Saturday, March 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Blog

திரவுபதி – திரை விமர்சனம்! சரக்கு முறுக்கு பசங்க மட்டும்தான் நாடகக்காதல் செய்கிறார்களா?

திரவுபதி – திரை விமர்சனம்! சரக்கு முறுக்கு பசங்க மட்டும்தான் நாடகக்காதல் செய்கிறார்களா?

சினிமா, சேலம், முக்கிய செய்திகள்
கிராமத்தில் செல்வாக்குடன் விளங்கும் ஒரு குடும்பத்தை பழிவாங்குவதற்காக அந்த வீட்டுப் பெண்ணுக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நடந்ததாக போலியாக பதிவுச்சான்றிதழ் பெற்று சமூக வலைத்தளங்களில் உலாவவிடுகிறது ஒரு கும்பல். அதைப்பார்த்த பெண்ணின் தந்தை, அவமானம் தாளாமல் தற்கொலை செய்து கொள்கிறார். அந்தப்பெண்ணையும் அவருடைய அக்காவையும் அந்த கும்பல் கொன்றுவிட்டு, கொலைப்பழியை பெண்ணின் அக்காள் கணவர் மீது போட்டு விடுகிறது. கொலை முயற்சியில் தப்பிக்கும் அப்பெண்ணின் அக்கா திரவுபதி, தன் கணவர் மூலம் கொலைகாரர்களை பழி வாங்கினாரா? இல்லையா? என்பதுதான் திரவுபதி படத்தின் மையக்கதை.   'சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற மகாகவி பாரதியின் வரிகளை மறுதலித்து, 'சாதிகள் உள்ளதடி பாப்பா' என்று திரவுபதி படத்தின் டிரைலரில் குறிப்பிட்டு இருந்தார் இயக்குநர் மோகன். டிரைலரில் வந்த சில வசனங்கள...
அமெரிக்க கோழிகளால் ஆபத்து! 4 கோடி பேருக்கு வேலை பறிபோகும்; எச்சரிக்கும் பண்ணையாளர்கள்!!

அமெரிக்க கோழிகளால் ஆபத்து! 4 கோடி பேருக்கு வேலை பறிபோகும்; எச்சரிக்கும் பண்ணையாளர்கள்!!

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கோழிகளை இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தால், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் காலம்காலமாக கோழிப்பண்ணைத் தொழிலை நம்பி இருக்கும் 4 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோவதோடு, கடும் பொருளாதார இழப்பும் ஏற்படும் என்று கோழி பண்ணையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. உலக வர்த்தக ஒப்பந்தத்தின்பேரில் இந்தியாவில் இதுவரை பாரம்பரியமாக நடைபெற்று வந்த பல தொழில்கள் பெரும் சரிவை நோக்கிச் சென்று வருகின்றன. பல குடிசைத்தொழில்கள் அழிந்தே விட்டன. மிட்டாய் முதல் நொறுக்குத்தீனி தயாரிப்பு வரை பன்னாட்டு நிறுவனங்களின் நாலுகால் பாய்ச்சலால், இந்தியா ஆகப்பெரும் சந்தையாக உருவெடுத்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் பார்வையில், இந்தியர்கள் வெறும் நுகர்வோர்களாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறோம்.   இந்நிலையில்தான், உலகளவில் முட்டை, கறிக்கோழ...
நிச்சயமாக மோடி ஒரு பாசிசவாதிதான்! ஜாவேத் அக்தர் அதிரடி தாக்கு!!

நிச்சயமாக மோடி ஒரு பாசிசவாதிதான்! ஜாவேத் அக்தர் அதிரடி தாக்கு!!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
கலை, இலக்கியத் துறைகளில் இயங்கி வரும் படைப்பாளிகள் தொடக்கத்தில் இருந்தே நடுவண் பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக சாடி வருகின்றனர். பாலிவுட்டில் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் காட்டும் ஜாவித் ஆக்தர் மற்றும் அவருடைய சகாவும், பிரபல இயக்குநருமான மகேஷ் பட் ஆகியோர், மோடியை குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போட்டுத் தாக்கி வருகின்றனர்.   இந்நிலையில், அவர்கள் இருவரும் அல் ஜஸீரா செய்தி சேனலுக்கு வியாழனன்று (பிப். 13) அளித்த நேர்காணலில், மோடி மீது மீண்டும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். ஜாவேத் அக்தர், 'சந்தேகமே இல்லாமல் மோடி ஒரு பாசிசவாதிதான்' என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். அந்த டிவி சானலின் நெறியாளர் ஜாவேத் ஆக்தரிடம், ''மோடி ஒரு பாசிசவாதி என்று ஜாவேத் கருதுகிறாரா?,'' என...
வறுமை இருளில் இருந்து மீண்ட 20 ஆயிரம் குடும்பங்கள்! அமைதி புரட்சியில் சேலம் களஞ்சியம் பெண்கள்!!

வறுமை இருளில் இருந்து மீண்ட 20 ஆயிரம் குடும்பங்கள்! அமைதி புரட்சியில் சேலம் களஞ்சியம் பெண்கள்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆன பின்பும்கூட இந்தியாவைப் பீடித்திருக்கும் ஏழ்மையின் பிடியில் இருந்து நம்மால் இன்னும் முற்றாக மீள இயலவில்லை. ஆனால் வறுமை ஒழிப்புத் திட்டங்களை உருவாக்குவதில் ஒவ்வொரு அரசும், முனைப்பு காட்டுகிறதே தவிர, செயலாக்கம் என்று வரும்போது நுட்பமாக பார்க்கத் தவறி விடுகிறது. அதுதான், இந்த நீடித்தத் துயரத்திற்குக் காரணம்.   வறுமையை ஒழிப்பதில் வருவாய் உருவாக்கத்தின் மையக் கருத்தை மறைந்த பிரதமர் இந்திராகாந்தி மட்டுமே முழுமையாக விளங்கிக் கொண்டார். அவர் காலத்தில் இருந்துதான் ஏழ்மை ஒழிப்புக்கான பணிகள் புது வேகம் எடுக்கத் தொடங்கின. அதாவது, 1980களில். பானர்ஜி என்பவர், 'ஏழைகளின் பொருளாதாரம்' பற்றிய தனது நூலில், வறுமை ஒழிப்பில் நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வுகளை பேசாமல் பிரச்னைகளை மட்டுமே பேசுவது மேம்பாட்டுக்கு உதவாது,' என்கிறார். சேலத்தில் செயல்பட்டு வரும் களஞ்சியம்...
சேலம் திமுகவில் சரிந்தது வீரபாண்டியார் குடும்ப சாம்ராஜ்யம்! ராஜா நீக்கத்தின் பின்னணி என்ன?

சேலம் திமுகவில் சரிந்தது வீரபாண்டியார் குடும்ப சாம்ராஜ்யம்! ராஜா நீக்கத்தின் பின்னணி என்ன?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''கட்சியின் வளர்ச்சிக்காக நான் சர்வாதிகாரியாகவும் மாறுவேன். தவறு செய்தவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் திருத்தப்படுவார்கள்,'' என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த கட்சியின் பொதுக்குழுவில் கொஞ்சம் காட்டமாகவே சொன்னார். கலைஞர் பாணியிலான அரசியலில் இருந்து சற்றே விலகி, ஜெ., மாடல் அரசியலுக்கு தயாராகி விட்டார் என்பதை, அப்போதே உடன்பிறப்புகள் உணர்ந்திருப்பார்கள். பொதுக்குழுவில் கர்ஜித்தது, இப்போது அடுத்தடுத்து நடந்து வரும் களையெடுப்பு நடவடிக்கைகள் கழக கண்மணிகளை கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்குத்து வேலைகளில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகள் கட்டம் கட்டப்பட்டு வருகின்றனர்.   முதல்கட்டமாக, சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றிய செயலாளர் ஏ.டி.பாலுவை கடந்த ...
சேலம்: சூரியூர் கிராமம் எங்கே? 28 ஆண்டாக தொடரும் சர்ச்சை!

சேலம்: சூரியூர் கிராமம் எங்கே? 28 ஆண்டாக தொடரும் சர்ச்சை!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் அருகே, இரண்டு மலைகளுக்கு இடையே பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த சூரியூர் பள்ளக்காடு கிராமம் வருவாய்த்துறை ஆவணங்களில் இருந்து திடீரென்று தொலைந்து போனதாக சொல்லப்பட, 28 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமத்தைத் தேடும் பணிகளில் வனக்கிராம மக்கள் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்டது சூரியூர் பள்ளக்காடு எனும் வனக்கிராமம். ஜல்லுத்துமலை, ஜருகுமலை ஆகிய இரு மலைகளுக்கு இடையே பள்ளத்தாக்கில் இந்த ஊர் அமைந்துள்ளது. இந்த வனக்கிராமத்தில் 77 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருவதுடன், மலையடிவாரத்தில் மலர், மஞ்சள், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களும் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், சேர்வராயன் தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட, காப்புக்காடாக அறிவிக்கப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், வனப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேற...
சேலம்: போதை ஆசிரியர் பணியிடை நீக்கம்; பள்ளியில் குறட்டை விட்டு தூக்கம்!

சேலம்: போதை ஆசிரியர் பணியிடை நீக்கம்; பள்ளியில் குறட்டை விட்டு தூக்கம்!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சங்ககிரி அருகே, அரசுப்பள்ளியில் குடிபோதையில் வகுப்பறையில் தூங்கிய ஆசிரியர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.   அரசுப்பள்ளிகளில் தரமற்ற கற்பித்தல் முறை, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் ஏற்கனவே மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், ஒழுக்கக்கேடான ஆசிரியர்களால் மேலும் சீர்குலைந்து வருகின்றன. சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கே.மேட்டுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 முதல் 5ம் வகுப்பு வரையிலும் மொத்தமே 20க்கும் குறைவான குழந்தைகளே படித்து வருகின்றனர். இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இருதயராஜ் என்பவர் தலைமை ஆசிரியராகவும், அறிவழகன் என்பவர் இடைநிலை ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.   மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆச...
ஆளுங்கட்சியினர் என்னிடம் 80 லட்சம் ரூபாய் பேரம் பேசினாங்க! முதல் திருநங்கை கவுன்சிலர் ரியா தடாலடி!!

ஆளுங்கட்சியினர் என்னிடம் 80 லட்சம் ரூபாய் பேரம் பேசினாங்க! முதல் திருநங்கை கவுன்சிலர் ரியா தடாலடி!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
தமிழகத்தில், அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பணம் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தினாலும், உள்ளூரில் செல்வாக்கு படைத்த சாமானியர்களும் பரவலாக வெற்றி பெற்றிருப்பதையும் காண முடிந்தது. அதேநேரம், முதன்முறையாக மாநில கட்சிகள் அளவில், திருநங்கை ஒருவரும் ஒன்றிய கவுன்சிலராக அதிரி புதிரியாக வெற்றி பெற்று மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து இருக்கிறார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம், இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட கருவேப்பம்பட்டி ஊராட்சி, கடந்த இருபது ஆண்டுக்கும் மேலாக அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்திருக்கிறது. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே திருநங்கையான ரியா (29), அதிமுக கோட்டையை தகர்த்தெறிந்து திமுக வசமாக்கி இருக்கிறார். ஆண் பாதி, பெண் பாதியாக காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரர் மண்ணில் திருநங்கையான ரியா வெற்றி பெற்றிருப்பது தர்க்க ரீதியில...
வாக்குச்சாவடிகளில் வதைபடும் ஆசிரியர்கள்! மீறப்படும் மனித உரிமைகள்!!

வாக்குச்சாவடிகளில் வதைபடும் ஆசிரியர்கள்! மீறப்படும் மனித உரிமைகள்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு போதிய கழிப்பறைகள், தண்ணீர், உணவு வசதிகள் செய்து தராமல் ஒவ்வொருமுறையும் தங்களை அரசும், தேர்தல் ஆணையமும் கிள்ளுக்கீரையாக நடத்துவதாக கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது. தேர்தல் பணிகளை முடித்துவிட்டுச் செல்லும் ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர். தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அண்மையில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. தேர்தலில் வாக்களிப்பதோடு ஒரு வாக்காளனின் ஜனநாயக கடமை முடிந்து விடுகிறது. ஆனால், தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பணி அளப்பரியது. இத்தேர்தலில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகிய பணிகளில் அரசு ஊழியர்கள், அரசு, நி...
கருணாநிதி திருட்டு ரயிலேறிதான் சென்னைக்கு வந்தாரா?

கருணாநிதி திருட்டு ரயிலேறிதான் சென்னைக்கு வந்தாரா?

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்திய அளவில் இன்றைக்கு தமிழகம் கல்வி, தொழில்துறை, விவசாயம் என பல துறைகளிலும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பரவலான, நீடித்த வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றால் அதில் திமுகவுக்கு பெரும் பங்கு இருக்கிறது. சமூகநீதி முதல் இன்றைக்கு காவி அரசாங்கம் அமல்படுத்தியுள்ள மருத்துவக்காப்பீடு உள்ளிட்ட திட்டங்களுக்கு வித்திட்டவர் கருணாநிதி.   எப்போதும் முன்னோக்கிச் சிந்திக்கக் கூடிய அபார ஆற்றல் வாய்ந்தவர். என்னதான் தமிழ் மொழி, தமிழர்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டாலும் திமுக மீதும், கருணாநிதி மீதும் சர்க்காரியா கமிஷன், திருட்டு ரயிலேறி வந்தவர், 2ஜி ஸ்பெக்ட்ரம் வரையிலான ஊழல் புகார்கள் அன்று முதல் இன்று வரை சூழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவர் வாங்கி வந்த வரம் (?!) அப்படி. திமுக மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை. என்றாலும், எதிர்க்கட்சிகளால் திமுகவுக்...