Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Twenty-20

பரபரப்பான ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா; தொடரையும் கைப்பற்றியது

பரபரப்பான ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா; தொடரையும் கைப்பற்றியது

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அத்துடன் 2 - 1 கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் மற்றும் மூன்று ட்வென்டி - 20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் நியூஸிலாந்து அணியும் வெற்றி பெற்று 1-1 கணக்கில் சமநிலையில் இருந்தது. இன்று (அக்டோபர் 29, 2017), கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடந்தது. இந்த தொடரை எந்த அணி வெல்லப்போகிறது என்பதை நிர்ணயிக்கும் போட்டி என்பதால், ரசிகர்களிடையே பெரும் ஆரவாரம் காணப்பட்டது. மைதானமும் நிரம்பி வழிந்தது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்க
மூன்றாவது டுவென்டி-20 ரத்து; இந்தியா – ஆஸி. ஏமாற்றம்!

மூன்றாவது டுவென்டி-20 ரத்து; இந்தியா – ஆஸி. ஏமாற்றம்!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஹைதராபாத்தில் இன்று (அக்டோபர் 13, 2017) நடக்க இருந்த மூன்றாவது மற்றும் இறுதி டுவென்டி-20 கிரிக்கெட் போட்டி, மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்திருந்தது. அடுத்து, மூன்று 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றது. முதல் இரண்டு டுவென்டி-20 போட்டியில் இந்தியாவும், ஆஸி அணியும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளன. மூன்றாவது மற்றும் இறுதி டுவென்டி-20 போட்டி இன்று ஹைதராபாத்தில் நடக்க இருந்தது. அங்கு கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இன்று மழை இல்லை. எனினும், மைதானம் ஈரப்பதத்துடன் இருந்தது. இரவு 7 மணிக்கும், பிறகு 7.45 மணிக்கும் மைதான ஈரப்பதம் சோதிக்கப்பட்டது. ஆடுகளம் போட்டி நடத்துவதற்கு உகந்ததாக இல்லை என அறிக்கை அளிக்கப்பட்டது. இதையடுத்து,
டி-20 கிரிக்கெட்: இந்திய தலைகள் உருண்டன; ஆஸி. அசத்தல் வெற்றி

டி-20 கிரிக்கெட்: இந்திய தலைகள் உருண்டன; ஆஸி. அசத்தல் வெற்றி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கவுகாத்தியில் நடந்த ஆஸி. அணிக்கு எதிரான இரண்டாவது டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் கைகொடுக்காததால், 8 விக்கெட்டில் ஆஸி அணியிடம் தோல்வியைத் தழுவியது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை 4-1 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றியை பதிவு செய்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி கவுஹாத்தியில் இன்று (அக். 10) நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் வார்னர், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். தலைகள் உருண்டன: இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா (8), ஷிகர் தவான் (2), விராட் கோலி (0), மனீஷ் பாண்டே (6) என ‘டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்களை, ஆஸி பந்து வீச்சாளர் பெஹர்டெண்டிராப் பெவிலியனுக்க
முதல் டுவென்டி-20: ஆஸியை வீழ்த்தியது இந்தியா

முதல் டுவென்டி-20: ஆஸியை வீழ்த்தியது இந்தியா

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு எதிரான ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை, ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே 4-1 கணக்கில் இழந்திருந்தது. இதையடுத்து மூன்று டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலாவது டி-20 போட்டி ராஞ்சியில் இன்று (அக்டோபர் 7) நடந்தது. இரவு 7 மணிக்கு போட்டி துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தோள் பட்டையில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் விளையாடவில்லை. டேவிட் வார்னர் கேப்டன் பொறுப்பை ஏற்றார். ஸ்மித்துக்கு மாற்று வீரராக மார்கஸ் ஸ்டாய்னிஸ் இடம் பெற்றார். இந்திய அணியில் ரஹானே, அக்சர் படேல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, குல்தீப் யாதவ், ஷிகர் தவான் வாய்ப்பு பெற்றனர். வெற்றி பெறும் முனைப்புடன
டி-20: இலங்கையை கதற விட்டது இந்தியா

டி-20: இலங்கையை கதற விட்டது இந்தியா

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இலங்கைக்கு எதிரான டுவென்டி டுவென்டி கிரிக்கெட் போட்டியில், கோஹ்லியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணிக்கு எதிரான ஒரே ஒரு டுவென்டி டுவென்டி கிரிக்கெட் போட்டி நேற்று (செப். 6) கொழும்பு பிரேமாதாசா மைதானத்தில் நடந்தது. பகலிரவு ஆட்டமான இந்தப் போட்டி, மழை காரணமாக 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணி தரப்பில் ரஹானே, ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு, லோகேஷ் ராகுல், அக்ஷர் படேல் சேர்க்கப்பட்டு இருந்தனர். இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிக்வெல்லா, கேப்டன் உபுல் தரங்கா ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தரங்கா 5 ரன்களிலும், டிக்வெல்லா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த அணியில் முனவீரா மட்டும் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப