Tuesday, October 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Author: புதிய அகராதி

அழகு சாதன கிரீம்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து! எச்சரிக்கிறார் மருத்துவர் மேஜர். ஆர்.கனகராஜ்

அழகு சாதன கிரீம்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து! எச்சரிக்கிறார் மருத்துவர் மேஜர். ஆர்.கனகராஜ்

அலோபதி, பெண்கள் நலம், மகளிர், மருத்துவம், முக்கிய செய்திகள்
ஆண்களோ, பெண்களோ தங்கள் முகத்தை அழகு படுத்திக்கொள்ள விரும்பாதவர்கள் யாருமே இல்லை. இந்த உளவியலைப் புரிந்து கொண்டதால்தான் பல நுகர்பொருள் நிறுவனங்கள், அழகு சாதன பொருட்களை சந்தையில் அள்ளிக் கொட்டி வருகின்றன. இந்தியாவில் மட்டும் அழகு சாதனப் பொருட்களின் சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் கோடியாக உள்ளது. ஆண்டுதோறும் 20 விழுக்காடு விற்பனை கூடியும் வருகிறது. ஆனால் சந்தையில் விற்கப்படும் சோப் முதல் முகத்திற்குப் போடும் கிரீம் வரை எதுவும் நம் முகத்திற்கு நிரந்தர அழகை தராது; மாறாக வேறு சில பக்க விளைவுகளை மட்டுமே உண்டாக்கும் என எச்சரிக்கிறார், சேலம் இரண்டாம் அக்ரஹாரத்தில் உள்ள டாக்டர் ராமு லைப் கேர் மருத்துவமனை தோல் நோய் மருத்துவர் மேஜர் ஆர். கனகராஜ். "அந்தப் பெண்ணிற்கு சுமார் 22 வயது இருக்கும். விடிந்தால் திருமண நிச்சயதார்த்தம். இந்த நிலையில் அவர், ஏதோ ஒரு அழகு நிலையத்திற்குச் சென்று, கைகளில் செயற்க...
என்ஜினீயர்கள் திறந்த இயற்கை அங்காடி

என்ஜினீயர்கள் திறந்த இயற்கை அங்காடி

வர்த்தகம்
இளைஞர்கள் நாலைந்து பேர் ஒன்று சேர்ந்தாலே அவர்களிடம் வெற்று கேளிக்கைப் பேச்சுக்கள் மட்டுமே மண்டிக்கிடக்கும் என்ற பொதுப்புத்தியில் இருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கிறார்கள், சேலம் இளைஞர்கள் அறுவர். அவர்கள் ஆறு பேருமே அடிப்படையில் பொறியியல் பட்டதாரிகள். படித்தோம், கைநிறைய சம்பளம் வாங்கினோம் என்றில்லாமல், இயற்கை விவசாயிகளுக்கு தோள் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். இயற்கை விளை பொருட்களுக்கென பிரத்யேக சந்தையை உருவாக்கியதில் அவர்கள் தனித்துத் தெரிகின்றனர். [embedyt] https://www.youtube.com/watch?v=holauwiSmHk[/embedyt] சேலம் ஃபேர்லேன்ட்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே, 'கிரீனோசன்' என்ற பெயரில் இயற்கை அங்காடி நடத்தி வருகின்றனர். செல்வம், ராஜ்குமார், வரதராஜ், செந்தில்குமார், நிவாஸ், நித்யானந்தம் ஆகிய ஆறு நண்பர்களின் ஒருங்கிணைந்த சிந்தனையின் உருவாக்கமே, 'கிரீனோசன்' (GREEN'O'SUN). 'கிரீன்+ஓ+சன்' ஆகிய சொ...
பழத்திற்கொரு பாட்டு – வியாபாரத்தில் கலக்கும் தெருக்கூத்து கலைஞர்

பழத்திற்கொரு பாட்டு – வியாபாரத்தில் கலக்கும் தெருக்கூத்து கலைஞர்

வர்த்தகம்
மழைநேர இடியின்போது அர்ச்சுனனை அழைப்பது பழைமை மாறாத மனிதர்களின் வழக்கம். ஆனால், சாப்பிடாமல் அடம்பிடிக்கும் குழந்தையை சரிக்கட்ட அர்ச்சுனனை அழைக்கின்றனர் இன்றைய சேலம் மக்கள். சிறிதுநேரம் நேரடி எப்.எம். பாடலை கொடுத்துவிட்டு, பழ வியாபாரத்தை முடித்து விடும் வித்தியாசமான மனிதர்தான் அர்ச்சுனன். விற்கும் பழம் எதுவோ, அது குறித்தான செய்தியை பாடலாக படித்து விடுவது அவருடைய தனித்த அடையாளம். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காருவள்ளியைச் சேர்ந்தவர் அர்ச்சுனன். கடந்த இருபது வருடங்களாக சைக்கிளில் பழ வியாபாரம் செய்து வருகிறார். வழக்கமாக கூவி கூவி விற்பதை மாற்றி, பாட்டுப்பாடி பழங்களை விற்பனை செய்துவரும் அவரை சந்தித்தோம். "எதையாவது இட்டுக்கட்டி பாடுவது சிறுசிலிருந்தே பழகி போச்சுங்க. ஒரே இடத்துல உக்காந்து விக்காம, அவிங்க இடத்துக்கே போய் வியாபாரம் செய்யறது சரின்னு தோணுச்சு. அதிகாலை 3 மணிக்கெல்லாம் தோட்டத்துக்கு ப...
இந்தியா, ஒற்றை நாடு அல்ல! “ஹிந்தியை திணித்தால் தமிழர்கள் ‘வெச்சி’ செய்வார்கள்” – சு.பொ.அகஸ்தியலிங்கம்

இந்தியா, ஒற்றை நாடு அல்ல! “ஹிந்தியை திணித்தால் தமிழர்கள் ‘வெச்சி’ செய்வார்கள்” – சு.பொ.அகஸ்தியலிங்கம்

அரசியல், இந்தியா
தமிழகம் உருவாக்கிய மொழி உணர்வு, இன்றைக்கும் இந்திய அரசியலில் ஓர் ஆக்கப்பூர்வமான பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது. அதில் சில தோல்விகள் இருக்கலாம்; பலகீனம் இருக்கலாம். நான் வரலாற்றை கொச்சைப்படுத்த வில்லை. இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் அடக்கி ஆண்டபோது ஏற்பட்ட சிப்பாய்க்கலகத்தை மடைமாற்றம் செய்வதற்காக, காங்கிரஸ் அமைப்பை உருவாக்கினர். அதை ஒரு 'சேஃப்டி வால்வு' ஆக பயன்படுத்தினர். ஆனால் அந்த காங்கிரஸ் கட்சி, பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான அமைப்பாக மாறியது. 1886ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சி துவக்கப்பட்ட மூன்றாவது மாநாடு, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் நடந்தது. இந்த மாநாட்டிற்கு முன்புவரை காங்கிரசார் ஆங்கிலத்தில்தான் எழுதுவார்கள். பேசுவார்கள். ஆனால் முதன்முறையாக அவரவர் தாய்மொழியில் பேசும் மாநாடாக அமைந்தது சென்னை மாநாடுதான். அந்த மாநாட்டில் மூக்கணாச்சாரி என்ற பொற் கொல்லர், எப்படி சிறுதொழில்கள் நசிந்தது என...
வெண்குஷ்டம் உள்ளவரும் மனிதரே…! “ஒதுக்குதல் வேண்டாம்” – மருத்துவர் மேஜர் ஆர்.கனகராஜ்

வெண்குஷ்டம் உள்ளவரும் மனிதரே…! “ஒதுக்குதல் வேண்டாம்” – மருத்துவர் மேஜர் ஆர்.கனகராஜ்

அலோபதி, சேலம், மருத்துவம், முக்கிய செய்திகள்
மனித உடலின் மிகப்பெரிய உறுப்பு, தோல். ஒருவருக்கு இயல்பான தோலின் நிறம் என்பது மரபியல் சார்ந்தே அமைகின்றன. அதேநேரம் தோல் நோய்கள் ஏற்பட்டால், அவை மனதையும் உளவியல் ரீதியாக தாக்குகின்றன. குறிப்பாக, தோல் நோய்களால் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். தோலில் ஏற்படும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று, வெண்குஷ்டம் (Vitiligo). உலகளவில் 1 சதவீதம் பேருக்கு வெண்குஷ்டம் பிரச்னை உள்ளதாகச் சொல்கிறது ஓர் ஆய்வு. வெண்குஷ்டம் ஏன் ஏற்படுகிறது, கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக சொல்கிறார், சேலம் இரண்டாம் அக்ரஹாரத்தில் உள்ள 'டாக்டர் ராமு லைஃப் கேர் மருத்துவமனை' தோல் சிகிச்சை மருத்துவர் மேஜர் ஆர்.கனகராஜ். இனி அவர்... ஒருவருடைய தோலில் வெண்குஷ்டம் உருவாவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மரபணுக்கள் குறைபாடு அல்லது தோலுக்கு நிறம் தரக்கூடிய 'மெலனின்'...
சிறுதானிய தின்பண்டங்கள் – அசத்தும் சேலம் இளைஞர்

சிறுதானிய தின்பண்டங்கள் – அசத்தும் சேலம் இளைஞர்

மருத்துவம்
வணிகமயமான இன்றைய உலகில் தொழில் தர்மம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையில், பாரம்பரிய சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதில் 100 சதவீத வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்கிறார், பிரபாகரன். சேலம் உடையாப்பட்டி செல்வநகரை சேர்ந்த பிரபாகரன், அடிப்படையில் எம்.இ., கணினி பொறியியல் பட்டதாரி. கடந்த சில ஆண்டுகளாக பாரம்பரிய விவசாயத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இயற்கை விவசாயத்தின் நீட்சியாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனிவரகு, கம்பு, மூங்கில் அரிசி உள்ளிட்ட சிறுதானியங்களை விற்பனை செய்வதோடு, அவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட தின்பண்டங்களாகவும் தயாரித்து விற்பனை செய்கிறார். அரிசியில் தயாரிக்கப்படும் அனைத்து உணவு வகைகளையும் சிறுதானியங்களிலும் செய்ய முடியும். மட்டுமின்றி, குழந்தைகள், பெரியவர்களுக்கு பிடித்தமான தின்பண்டங்களையும் சிறுதானியங்களில் தயாரிக்கலாம். தினை, சாமை, வரகு மாவின...