Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Salem Lok Sabha

சொந்த மண்ணில் எடப்பாடி வீழ்ந்தது ஏன்? காலை வாரிய பாமக, தேமுதிக! கைவிட்ட வெற்றி விநாயகர்!!

சொந்த மண்ணில் எடப்பாடி வீழ்ந்தது ஏன்? காலை வாரிய பாமக, தேமுதிக! கைவிட்ட வெற்றி விநாயகர்!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆளுங்கட்சியின் மீதான வெறுப்பு, பாஜகவுக்கு எதிரான மக்களின் மனநிலை மட்டுமின்றி, பெரிதும் நம்பிக்கொண்டிருந்த கூட்டணி கட்சிகளே சொந்த மண்ணில் எடப்பாடியை திட்டமிட்டு வீழ்த்தி இருப்பது தெரிய வந்துள்ளது.   பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வராக அமர்த்தப்பட்டது ஒரு விபத்து என்றாலும், அதன் பிறகு அவரின் ஒட்டுமொத்த கவனமும் கொங்கு மண்டலத்தின் மீதே குவிந்து இருந்தது. மக்களவைக்கு மட்டுமல்ல; ஒருவேளை சட்டப்பேரவை தேர்தல் வந்தாலும் கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் நோக்கிலேயே மாதத்தில் இருமுறையாவது அவர் தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு வந்து விடுவார். நீரா பானம், அத்திக்கடவு அவினாசி திட்டங்கள் கொண்டு வந்ததும்கூட, அவர் சார்ந்த சமூகத்தினரின் வாக்குகளை குறிவைத்துதான். ஆனால், இந்த மக்களவை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் க
மக்களவை தேர்தல்: சேலத்தில் திமுக வரலாற்று வெற்றி! எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. ஆனார்!!

மக்களவை தேர்தல்: சேலத்தில் திமுக வரலாற்று வெற்றி! எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. ஆனார்!!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
மக்களவை தேர்தலில், 39 ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் தொகுதியை வசப்படுத்தி, வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது, திமுக. அக்கட்சியின் வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் அமோக வெற்றி பெற்று, எம்.பி. ஆகியுள்ளார்.   தமிழகத்தில் மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் எஸ்.ஆர்.பார்த்திபன், ஆளும் அதிமுக தரப்பில் கே.ஆர்.எஸ். சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்கள் மட்டுமின்றி, டிடிவி தினகரனின் அமமுக தரப்பில் எஸ்.கே.செல்வம், மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரபு மணிகண்டன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராசா அம்மையப்பன் உள்ளிட்ட 22 பேர் போட்டியிட்டனர். ஏற்கனவே கடந்த 2009, 2014 ஆகிய இரு மக்களவை தேர்தல்களிலும் சேலம் தொகுதியை அதிமுகவே கைப்பற்றி இருந்தது. அத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால், எப்படியும் இந்த தேர்தலிலும் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற
அமமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க திட்டம்?

அமமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க திட்டம்?

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மக்களவை தொகுதியில் டி.டி.வி.தினகரனின் அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.செல்வம் போட்டியிடுகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பொருத்தவரை, இந்த தொகுதியை சிந்தாமல் சிதறாமல் கைப்பற்றி விட வேண்டும் என்று தனது பரிவாரங்களை களத்தில் இறக்கி விட்டிருக்கிறார். இந்த தொகுதியில் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுக்கு இருக்கும் கணிசமான வாக்குகள் மூலம், அதிமுக வேட்பாளரை எளிதில் வெற்றி பெற வைத்துவிடலாம் என்றும் ஆளும்தரப்பு கணக்குப் போடுகிறது. ஆனால், அமமுக சார்பில் களம் இறங்கியுள்ள முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. செல்வம், பிரதான எதிர்க்கட்சியான திமுகவைக் காட்டிலும் கடும் சவாலாக விளங்குவார் என எடப்பாடி தரப்பினரே சொல்கின்றனர். ஏனெனில் எஸ்.கே.செல்வம், சேலம் மக்களவை தொகுதியில் அடங்கியுள்ள சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, ஓமலூர், வீரபாண்டி, எடப்பாடி ஆகிய ஆறு சட்டமன்ற தொகு
சேலம் மக்களவை தொகுதி: திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் மனுத்தாக்கல்; ரூ.6 கோடிக்கு சொத்து கணக்கு!

சேலம் மக்களவை தொகுதி: திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் மனுத்தாக்கல்; ரூ.6 கோடிக்கு சொத்து கணக்கு!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஆர்.பார்த்திபன், வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019) வேட்புமனு தாக்கல் செய்தார். அவர், தன் பெயரிலும், மனைவி பெயரிலும் ரூ.6 கோடி சொத்துகள் இருப்பதாக கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளார்.   மக்களவை தேர்தலையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பரப்புரையை தொடங்கியுள்ளன. இக்கட்சிகளின் வேட்பாளர்கள் பரவலாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன், வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019) மதியம், சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரோகிணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தேர்தல் பொறுப்பாளர் கந்தசாமி, காங்கிர