கிரிக்கெட்: இலங்கை உடனான 3வது ஒருநாள் போட்டியையும் இந்தியா வென்றது; தொடரையும் கைப்பற்றி அசத்தல்
இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஷிகர் தவான் சதம் மற்றும் சுழல் பந்து வீச்சாளர்கள் அற்புதமான ஆட்டத்தால் எளிதாக வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒரு நாள் தொடரையும் 2-1 கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இலங்கைக்கு கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி விசாகபட்டினத்தில் இன்று (டிசம்பர் 17, 2017) நடந்தது. ஏற்கனவே முதல் போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றிருந்தது. அதனால் இன்றைய போட்டி, இரு அணிகளுக்கும் தொடரை வெல்லப்போவது யார் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பந்து வீச்சை தேர்வு செய்தார். உபுல் தரங்காவின் அதிரடியால் ஒரு கட்டத்தில் இலங்கை அணி 22.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 136 ரன்கள் எடுத்திருந்தது. சீரான ஆட்டத்