
‘ஊழல்’ பதிவாளரை காப்பாற்றும் துணைவேந்தர்! ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு!!
சேலம் பெரியார் பல்கலை 'நிரந்தர' பொறுப்பு பதிவாளர் தங்கவேலை, பணியிடைநீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டப் பிறகும், துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவை மதிக்காமல் முரண்டு பிடித்து வருவது உயர்கல்வித்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தை அடுத்த கருப்பூரில்,
1997ம் ஆண்டு பெரியார்
பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
சாதிய அடுக்குகளை எதிர்த்து
காலம் முழுவதும் போராடி வந்த
பெரியாரின் பெயரில் அமைந்த
இந்தப் பல்கலையில் சாதிய
வன்மம் புரையோடிக் கிடக்கிறது.
வீரபாண்டியார் உயிரோடு இருந்தவரை
வன்னியர்கள் ஆதிக்கமும்,
2011 - 2021 காலக்கட்டத்தில்
அதிமுக ஆட்சியில் கொங்கு வெள்ளாள
கவுண்டர்கள் ஆதிக்கமும் பல்கலையில்
தலை விரித்தாடுகிறது.
துணைவேந்தர் சுவாமிநாதன்
பதவிக்காலத்தில், ஆசிரியர் மற்றும்
ஆசிரியர் அல்லாத பணியாளர்கள்
நியமனத்தில் 60 கோடி ரூபாய்க்கு மேல்
ஊழல் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
பேராசி...