான்றிதழ் விவகாரங்களில் சிக்கித் திணறி வரும் பெரியார் பல்கலையில் விடைத்தாள் கொள்முதல் செய்ததிலும் பல லட்ச ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக புதிதாக மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது.   சேலம் பெரியார் பல்கலையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரடியாக பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகளை படித்து வருகின்றனர். தவிர, இப்பல்கலையின் நேரடி நிர்வாகத்தின் கீழ் எடப்பாடி, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய நான்கு இடங்களில் உறுப்புக்கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி கலைக்கல்லூரிகள் என 101 கல்லூரிகள் இப்பல்கலையுடன் இணைவு பெற்றுள்ளன. பல்கலை மற்றும் உறுப்புக்கல்லூரிகள், இணைவு கல்லூரிகள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படி...
இதற்காகத்தான் சேலம் மாநகராட்சிக்கு விருது! சும்மா ஒண்ணும் தரல!!

இதற்காகத்தான் சேலம் மாநகராட்சிக்கு விருது! சும்மா ஒண்ணும் தரல!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சிறந்த மாநகராட்சிக்கான விருதுக்கு இந்த முறை சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு இருப்பது நமக்கெல்லாம் பெருமைதான். ஆனால், அதற்கான தகுதிகள் இருக்கின்றனவா என்பதை கூர்ந்தாய்வு செய்தால், கேள்விகளே மிஞ்சும். எங்கு பார்த்தாலும் சுகாதாரச் சீர்கேடு, பொதுக்கழிப்பறை இருந்தால் தண்ணீர் இருக்காது, தூய்மை இந்தியா திட்டத்தைப் போற்றுவோம்... ஆனால் திறந்தவெளி மலம் கழித்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாட்டோம். திடக்கழிவு மேலாண்மைப் பற்றி பேசுவோம்... ஆனால், செட்டிச்சாவடி குப்பைக்கிடங்கை மூடுவோம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இப்படித்தான் இருக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம். இதற்குதான், அவார்டெல்லாம் கொடுக்கிறார்கள்.   ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காகவெல்லாம் குறை சொல்லவில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் கணக்கில், நாம் மணியனூரில் உள்ள ஆட்டிறைச்சிக் கூடத்தை நேரில் பார்வையிட்டோ...
சேலம் மைய நூலகத்திற்கு அடுத்த சிக்கல்; பாஜக, இந்து முன்னணியும் இடம் கேட்டு கோதாவில் குதிப்பு!

சேலம் மைய நூலகத்திற்கு அடுத்த சிக்கல்; பாஜக, இந்து முன்னணியும் இடம் கேட்டு கோதாவில் குதிப்பு!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்ட மைய நூலகத்திற்குச் சொந்தமான இடத்தை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படுவதாக வந்த தகவலால், அதிர்ச்சி அடைந்த பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள், தங்கள் கட்சிகளுக்கும் நூலக வளாகத்தில் கடை கட்டிக்கொள்ள இடம் ஒதுக்குமாறு திடீர் கோதாவில் குதித்துள்ளனர்.   சேலம் குமாரசாமிப்பட்டியில் அரசு இருபாலர் கலைக்கல்லூரி அருகில், மாவட்ட மைய நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தின் பின்பகுதியில் 5000 சதுர அடிக்கு மேல் காலி நிலம் உள்ளது. இந்த இடத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு கடை கட்டிக்கொள்ள சேலம் மாவட்ட நிர்வாகம் இசைவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதற்காக நிலம் கையகப்படுத்தும்போது, பழைய பேலஸ் தியேட்டர் எதிரில் செயல...