Saturday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: new record

கோஹ்லி 9000 ரன்களை கடந்து சாதனை!

கோஹ்லி 9000 ரன்களை கடந்து சாதனை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இன்று (அக்டோபர் 29, 2017) நடந்து வரும்,  இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸி. அணிக்கு 338 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 29 ஓவர்களில், நியூசிலாந்து அணி  3 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்து இருந்தது. தொடர்ந்து விளையாடி வருகிறது. கோஹ்லியின் சாதனைகள்: 202வது ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, இன்றைய ஆட்டத்தில் 32வது சதம் அடித்து அசத்தினார். இந்த ஆட்டத்தில் அவர் 106 பந்துகளில் மொத்தம் 113 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதில், 8 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இன்றைய போட்டியில் அவர் 83 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் ஒருநாள் போட்டிகளில் 9000 ரன்கள் என்ற புதிய மைல்கல் இலக்கை எட்டினார். ஏற்கனவே தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ஏபி டிவில்லியர்ஸ் 205 இன்னிங்ஸ்களில்
கிரிக்கெட்: நியூஸிக்கு 281 ரன் இலக்கு; கோஹ்லி புதிய சாதனை!

கிரிக்கெட்: நியூஸிக்கு 281 ரன் இலக்கு; கோஹ்லி புதிய சாதனை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கனே வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் ஒரு நாள் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (அக். 22, 2017) மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியில் நீண்ட நாள்களுக்குப் பிறகு, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்தார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் மட்டை வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் ஜோடி பெரிய அளவில் சோபிக்கவில்லை. சிக்ஸர் அடித்து அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கிய ரோஹித் ஷர்மா, 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவானும் 9 ரன்களில் வெளியேறினார். இருவருமே நியூஸியின் டிரன்ட் போல்ட் வேகத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தினேஷ்கார்த்திக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்தார். அவரும் ஒருகட்டத்தில் 37 ரன்களில் த
ஆஸியை வீழ்த்தியது இந்தியா:  குல்தீப் ‘ஹாட்ரிக்’ சாதனை!

ஆஸியை வீழ்த்தியது இந்தியா: குல்தீப் ‘ஹாட்ரிக்’ சாதனை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் 'ஹாட்ரிக்' விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. கடந்த 17ம் தேதி சென்னையில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (செப். 21) நடந்தது. சதத்தை நழுவவிட்ட கோஹ்லி: டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து, ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரஹானே, கேப்டன் விராட் கோஹ்லி ஆகியோர் அபாரமாக ஆடி அரை சதம் கடந்தனர். ரஹானே 5