Thursday, April 9மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Author: புதிய அகராதி

அதிகரிக்கும் மலட்டுத்தன்மை; கேள்விக்குறியாகும் குழந்தை பாக்கியம்! ஷாக் ரிப்போர்ட்…!!

அதிகரிக்கும் மலட்டுத்தன்மை; கேள்விக்குறியாகும் குழந்தை பாக்கியம்! ஷாக் ரிப்போர்ட்…!!

அலோபதி, சிறப்பு கட்டுரைகள், மருத்துவம், முக்கிய செய்திகள்
ஜூலை 25, 1978. இந்த நாள், உலக வரலாற்றை புரட்டிப்போட்டதுடன், மருத்துவ உலகில் அதீத மகிழ்ச்சியையும், மதவாதிகளிடையே அதிர்ச்சியையும் ஒருசேர அதிகரித்த நாள். ஆம். அன்றுதான், இங்கிலாந்தில் உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தையான லூயிஸ் ஜாய் பிரவுன் பிறந்த தினம். ''சொத்து சுகம் எவ்வளவு இருந்தாலும் துள்ளி விளையாட ஒரு குழந்தை இல்லையே'' என ஏங்குவோர் பலர். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு வரப்பிரசாதமாய் கிடைத்ததுதான் செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்பம். மருத்துவ உலகினர் இதை மகத்தான பரிசளிப்பு என்றாலும், ஆணும், பெண்ணும் இணை சேராமலே குழந்தை பெற்றுக் கொள்வது என்பது இயற்கைக்கு முரணானது என்ற பேச்சும் எழாமல் இல்லை. ஆனாலும், உலகமயமாக்கலால் மாறி வரும் கலாசாரம், உணவுப்பழக்கம், மது, புகைப்பழக்கம், வாழ்வியல் முறை போன்றவைகளால் ஆண், பெண்களிடையே மலட்டுத்தன்ம...
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு! சிசிடிவி காட்சிகள் ஆவணமாக பதிவு செய்யப்பட்டதால் திடீர் திருப்பம்!!

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு! சிசிடிவி காட்சிகள் ஆவணமாக பதிவு செய்யப்பட்டதால் திடீர் திருப்பம்!!

குற்றம், சேலம், நாமக்கல், முக்கிய செய்திகள்
சேலம் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு விசாரணை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது முக்கிய ஆவணமாக சேர்க்கப்பட்டதாலும், சிசிடிவி கேமரா டெக்னீஷியன் அளித்த சாட்சியத்தாலும் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் - சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பி.இ. பட்டதாரி. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவரும், கல்லூரியில் உடன் படித்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதி என்ற மாணவியும் நெருங்கி பழகி வந்தனர். சுவாதி, கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்.   கடந்த 23.6.2015ம் தேதியன்று, வீட்டில் இருந்து கல்லூரிக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிச்சென்றவர் அன்றிரவு வீடு திரும்பவில்லை. மறுநாள் மாலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் த...
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…! பாரதி எனும் காதல் மன்னன்!!

நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…! பாரதி எனும் காதல் மன்னன்!!

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பாரதியார்: 11.12.1882 - 11.9.1921   பாரதி என்ற பெயரைக் கேட்டதுமே புரட்சிக்கவி என்ற முன்னொட்டும் மனதில் வந்து அமர்ந்து கொள்ளும். ஆங்கிலேய அடக்குமுறையால் கூன் விழுந்த இந்தியர்களிடையே தன் பாட்டால் சுதந்திரத்தீ மூட்டியவனை அப்படித்தான் பார்க்க முடியும். கவித்திறத்தால் பெண் விடுதலையையும், சுதந்திர வேள்வியையும் வளர்த்தவன். இவை மட்டுமே அவன் முகமன்று. நான் பாரதியின் இன்னொரு முகத்தைப் பார்க்கிறேன். அதுதான் அவனுக்குள் இருக்கும் காதல் உணர்வு. சுதந்திர இந்தியா வேண்டும் என்பதும் கூட காதல் உணர்வுதான். ஆனால் கண்ணம்மா மீது அவன் கொண்ட காதல் அளப்பரியது. அவனுக்கு மட்டுமேயானது. 139வது பிறந்த நாளைக் கொண்டாடும் இன்றைய நாளிலும் கூட அவன் எழுதிய காதல் கவிதைகளை அத்தனை எளிதில் கடந்து விட இயலாது.   காதலில் விழுவது பலவீனமானவர்க்கே உரித்தானது என்ற உளவியல் ச...
தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான்! ரஜினி பரபரப்பு பேட்டி!!

தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான்! ரஜினி பரபரப்பு பேட்டி!!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த், கடந்த 2017ல் தனது அரசியல் பிரவேசம் குறித்து திடமாக அறிவித்த பின்னரும் கூட, தன் படங்களுக்கான புரமோஷன் உத்தியாகவே பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் கிளம்பின. இந்த நிலையில் கடந்த அக்டோபரில் அவருடைய உடல்நலம் குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவின. அதுகுறித்து கருத்து தெரிவித்த ரஜினி, ''சமூக ஊடகங்களில் என் உடல்நலம் குறித்து வெளிவந்திருக்கும் தகவல்கள் உண்மைதான். ஆனால் அது அதிகாரப்பூர்வமாக நான் அறிவிக்கவில்லை,'' என்றார்.   இதனால் அவர் ஏற்கனவே அறிவித்தபடி அரசியல் கட்சி தொடங்குவாரா? என்ற அய்யம் பல மட்டங்களிலும் எழுந்தது.   இந்நிலையில், நவ. 30ம் தேதி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ராகவேந்திரா மண்டபத்தில் திடீர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது ரஜினி, ஓரிரு நாளில் அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவை அறிவிப்...
ஏழை மாணவர்கள் வாழ்வில் உயர்ந்தால் எங்கள் குடும்பத்துக்கே பெருமை! நம்ம ஊர் ஹீரோ!!

ஏழை மாணவர்கள் வாழ்வில் உயர்ந்தால் எங்கள் குடும்பத்துக்கே பெருமை! நம்ம ஊர் ஹீரோ!!

கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பரோபகாரம் வெகுவாக அருகிவிட்ட இன்றைய சூழலில், தங்களது உத்தியோகத்தைக் கடந்து, சமூகத்தின் நலன் கருதி செயல்படுதல் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை என்ற மனோபாவம் பெரிதாக உருவெடுத்திருக்கிறது. அவரவரின் நிதிநிலை ஒன்றே தனிநபர்களின் அளவீடாக கருதும் காலம் மேலோங்கி இருக்கிறது. அதனால் எல்லோருமே பணத்தின் பின்னால் ஓடுவது என்பது கிட்டத்தட்ட காலத்தின் கட்டாயம் என்று தங்களுக்குத் தாங்களே நியாயம் கற்பித்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராமமூர்த்தி என்பவர், தன் சொந்த கிராமத்துப் பிள்ளைகளின் கல்வி நலனுக்காக பள்ளிக்கூடம் கட்ட தனக்குச் சொந்தமான நிலத்தை தானமாக வழங்கி நாயக அவதாரம் எடுத்திருக்கிறார். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்ற அவ்வையாரோ, 'நட்பும் தகையும் கொடையும் பிறவிக்குணமாம்' என்கிறார். அதுபோ...
”லஞ்சம், ஊழலை அம்பலப்படுத்துவது குற்றமல்ல!” தகவல் ஆணையம் அதிரடி!!

”லஞ்சம், ஊழலை அம்பலப்படுத்துவது குற்றமல்ல!” தகவல் ஆணையம் அதிரடி!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
பணியிடங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழல் குறித்து காவல்துறைக்கு புகார் அளிப்பது குற்றம் ஆகாது என்றும், அதற்காக புகார் அளித்தவரை தண்டிப்பது கூடாது என்றும் தமிழ்நாடு தகவல் ஆணையம் தடாலடியாக தீர்ப்பு அளித்துள்ளது. சேலம் சித்தனூரை சேர்ந்தவர் வைத்தியநாதன் (54). பெரியார் பல்கலையில் பொருளாதார துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு இப்பல்கலையின் துணை வேந்தராக இருந்த சுவாமிநாதன் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. உதவி பேராசிரியர் / பேராசிரியர் பணியிடங்கள் 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை கூவி கூவி விற்பனை செய்தார் என்பதும், பதவி உயர்வு வழங்குவதற்காக 23 உதவி பேராசிரியர்களிடம் தலா 3 லட்சம் வசூலித்தார் என்பதும் அவர் மீதான புகார்களில் முக்கியமானவை.   போலி அனுபவ சான்றிதழ்களை சமர்ப்பித்தவர்கள், முழு கல்வித்தகுதியை எட்டாதவ...
ஊரடங்கினால் சீரழிக்கப்பட்ட 2 சிறுமிகள்; 75 வயது முதியவர் முதல் பள்ளி மாணவர் வரை 12 பேர் கும்பல் வெறியாட்டம்!

ஊரடங்கினால் சீரழிக்கப்பட்ட 2 சிறுமிகள்; 75 வயது முதியவர் முதல் பள்ளி மாணவர் வரை 12 பேர் கும்பல் வெறியாட்டம்!

குற்றம், நாமக்கல், முக்கிய செய்திகள்
நாமக்கல் அருகே, ஓலை குடிசையில் வசித்து வரும் இரண்டு சிறுமிகளை 75 வயது முதியவர் முதல் பிளஸ்-2 மாணவர் வரை 11 பேர் கும்பல் கடந்த ஆறு மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ள சம்பவம், முட்டை மாவட்டத்தை உலுக்கி எடுத்துள்ளது.   நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வாம்பாள். இவருடைய கணவர், மூட்டைத் தூக்கும் தொழிலாளி. இரு ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் இறந்து விட்டார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த செல்வாம்பாளுக்கு மூன்று மகள்கள்; இரண்டு மகன்கள். மூத்த மகள் திருமணம் ஆகி, வெளியூரில் குடும்பத்துடன் வசிக்கிறார். மற்ற இரு மகள்களில் ஒருவர் ரேகா (13); இன்னொரு மகள் ரஞ்சனி (12). (தாயார் மற்றும் மகள்களின் பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன). செல்வாம்பாள், மல்லூரில் உள்ள தனியார் சேகோ ஆலையில் கூலி வேலை செய்கிறார். தினசரி ...
பிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள்! இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்!!

பிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள்! இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்!!

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
EXCLUSIVE   டெபிட் கார்டுகளின் கடவுச்சொல்லை ரகசியமாக திருடி நூதனமாக பணம் பறிப்பது, ரேன்சம்வேர், மால்வேர் வைரஸ்கள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களில் தாக்குதல் நடத்துவது, ஹேக்கர்கள் மூலம் வேவு பார்த்தல் என சைபர் மாஃபியாக்களின் குற்றங்கள் தினுசு தினுசானவை. ஆனால், இணையவழி கிரிமினல்களின் கோர முகம் அத்துடன் நிற்பதில்லை. பண ஆதாயம், பழி தீர்த்தல் என ஏதோ ஒன்றுக்காக அவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதற்கு, இணையதளங்களில் மலிந்து கிடக்கும் ஆபாச வலைத்தள பக்கங்களே சைபர் மாபியாக்களின் கோர முகத்தைக் காட்டி விடும். அதுவும் தமிழகத்தில் உள்ள முன்னணி தனியார் கல்லூரிகளின் பெயர்களில் நீலப்படங்களை பதிவேற்றம் செய்வதும், அதன்மூலம் கோடிகளில் புரள்வதும் அவ்வளவாக வெளிச்சத்துக்கு வராதவை.   தமிழகத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு...
ரோசாப்பூ ரவிக்கைக்காரி – நந்தினியும் செம்பட்டையும் கலாச்சார மாற்றத்தின் முதல் பலியாடுகள்!

ரோசாப்பூ ரவிக்கைக்காரி – நந்தினியும் செம்பட்டையும் கலாச்சார மாற்றத்தின் முதல் பலியாடுகள்!

சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பழமையில் ஊறிப்போயிருக்கும் சமூகதளத்தில் புதிய கலாச்சார மாற்றத்திற்கான வாயில் கதவுகளை திறந்து வைத்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் என்ற பெருமை, 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி'க்கு உண்டு. 1979, மே 18ல் வெளியானது. தேவராஜ் - மோகன் என்ற இரட்டை இயக்குநர்களின் அற்புத படைப்பு. ஏற்கனவே, அன்னக்கிளியில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள்தான். எனினும், இவர்களிடம் இருந்து ரோசாப்பூ ரவிக்கைக்காரி என உலகப்படங்களின் தரத்தில், இன்றளவும் 'கல்ட்' (Cult) வகைமையிலான படம் வரும் என்ற எதிர்பார்ப்பு அவ்வளவாக இல்லாத காலக்கட்டம் அது. இந்தியா, சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் நிகழும் பீரியட் படம்தான் இந்த ரோ.ர. 41 ஆண்டுகளுக்குப் பிறகு ரோ.ர. பற்றி ஒரு மீளாய்வாகவே எழுதுகிறேன். சேலம் மாவட்டத்தின் வண்டிச்சோலை எனும் சிறிய மலைக்கிராமம்தான் ரோ.ர.வின் கதைக்களம். மண்ணின் மைந்தனாக இரு...
காற்றிலே கரைந்த பாடும் நிலா பாலு! நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே…!!

காற்றிலே கரைந்த பாடும் நிலா பாலு! நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே…!!

சினிமா, முக்கிய செய்திகள்
கடந்த 2010ம் ஆண்டில் சிபிராஜ், பிரசன்னா நடிப்பில் 'நாணயம்' படம் வெளியானது. அதில், 'நான் போகிறேன் மேலே மேலே... பூலோகமே காலின் கீழே...' என்ற டூயட் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருப்பார். அந்தப்பாடலின் பல்லவியை இன்று (செப். 25, 2020) மெய்யாக்கி, கோடிக்கணக்கான ரசிகர்களை தவிக்கவிட்டுச் சென்றுவிட்டார், ரசிகர்களால் 'பாடும் நிலா பாலு' என்றழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74). ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் 4.6.1946ல் பிறந்த எஸ்.பி.பி.யின் முழு பெயர், ஸ்ரீபதி பண்டிதராத்யூலா பாலசுப்ரமணியம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்பட 16 மொழிகளில் திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் திரையிசை பாடல்களுக்கு மேல் பாடி, கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார்.   சென்னை நுங்கம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த எஸ்.பி.பி., கடந்த ஆகஸ்ட...