Monday, October 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Author: புதிய அகராதி

சேலம்: அவல நிலையில் அகதி முகாம்கள்! குடிநீர், கழிப்பறை, தெருவிளக்கு வசதியின்றி திண்டாடும் தொப்புள்கொடி உறவுகள்!!

சேலம்: அவல நிலையில் அகதி முகாம்கள்! குடிநீர், கழிப்பறை, தெருவிளக்கு வசதியின்றி திண்டாடும் தொப்புள்கொடி உறவுகள்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-சிறப்புக்கட்டுரை-   ஈழத்தில் நடந்த உள்நாட்டுப் போரில், எல்லாவற்றையும் இழந்து, துயரங்களை மட்டுமே சுமந்து கொண்டு, தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்த ஈழத்தமிழர்கள், இங்கும் போதிய அடிப்படை வசதிகளின்றி நாலாந்தர குடிமக்களாக வாழ்ந்து (!) வருகின்றனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் ஏற்பட்ட மோதலில் தமிழர்கள் பலர் மனைவி, குழந்தைகளுடன் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். 1983-87, 1989-91, 1996-2003 என மூன்று கட்டங்களாக தமிழகத்திற்குள் தஞ்சம் புகுந்தவர்களைக் காட்டிலும், உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்த 2006-2010 காலக்கட்டத்தில் அதிகளவில் ஈழத்தமிழர்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.   இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள 110 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் 3 லட்சம் ஈழ அகதிகள் வசித்து வந்த நிலையில், தற்போது 17 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 65 ...
ரவுடி கதிர்வேலை திட்டமிட்டு படுகொலை செய்த போலீஸ்! உண்மை கண்டறியும் குழு பாய்ச்சல்!!

ரவுடி கதிர்வேலை திட்டமிட்டு படுகொலை செய்த போலீஸ்! உண்மை கண்டறியும் குழு பாய்ச்சல்!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில் ரவுடி கதிர்வேலை திட்டமிட்டு படுகொலை செய்துவிட்டு, என்கவுண்டர் செய்ததாக காவல்துறையினர் நாடகம் ஆடுவதாக உண்மை கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர். சேலத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூர் அருகே தேவாங்கர் காலனியைச் சேர்ந்த சேட்டு மகன் கதிர்வேல், கடந்த மே 2, 2019ம் தேதியன்று என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக மாவட்ட காவல்துறை தெரிவித்தது. ஒரு கொலை வழக்கில், காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்ரமணியம், எஸ்.ஐ.க்கள் மாரி, பெரியசாமி ஆகியோர் அவரை பிடிக்க முயன்றபோது, கத்தியால் தாக்க முயன்றதாகவும், அதனால் அவரை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதாகவும் சொன்னது காவல்துறை.     கதிர்வேல் மீது ஏற்கனவே மூன்று கொலை, ஒன்பது வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது ஒருபுறம் இருக்க, அவர் தானாகவே காவல்துறையில் சரணடைந்த நிலையில், திட்டமிட்டு அவர் கொல்லப்பட்டதாகவும் மாறுபட்ட...
‘அரங்கேற்றம்’ லலிதாக்கள் இன்னும் இருக்கிறார்கள்! – திரை விமர்சனம்

‘அரங்கேற்றம்’ லலிதாக்கள் இன்னும் இருக்கிறார்கள்! – திரை விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அடுத்தடுத்து 'வதவத' என்று பிள்ளைக்குட்டிகளை பெற்றுப் போட்டதைத் தவிர வேறு எந்த சாதனையும் செய்யாத தந்தை, கஞ்சிக்கே வக்கற்ற நிலையிலும் மனசு முழுக்க இலட்சம் கனவுகளை சுமந்து கொண்டு வாழும் தங்கைகள், தம்பிகளுக்காக தன்னையே தியாகம் செய்யும் லலிதாவின் வாழ்வில் ஏற்பட்ட துயரங்களையும், ஏமாற்றங்களையும் பட்டவர்த்தனமாக முகத்தில் அறைந்தாற்போல் பேசுகிறது அரங்கேற்றம்.   என்னதான் நாம் ஸ்விக்கி, ஸோமாட்டோ நாகரீகத்திற்குள் நுழைந்துவிட்டாலும், மூன்றாம் நபரின் அந்தரங்க செயல்பாடுகளை கூச்சமே இல்லாமல் முதுகுக்குப் பின்னால் கிசுகிசுப்பது இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதனாலேயே நாம் அந்த நாலு பேரைக் கண்டு சில வேளைகளில் அஞ்சவும் வேண்டியதிருக்கிறது. கதைதான் என்றாலும், 46 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண்ணை மையமாக வைத்து, காலவெளியை உடைத்துக்கொண்டு முழு கதையையும் திரையில் விவரிக்க மு...
நீட் தேர்வு எப்படி இருந்தது? மாணவர்கள் சொல்வது என்ன?

நீட் தேர்வு எப்படி இருந்தது? மாணவர்கள் சொல்வது என்ன?

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நீட் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிமையாக இருந்ததால், இந்த ஆண்டு தமிழகத்தில் அதிகமானோர் தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளதாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.   இளநிலை மருத்துவப்படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் போட்டித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றாக வேண்டும். இதற்காக நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 5) தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் இருந்து இந்தாண்டு 1.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 14 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் முழு கை வைத்த சட்டை அணிந்து வரக்கூடாது, அடர்த்தியான நிற உடைகள் அணியக்கூடாது, எந்த விதமான எழுதுபொருள்களும் கொண்டு மையத்திற்குள் கொண்டு செல்லக்கூடாது, மாணவிகள் கொலுசு, வளையல் உள்ளிட...
ரவுடி கதிர்வேல் கொல்லப்பட்டது என்கவுண்டரில் அல்ல! அது ஒரு லாக்-அப் மரணம்!! சில்லிட வைக்கும் தகவல்கள்!!

ரவுடி கதிர்வேல் கொல்லப்பட்டது என்கவுண்டரில் அல்ல! அது ஒரு லாக்-அப் மரணம்!! சில்லிட வைக்கும் தகவல்கள்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியை போலி என்கவுண்டரில் தீர்த்துக்கட்டிவிட்டு, மாவட்டக் காவல்துறையினர் என்கவுண்டர் நாடகத்தை திட்டமிட்டு அரங்கேற்றி இருப்பது அம்பலமாகி இருக்கிறது. சேலத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூர் அருகே உள்ள தேவாங்கர் காலனியைச் சேர்ந்த பிரபல ரவுடி கதிர் என்கிற கதிர்வேலை, சேலம் மாவட்ட காவல்துறையினர் மே 2ம் தேதி காலை 11 மணியளவில் எதிர்மோதலில் (என்கவுண்டர்) சுட்டுக்கொன்றது. காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்ரமணி தலைமையிலான தனிப்படையினர் இ ந்த ஆபரேஷனை செய்து முடித்துள்ளனர்.   ஆய்வாளர் சுப்ரமணியின் கைத்துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த ஒரே ஒரு தோட்டா கதிர்வேலின் மார்பை துளைத்து, மரணத்தை விளைவித்திருக்கிறது. கதிர்வேல், மூன்று கொலை, 9 கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர். இதற்காக பலமுறை கைது செய்யப்பட்டு, சிறைப்பறவையாக இருந்திருக்கிறார். என்கவுண்டரை தொடர்...
சேலம் ரவுடியை தீர்த்துக்கட்டிய 9 எம்.எம். பிஸ்டல்! பத்து ஆண்டுக்குப் பிறகு மீண்டும் டூமீல்!!

சேலம் ரவுடியை தீர்த்துக்கட்டிய 9 எம்.எம். பிஸ்டல்! பத்து ஆண்டுக்குப் பிறகு மீண்டும் டூமீல்!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில், கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை காவல்துறையினர், வியாழக்கிழமை (மே 2, 2019) காலையில் நடந்த எதிர்மோதல் (என்கவுண்டர்) தாக்குதலில் சுட்டுக்கொன்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதாலோ என்னவோ, மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் சேலம் மாநகர மற்றும் மாவட்டக் காவல்துறையினர் ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்குவதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு, முன்னாள் குற்றவாளிகள், பிணையில் வெளியே சுற்றும் ரவுடிகளின் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று அறிவுரைகளும், மென்மையான எச்சரிக்கையும் வழங்கினர்.   இது ஒருபுறம் நடந்தாலும், கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், கொலை, கொள்ளை குற்றங்களில் ஈடுபடுவோரை கைது செய்தல், குண்டர் சட்டத்தில் அடைத்தல் போன்ற நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தினர். மாநிலத்தில் வேறு எ...
சட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி?

சட்டம் அறிவோம்: குழந்தையை தத்து எடுப்பது எப்படி?

தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஓய்வு பெற்ற பெண் செவிலியர் உதவியாளர் ஒருவர், சட்ட விரோதமாக குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்து வந்த சம்பவம் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதுமே, ஆண், பெண் இருபாலரிடத்திலும் மலட்டுத்தன்மை பிரச்னை அதிகரித்து வருவதுதான் குழந்தையின்மைக்கு முக்கிய காரணம். இதனால், சட்டப்படி குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ள மத்திய, மாநில அரசுகளே அதற்கான வழிமுறைகளைச் செய்திருந்தாலும், அதற்கான நடைமுறைகளும், விதிமுறைகளும் அதிகம். அதனால்தான் குழந்தையில்லா தம்பதியினரில் பலர் தத்தெடுக்க தயாராக இருந்தாலும், அரசின் கெடுபிடிகள் காரணமாக சட்ட ரீதியான தத்தெடுத்தலை புறக்கணித்து விட்டு, சட்ட விரோதமாக குழந்தையை விலை கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எனினும், புதிய அகராதி வாசகர்களுக்காக, சட்டப்பூர்வமாக ஒரு குழந்தையைத் தத்தெடுப்பத...
பிளஸ்-2க்குப் பிறகு என்ன படிக்கலாம்? சிஎம்ஏ படிப்புக்கு வளமான எதிர்காலம்! விழிப்புணர்வு தொடர்#2

பிளஸ்-2க்குப் பிறகு என்ன படிக்கலாம்? சிஎம்ஏ படிப்புக்கு வளமான எதிர்காலம்! விழிப்புணர்வு தொடர்#2

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிளஸ்-2க்கு பிறகு, பட்டப்படிப்பில் எதை தேர்வு செய்வது? என்ற குழப்பத்தில் உள்ள மாணவர்களுக்கான குறுந்தொடர் இது. கோர் ஏரியா என்று சொல்லக்கூடிய முதன்மைப் படிப்புகளைத் தவிர்த்த பிற வாய்ப்புள்ள பாடப்பிரிவுகள் குறித்த இந்த தொடரில் பார்க்கலாம். சிஎம்ஏ என்பதும் தொழில் படிப்புதானா?   பட்டய கணக்காளர் படிப்பு எந்தளவுக்கு மிகவும் தனித்துவமான தொழில்படிப்போ அதற்கு சற்றும் குறைவில்லாதது சிஎம்ஏ எனப்படும் 'செலவு மற்றும் மேலாண்மைக் கணக்காயர்' படிப்பு ஆகும். இதை ஆங்கிலத்தில் Cost and Management Accountant (CMA) எனலாம். இந்தியாவில் மிக உயரிய பாடப்பிரிவுகளுள் சிஎம்ஏ தொழிற்படிப்பும் ஒன்றாகும்.   இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அண்டு மேனேஜ்மென்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா என்பது ஒரு தன்னாட்சி பெற்ற, சட்ட ரீதியான நிறுவனம். சுருக்கமாக ஐசிஎம்ஏஐ. இந்நிறுவனம் 1959ம் ஆண்டு மே மாதம் 28ம்...
ஒரு பெண் குழந்தையின் விலை 2 லட்சம்! தரம் பிரித்து பச்சிளம் சிசுக்கள் விற்பனை!!

ஒரு பெண் குழந்தையின் விலை 2 லட்சம்! தரம் பிரித்து பச்சிளம் சிசுக்கள் விற்பனை!!

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
ஒரு பெண் குழந்தையின் விலை இரண்டு லட்சம் ரூபாய் என்றும், குண்டான, அழகான, அமுல் பேபி மாதிரியான ஆண் குழந்தை நாலேகால் லட்சம் ரூபாய் என்றும் குழந்தைகளை தரம் பிரித்து விற்பனை செய்து வரும் ராசிபுரம் செவிலியர் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.   மாறி வரும் உணவுப்பழக்கவழக்கம், மேற்கத்திய கலாச்சாரம் போன்றவற்றால் இன்றைக்கு ஆண், பெண்களிடையே மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட இருபாலருக்குமே 50 சதவீதம் வரை மலட்டுத்தன்மை குறைபாடு இருக்கிறது என்கிறது மருத்துவத்துறை. இந்நிலையில் செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் இருந்தாலும், அதற்காகும் அதிகபட்சமான செலவுகள் காரணமாக குறுக்கு வழியில் பலர் குழந்தைகளை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 'காரா' (CARA - Central Adoption Resource Authority) மூலம் சட்டப்படி குழந்தைகளை தத்து எடுக்கலாம். எனினும், ...
போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #1

போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #1

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதைக் காட்டிலும் அதில் மெச்சத்தக்கது வேறேதும் இல்லை என்பது என்னளவிலான புரிதல். ஏப்ரல் 18, 2019ல் நடக்க இருக்கும் மிகப்பெரும் ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்க, தமிழக வாக்காளர்கள் இந்நேரம் மனதளவில் தயார் படுத்திக் கொண்டிருக்கக்கூடும். வாக்குச்சாவடிக்குள் நீங்கள் செல்வதற்குள்ளாவது நான் உங்களுடன் பேசி விட வேண்டும் என்ற உந்துதலாலேயே இப்போது பேச விழைகிறேன். இந்தியத் தேர்தல் அமைப்பு முறை, இந்த தேசத்தின் குடிமக்களை வெறும் வாக்காளன் என்ற அளவில் மட்டுமே சுருங்கிப் போகச் செய்துவிட்டதுதான், இந்திய ஒன்றியத்தில் நாம் கண்ட மக்களாட்சி தத்துவம். சொல்லப்போனால், இப்போதுள்ள தேர்தல் நடைமுறைகள், அரசியல் களத்தில் இருந்து சாமானிய மக்களை முற்றாக ஒதுக்கித் தள்ளிவிட்டது எனலாம். உடனே நீங்கள், காளியம்மாக்களும், பொன்னுத்தாய்களும்கூட இந்த தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பெற்...