Monday, March 2மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Author: புதிய அகராதி

திண்ணை: அமைச்சருக்கு எதிராக படை திரட்டும் கோஷ்டிகள்

திண்ணை: அமைச்சருக்கு எதிராக படை திரட்டும் கோஷ்டிகள்

திண்ணை, முக்கிய செய்திகள்
''இந்த வருஷம் வெயில் புரட்டி எடுக்கும்னு பேசிக்கிறாங்களே அப்படியா?,'' என்று ஏற்கனவே வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்திருந்த பேனாக்காரரைப் பார்த்துக் கேட்டபடியே பக்கத்தில் வந்து அமர்ந்தார் பொய்யாமொழியார். ''வானிலை அறிக்கையை விடுங்க… தமிழ்நாட்டு தேர்தல் களம் வரலாறு காணாத வகையில இந்தமுறை ரொம்பவே கனல் தெறிக்கப் போகுது பாருங்க,'' என்று நேரடியாகவே சங்கதிக்கு வந்தார் பேனாக்காரர். இதற்கிடையே அங்கு வந்து சேர்ந்த நக்கல் நல்லசாமி, ''தமிழ்நாடு அரசியல் களம் இருக்கட்டும். மாங்கனி மாவட்ட கள நிலவரத்தைச் சொல்லுங்க,'' என்றார். ''சமீபத்துல மாங்கனி மாவட்டத்தில் கடாரம் கொண்டான் அமைச்சரின் உள்ளடி வேலைகள் குறித்து ஒரு பத்திரிகையில் செய்தி வந்தது. சில நாள்களுக்கு முன்பு மாநகராட்சியில் நடந்த கூட்டத்துல எதிர்க்கட்சி கவுன்சிலர் அந்த பத்திரிகையை கையில் ஏந்தியபடி அமைச்சரின் ஆதரவு கவுன்சிலர்கள் குறித்து ஏதோ பே...
பட்ஜெட் எதிரொலி: ரத்தக்களறியான இந்திய பங்குச்சந்தை

பட்ஜெட் எதிரொலி: ரத்தக்களறியான இந்திய பங்குச்சந்தை

முக்கிய செய்திகள், வர்த்தகம்
பியூச்சர் மற்றும் ஆப்ஷன் டிரேடிங் மீதான எஸ்டிடி வரி உயர்வு காரணமாக, பட்ஜெட் நாளான நேற்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. இந்திய அரசின் 2026 - 2027ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் உரையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு உற்சாகம் தரும் அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்ஜெட் உரையில் அதற்கான அறிகுறிகள் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். பியூச்சர் மற்றும் ஆப்ஷன் வர்த்தகத்தின் மீது எஸ்டிடி வரி உயர்வு, திரும்பப் பெறுதல்களுக்கான வரி விதிப்பு, லாப முன்பதிவு, உலோகப் பங்குகளின் வீழ்ச்சி காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகள் ரத்தக் களறியானது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு, சென்செக்ஸ் மற்றும் நிப்டி 0.5 சதவீதம் வரை உயர்ந்தது. ஆனால், பட்ஜெட் தாக்கலான பிறகு சந்தையின் போக்கில் பெரும்...
அமைச்சர் ராஜேந்திரன்: தரை தட்டும் கப்பலா? கரையேறும் மாலுமியா?

அமைச்சர் ராஜேந்திரன்: தரை தட்டும் கப்பலா? கரையேறும் மாலுமியா?

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ராஜேந்திரன், அமைச்சர் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனின் பிரித்தாளும் அரசியல் தந்திரம், வரும் சட்டமன்ற தேர்தலில் அவரையே பூமராங் ஆக திருப்பித் தாக்கும் என்கிறார்கள் திமுகவின் மூத்த உடன்பிறப்புகள். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர், வழக்கறிஞர் ராஜேந்திரன் (66). குரு நானக் கல்லூரியில் இளங்கலை மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது நடந்த மாணவர் அமைப்புத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, கலைஞரின் கவனத்தை ஈர்த்தார். காரணம், அந்த நேரத்தில் வேறு எந்தக் கல்லூரியிலும் திமுகவின் மாணவர் அமைப்பு வெற்றி பெறவில்லை. மாணவர் அணி அமைப்பாளர், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர், இளைஞரணி மாநில துணை செயலாளர் என்று படிப்படியாக உயர்ந்த ராஜேந்திரன், திமுகவின் தனிப்பெரும் அமைப்பான தொமுசவின் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். மறைந்த வீரபாண்டியார், ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்தபோது, அவருக்கு எதிராக மு.க.ஸ்டாலினால் வளர...
ரசிகனை கிறங்கடிக்கும் நெல்லுச் சோறும் நேத்து வெச்ச மீன் கொழம்பும்!

ரசிகனை கிறங்கடிக்கும் நெல்லுச் சோறும் நேத்து வெச்ச மீன் கொழம்பும்!

சினிமா, முக்கிய செய்திகள்
இசையமைப்பாளர், கவிஞர், பாடகர், நடிகர் ஆகிய நான்கு முக்கிய அம்சங்களும் துல்லியமான பங்களிப்பை வழங்கும்போது ஒரு சினிமா பாடல் முழுமையான வெற்றி பெற்று விடுகிறது. அப்படி சரியான கலவையில் அமைந்த பாடல்களுள் ஒன்றுதான், 'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு… நெய் மணக்கும் கத்தரிக்கா…' பாடலும். ரஜினியின் திரைப் பயண வரலாற்றை, 'முள்ளும் மலரும் (1978)' படத்தை ஒதுக்கி விட்டு, எழுதிவிட முடியாது. இயக்குநராக மகேந்திரனுக்கும் அதுதான் மைல் கல் படம். 'கெட்டப் பையன் சார் இந்தக் காளி…' என்று ரணகளப்படுத்தி இருக்கும் ரஜினியின் நடிப்பைத் தாண்டி, இந்தப் படத்தில் சிலாகிக்க நிறைய அம்சங்கள் நிரம்ப இருக்கின்றன. கதை, நேர்க்கோட்டில் சொல்லப்பட்ட திரைக்கதை, பாத்திரப் படைப்புகளைக் கடந்து, இதன் பாடல்களும், பின்னணி இசையும் இன்று வரை ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. இசைஞானி இளையராஜா, இந்தப் படத்தை தோளில் சுமந்து சென்றிருப்ப...
தக் லைப்: புதிய மொந்தையில் பழைய கள்!

தக் லைப்: புதிய மொந்தையில் பழைய கள்!

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நாயகன் படத்திற்குப் பிறகு, 37 ஆண்டுகள் கழித்து இயக்குநர் மணி ரத்னமும், கமலும் இணைகிறார்கள் என்றபோதே தக் லைப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியது. இந்நிலையில், ஜூன் 5ம் தேதி வெளியாகி இருக்கிறது தக் லைப். சட்டத்திற்கும், காவல்துறைக்கும்அஞ்சாமல் தான்தோன்றித்தனமானசெயல்களில் ஈடுபடுவோரேதக் / பொறுக்கிகள் / தாதாக்கள்.அப்படிப்பட்ட ஒரு தக்கின்வாழ்க்கையில் நடக்கும்சம்பவங்கள்தான்இந்தப் படத்தின் கதை. 1994ல், பழைய தில்லியில்கதை தொடங்குகிறது.தூத்துக்குடி மாவட்டம்காயல்பட்டினத்தை பூர்வீகமாககொண்ட ரங்கராய சக்திவேலும் (கமல்),அவருடைய அண்ணன் மாணிக்கமும் (நாசர்)பழைய தில்லியில் ரியல் எஸ்டேட்மாபியாக்களாக வலம் வருகிறார்கள். இவர்களுக்கும், மற்றொருகேங்ஸ்டரான சதானந்த் (மகேஷ் மஞ்ச்ரேகர்)தலைமையிலான கோஷ்டிக்கும்,ஓர் அடுக்குமாடி குடியிருப்பில்வைத்து பேச்சுவார்த்தை நடக்கிறது.சக்திவேல் கோஷ்டியை ச...
‘ஆங்கிரி பேர்ட்’ பெண் கவுன்சிலர்; நிலைகுலைந்த அதிமுக தலைவர்; களேபரமான மாநகராட்சி!

‘ஆங்கிரி பேர்ட்’ பெண் கவுன்சிலர்; நிலைகுலைந்த அதிமுக தலைவர்; களேபரமான மாநகராட்சி!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?' என சினிமாக்களில் டைட்டில் கார்டுக்கு முன்பாக வரும் முகேஷின் கதை போலாகி விட்டது, சேலம் மாநகராட்சி. அண்மைக் காலமாக அரங்கேறி வரும் கவுன்சிலர்கள் மோதல், மாமன்ற அரங்கை களேபரமாக்கி வருவது பல தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாநகராட்சியில்,கடந்த மே 29ம் தேதி மாமன்றஇயல்பு கூட்டம் நடந்தது.அன்றைய தினம் காலையில்அரசு நிகழ்ச்சி இருந்ததால்தாமதமாகவே கூட்டம் தொடங்கியது.அடுத்த ஒரு மணி நேரத்தில்அதுவரை நிகழாத சம்பவம்மாமன்ற அரங்கத்தில் அரங்கேறியது. அதிமுக கவுன்சிலரும்,எதிர்க்கட்சித் தலைவருமான யாதவமூர்த்தி,'சாலை சீரமைப்பு பணிகளுக்காக30 கோடி ரூபாயில் டெண்டர்கோரப்பட்டு இருந்தது. அமைச்சரின்ஆதரவாளரான காமராஜூக்குடெண்டர் ஒதுக்குவதற்கு ஏதுவாகடெண்டரை ரத்து செய்தது ஏன்?,'என்று கேள்வி எழுப்பினார். அவர் இப்படி பேசி முடிப்பதற்குள்ளாகவேஆளுங்கட்சி கவுன்சிலர்கள் பொங...
கரும்பு கொள்முதல் தொகை 23 கோடி ரூபாய் நிலுவை; விவசாயிகள் கவலை

கரும்பு கொள்முதல் தொகை 23 கோடி ரூபாய் நிலுவை; விவசாயிகள் கவலை

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
கரும்பு அரைவைப் பணிகள் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் கொள்முதல் பணம் 23 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நாமக்கல் மாவட்டம் மோகனூரில்,சேலம் கூட்டுறவு சர்க்கரைஆலை இயங்கி வருகிறது.இந்த ஆலை நிர்வாகம் நாமக்கல்,மோகனூர், ராசிபுரம், சேந்தமங்கலம்,திருச்சி மாவட்டத்தில் தொட்டியம்,முசிறி, துறையூர், சேலம் மாவட்டத்தில்ஆத்தூர், கெங்கவல்லி வரையிலானபதிவு பெற்ற விவசாயிகளிடம் இருந்துசர்க்கரை உற்பத்திக்காக கரும்புகொள்முதல் செய்து வருகிறது. ஆலையின் எல்லைக்குஉட்பட்ட பகுதிகளில்கடந்த ஆண்டு 2445 ஏக்கர்பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டது.அதன் அடிப்படையில்,2024-2025ம் ஆண்டிற்கு,1.45 லட்சம் டன் கரும்புஅரைவைக்குக் கொண்டு வரசேலம் கூட்டுறவு சர்க்கரைஆலை இலக்கு நிர்ணயித்தது. ஆனால், பருவம் தப்பிய மழைகா...
சேலம்: அமைச்சருக்கு எதிராக அணிதிரளும் கவுன்சிலர்கள்!

சேலம்: அமைச்சருக்கு எதிராக அணிதிரளும் கவுன்சிலர்கள்!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கடந்த மாதம், ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயரை புகார்களால் புரட்டி எடுத்த சம்பவத்தின் பின்னணியில் மாவட்ட அமைச்சருக்கு எதிரான அதிருப்திதான் காரணம் என்ற பரபரப்பு தகவல்கள் கிளம்பி உள்ளன. சேலம் மாநகராட்சி 43வது வார்டுகவுன்சிலர் குணா என்கிற குணசேகரன்.வழக்கறிஞரான இவரை, 'சார்' என்றஅடைமொழியுடன் கட்சியினர் குறிப்பிடுவர்.தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராகஉள்ள வழக்கறிஞர் ராஜேந்திரனைஎதிர்த்து அரசியல் செய்யக்கூடியவர்.இருமுறை மண்டலக்குழுத்தலைவராக இருந்தவர்.இப்போதும், திமுக தலைவர்மு.க.ஸ்டாலினின் 'குட்புக்'கில்இருப்பவர். குணசேகரன் இவர், வழக்கமாக மாமன்றகூட்டத்தில் வருவதும் தெரியாது;செல்வதும் தெரியாது.சைலண்ட் மோடிலேயேஇருக்கக்கூடிய குணசேகரன்,கடந்த பிப். 25ம் தேதி நடந்தமாமன்ற கூட்டத்தில் திடீரென்றுபொங்கி எழுந்துவிட்டார். மேயர் முதல் காண்டிராக்டர்கள்வரை ஒரு பிட...
சேலம் அதிமுக மாவட்ட செயலாளர் நீக்கம் ஏன்? பரபரப்பு பின்னணி!

சேலம் அதிமுக மாவட்ட செயலாளர் நீக்கம் ஏன்? பரபரப்பு பின்னணி!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ ஜி.வெங்கடாசலம், திடீரென்று நீக்கப்பட்டதன் பின்னணியில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுகவில், சேலம் மாநகர்மாவட்டச் செயலாளராகஇருந்தவர் ஜி.வெங்கடாசலம்.8 ஆண்டுக்கும் மேலாக இந்தப்பதவியில் இருந்து வந்தார்.எடப்பாடியின் தீவிர விசுவாசியாகஅறியப்பட்ட இவர்,கடந்த ஜன. 28ம் தேதி,திடீரென்று மா.செ. பதவியில்இருந்து கட்டம் கட்டப்பட்டார்.அத்துடன், கொள்கை பரப்புதுணைச் செயலாளர் என்ற'டம்மி' பதவியில் நியமிக்கப்பட்டார். ஜி.வெங்கடாசலம் சூட்டோடு சூடாக,அனைத்துலக எம்ஜிஆர் மன்றதுணைச்செயலாளர் எம்.கே.செல்வராஜ்,சேலம் சூரமங்கலம் பகுதி செயலாளர்ஏ.கே.எஸ்.எம்.பாலு ஆகியஇருவரையும் சேலம் மாநகர்மாவட்ட பொறுப்பாளர்களாகநியமித்திருக்கிறார்எடப்பாடி பழனிசாமி. மா.செ. பதவியில் இருந்துவெங்கடாசலம் நீக்கப்பட்டதன்பின்னணி குறித்து இலைக்கட்சியின்மூத்த ந...
அன்னை தெரேசா பெயரில்1000 கோடி ரூபாய் வசூல்!கதிகலங்கிய கூட்டுறவு வங்கிகள்!

அன்னை தெரேசா பெயரில்1000 கோடி ரூபாய் வசூல்!கதிகலங்கிய கூட்டுறவு வங்கிகள்!

சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், அன்னை தெரேசா டிரஸ்ட் பெயரில் மக்களிடம் சட்ட விரோதமாக 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த முன்னாள் பா.ஜ.க., பெண் நிர்வாகி உள்ளிட்ட 17 பேரை காவல்துறையினர் கொத்தாக கைது செய்துள்ளனர். சேலம் அம்மாபேட்டையில்உள்ள சிவகாமி திருமண மண்டபத்தில்,புனித அன்னை தெரேசா மனிதநேயஅறக்கட்டளை என்ற தொண்டுநிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுக்கும்மேலாக இயங்கி வருகிறது.இந்த அமைப்பின் மூலம்பெண்களுக்கு தையல்,பாக்கு தட்டு தயாரித்தல்உள்ளிட்ட கைத்தொழில்பயிற்சிகள் இலவசமாகவழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜன. 23ம் தேதி,இந்த மண்டபத்திற்குள்பொதுமக்கள் கூட்டம் கூட்டமாகமுண்டியடித்துச் சென்றனர்.மண்டபம் அமைந்துள்ள சாலையில்போக்குவரத்து நெரிசல் ஏற்படும்அளவுக்கு கூட்டம் திரண்டது. அறக்கட்டளை நிர்வாகிகள்,பொதுமக்களிடம் முதலீடுகளைப்பெற்று வருவதாகவும்,அதை இரண்டே மாதத்தில்இரட்டிப்பாக திருப்பித் தருவதாகவும்கவர்ச்சிகரமான திட்டத்தை...