Sunday, October 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Author: புதிய அகராதி

சொமேட்டோ ஐபிஓ வெளியீடு!; பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம்!!

சொமேட்டோ ஐபிஓ வெளியீடு!; பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம்!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
சொமேட்டோ நிறுவன புதிய பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட கடும் போட்டியால் முதல் நாளிலேயே எதிர்பார்த்த இலக்கை விட கூடுதல் பங்குகளுக்கு ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. முன்னணி ஆன்லைன் உணவு வர்த்தக நிறுவனமான சொமேட்டோ, ஐபிஓ எனப்படும் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கியுள்ளது. இதன் பங்கு வெளியீடு புதன்கிழமை (ஜூலை 14) தொடங்கியது. இதன்மூலம் 9375 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கத் திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டில் கடந்த ஆறு மாதங்களில் வெளியான ஐபிஓக்களில் சொமேட்டோவின் பங்கு வெளியீடுதான் மிகப்பெரியதாக கருதப்படுகிறது. 71 கோடியே 92 லட்சத்து 33 ஆயிரத்து 522 பங்குகளை விற்க முடிவு செய்திருந்த நிலையில், முதல் நாளிலேயே 75 கோடியே 64 லட்சத்து 33 ஆயிரத்து 80 பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பித்து உள்ளனர். மொத்த பங்குகளில் இன்ஸ்டிடியூஷனல் அல்லாத முதலீ...
கொரோனா சுனாமியால் நிலைகுலைந்த குடும்பம்; தாய், தந்தையை இழந்து வாடும் 5 பிள்ளைகள்!

கொரோனா சுனாமியால் நிலைகுலைந்த குடும்பம்; தாய், தந்தையை இழந்து வாடும் 5 பிள்ளைகள்!

கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஓசூரில், கொரோனா சுனாமியால் ஒரே ஆதரவாக இருந்த தாயையும் பறிகொடுத்துவிட்டு 4 மகள்கள் உள்பட 5 பிள்ளைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.   கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையால் ஏற்பட்ட கடுமையான ஊரடங்கால் மற்றெந்த பிரிவினரையும் விட தினக்கூலித் தொழிலாளர் வர்க்கத்தினரும், சொற்ப ஊதியத்திற்கு பணியாற்றி வரும் தனியார் ஊழியர்களும் வேலையிழப்பு, பொருளாதார இழப்பால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். அதையெல்லாம் கவனத்தில் கொண்ட தமிழக அரசு, இந்தமுறை கொரோனா இரண்டாவது அலையின்போது, சற்று தளர்வுகளுடனேயே ஊரடங்கு விதிகளை அமல்படுத்தியது. ஆனாலும், கடந்த ஆண்டு ஏற்பட்ட முடக்கத்தில் இருந்தே மீளாத சாமானியர்களில் பலரை இரண்டாம் அலை கருணையின்றி காவு வாங்கிவிட்டது.   இந்த அலையில் சிக்கி சின்னாபின்னமான ஆயிரக்கணக்கான குடும்பங்களில் ஒன்றுதான், நிவிதாவின் குடும்பமும். கிருஷ்ணகி...
சேலம் பெரியார் பல்கலை புதிய துணைவேந்தராக ஜெகன்நாதன் நியமனம்! தொடரும் ‘ஜி’ சென்டிமென்ட்!

சேலம் பெரியார் பல்கலை புதிய துணைவேந்தராக ஜெகன்நாதன் நியமனம்! தொடரும் ‘ஜி’ சென்டிமென்ட்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் டீன் ஜெகன்நாதன் நியமிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக கொங்கு மண்டலத்தில் இருந்தும், கவுண்டர் சமூகத்தினரையே துணை வேந்தராக நியமிக்கப்பட்டிருப்பது யதார்த்தமா? அல்லது உள்நோக்கமா? என்ற விவாதமும் பல்கலை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தராக இருந்து வந்த பேராசிரியர் குழந்தைவேலுவின் பதவிக்காலம் கடந்த ஜன. 8ம் தேதியுடன் முடிவடைந்தது. எனினும், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும்வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.   பல்கலை விவகாரங்களில் வேந்தர் என்ற முறையில் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் இருப்பதை மறுக்க முடியாது. என்றாலும், பணி நிறைவு பெற்று, வழியனுப்பு விழா நடத்தப்பட்ட நிலையில் குழந்தைவேலுவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதும்...
விவசாயியை எஸ்ஐ அடித்து கொன்ற வழக்கு; ஆத்தூர் மாஜிஸ்ட்ரேட் விசாரணை!

விவசாயியை எஸ்ஐ அடித்து கொன்ற வழக்கு; ஆத்தூர் மாஜிஸ்ட்ரேட் விசாரணை!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், காவல்துறை எஸ்ஐ விவசாயியை அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து ஆத்தூர் நீதித்துறை நீதிமன்ற நடுவரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.   சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள எடப்பட்டி பதூரைச் சேர்ந்தவர் முருகேசன் (45). விவசாயி. இவரும், இவருடைய நண்பர்கள் சிவன்பாபு, ஜெயசங்கர் ஆகியோரும் மோட்டார் சைக்கிளில் ஜூன் 22ம் தேதி மாலை, பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச்சாவடி வழியாக சென்றனர். அப்போது மூவரும் மது போதையில் இருந்தனர். இந்த சோதனைச்சாவடியில் வனத்துறை ஊழியர்கள் மட்டுமின்றி ஏத்தாப்பூர் காவல்நிலைய சிறப்பு எஸ்ஐ பெரியசாமி மற்றும் சில காவலர்களும் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.   காவல்துறையினர் அவர்களுடைய வாகனத்தை சோதனையிட முயன்றபோது, முருகேசன் அவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் இரு தரப்பு...
சேலத்தில் ஒரு சாத்தான்குளம்; விவசாயியை அடித்துக் கொன்ற போலீஸ்!

சேலத்தில் ஒரு சாத்தான்குளம்; விவசாயியை அடித்துக் கொன்ற போலீஸ்!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் அருகே, குடிபோதையில் வந்த விவசாயியை காவல்துறை சிறப்பு எஸ்ஐ ஒருவர் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள எடப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் முருகேசன் (45). விவசாயி. இவரும், இவருடைய நண்பர்கள் சிவன்பாபு, ஜெயசங்கர் ஆகியோரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஜூன் 22ம் தேதி மாலை பாப்பநாயக்கன்பட்டி சோதனைச்சாவடி வழியாகச் சென்றனர்.   சோதனைச் சாவடியில் ஏத்தாப்பூர் காவல்நிலைய சிறப்பு எஸ்ஐ பெரியசாமி மற்றும் காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முருகேசன் உள்ளிட்ட மூன்று பேரும் மது போதையில் இருந்துள்ளனர். வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் சிறப்பு எஸ்ஐ பெரியசாமி மற்றும் காவலர்கள், முருகேசனிடம் வாகனத்திற்கான ஆவணங்களைக் கேட்டுள்ளனர். அதற்கு அவர் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ...
தர்மபுரி: கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு! 3 பெண் உள்பட 4 பேர் கைது!!

தர்மபுரி: கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு! 3 பெண் உள்பட 4 பேர் கைது!!

தர்மபுரி, முக்கிய செய்திகள்
தர்மபுரி அரசு மருத்துவமனையில், பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை கடத்தியதாக மூன்று பெண்கள் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தப்பட்ட குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாச்சனூரைச் சேர்ந்தவர் அருள்மணி (35). மரத்தச்சு வேலை செய்பவர். இவருடைய மனைவி மாலினி (19). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாலினி, கடந்த 18ம் தேதி மாலை 4 மணியளவில், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் (ஜூன் 19) இரவு 7 மணியளவில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.   அதற்கு அடுத்த நாள் காலையில் மாலினி, பிரசவ அறை அருகே உள்ள கழிப்பறைக்குச் சென்று விட்டு மீண்டும் தன் அறைக்கு வந்து பார்த்தார். அப்போது, தன்னுடைய குழந்தை திடீரென்று மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி ...
தர்மபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தை கடத்தல்! பட்டப்பகலில் மர்மப்பெண் கைவரிசை! வடமாநில கும்பலுக்கு தொடர்பு?

தர்மபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தை கடத்தல்! பட்டப்பகலில் மர்மப்பெண் கைவரிசை! வடமாநில கும்பலுக்கு தொடர்பு?

தர்மபுரி, முக்கிய செய்திகள்
தர்மபுரி அரசு மருத்துவமனையில், பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணியில் ஹிந்தி அல்லது உருது மொழி பேசிய பெண்ணின் கைவரிசை உள்ளதால், வடமாநில கும்பலுக்கு தொடர்பு இருக்கலாமோ என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாச்சானூரைச் சேர்ந்தவர் அருள்மணி (35). மரத்தச்சரான இவருடைய மனைவி மாலினி (19). இவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டாகிறது.   நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாலினி, கடந்த 18ம் தேதி மாலை 4 மணியளவில், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் (ஜூன் 19) இரவு 7 மணியளவில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.   அதற்கு அடுத்த நாள் காலையில் குழந்தை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் மாலினி கழிப்பறைக்குச் சென்றிருந்தார். பின்னர் அவர் படுக்கைக்...
‘நச்’ கேள்விகள்; ‘பன்ச்’ பதில்கள்!; டெல்லியில் தெறிக்கவிட்ட மு.க.ஸ்டாலின்!

‘நச்’ கேள்விகள்; ‘பன்ச்’ பதில்கள்!; டெல்லியில் தெறிக்கவிட்ட மு.க.ஸ்டாலின்!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 42 நாள்கள் ஆன நிலையில், பிரதமர் நரேந்திரமோடியை மரியாதை நிமித்தமாக டெல்லியில் வியாழனன்று (ஜூன் 17) நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்கக் கூடியவர்கள் பெரும்பாலும் முப்பது நாள்களுக்குள்ளாகவே பிரதமருடனான சம்பிரதாயமான சந்திப்பை முடித்து விடுவார்கள். ஆனால் கொரோனா பெருந்தொற்றால் தமிழகமே ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறிய வேளையில் பொறுப்பேற்றதால் இந்த சந்திப்புக்கு 42 நாள்கள் ஆகியிருக்கின்றன.   டெல்லி சென்ற ஸ்டாலினுக்கு திமுக எம்பிக்கள் அளித்த உற்சாக வரவேற்பு லோக்கல் மீடியாக்களையும், வடக்கத்திய அரசியல் தலைவர்களையும் கவனிக்க வைத்திருக்கிறது.   பிரதமரிடம் அதிமுக முன்னாள் முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் மீதான ஊழல்கள் பற்றியும் ஸ்டாலின் புகார் புஸ்தகம் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனா...
தங்க கடத்தலுக்கு ‘செக்!’; ‘ஹால்மார்க்’ கட்டாயத்தின் பரபரப்பு பின்னணி!!

தங்க கடத்தலுக்கு ‘செக்!’; ‘ஹால்மார்க்’ கட்டாயத்தின் பரபரப்பு பின்னணி!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
தங்க நகைகளுக்கு ஜூன் 16 முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் ஹால்மார்க் முத்திரை வழங்கும் மையம் இல்லை என ஜூவல்லரி நிறுவனங்களிடம் இருந்து கோரிக்கை எழவே முதல் கட்டமாக 256 மாவட்டங்களில் மட்டுமே ஹால்மார்க் முத்திரையை மத்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது.   இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, ஆகஸ்ட் மாதம் வரை எந்த அபராதமும் விதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார். 256 மாவட்டங்களில் ஹால்மார்க் கட்டாயம் என்றாலும் ஆண்டுக்கு ரூ.40 லட்சத்துக்கு கீழ் விற்பனை இருக்கும் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல வாட்ச், பேனா உள்ளிட்டவற்றுக்கும், குந்தன் உள்ளிட்ட சில ஆபரணங்களுக்கும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள், ஹால்மார்க் முத்திரை ...
ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…! திரை இசையில் வள்ளுவம்! #தொடர்

ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…! திரை இசையில் வள்ளுவம்! #தொடர்

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
சங்க இலக்கியங்களை, வெகுசன ரசிகர்களுக்கு ஏற்ப திரை இசைப் பாடல்களில் குழைத்துத் தருவது என்பது ஒரு நுட்பமான கலை. தமிழ்த் திரைப்படங்களில் 'இளங்கம்பன்' கண்ணதாசன் அதைச் சரிவர செய்தவர் என்பது என் அபிப்ராயம்.   மூத்த கவிஞர்கள் மருதகாசி, வாலி ஆகியோருக்குப் பிறகு வைரமுத்துவும் அவ்வப்போது இலக்கியங்களில் புரண்டு எழுவார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற தொகுப்புகளில் சங்க இலக்கியங்கள் வரிசை கட்டி நின்றாலும் குறுந்தொகை மீது திரைக்கவிஞர்களுக்கு எப்போதும் சற்று ஈர்ப்பு அதிகம். தவிர, கம்ப காவியத்தையும், பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பில் இருந்து திருக்குறளையும் திரை இசையில் வெகுவாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.   அண்மையில், யூடியூபில் ஒரு பாடலைக் கேட்க நேர்ந்தது. 'நண்பேன்டா (2015)' என்றொரு படம். உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடித்திருந்தனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில், 'ஊரெல்லாம் உன்னைக் கண்டு விய...