சேலம், திருப்பூர் உள்ளிட்ட 8 அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் திடீர் இடமாற்றம்!
சேலம், திருப்பூர் உள்ளிட்ட
8 அரசு மருத்துவக்கல்லூரி
முதல்வர்கள் திடீரென்று
இடமாற்றம் செய்யப்பட்டு
உள்ளனர்.
தமிழ்நாடு மருத்துவக்கல்வி
இயக்கக தேர்வுக்குழு
செயலர் / கூடுதல் இயக்குநராக
பணியாற்றி வரும் சாந்திமலர்,
சென்னை கீழ்ப்பாக்கம்
அரசு மருத்துவக்கல்லூரி
முதல்வராக இடமாற்றம்
செய்யப்பட்டு உள்ளார்.
கீழ்ப்பாக்கம் அரசு
மருத்துவக்கல்லூரி முதல்வராக
உள்ள வசந்தாமணி,
இதுவரை சாந்திமலர்
வகித்து வந்த இடத்திற்கு
மாற்றப்பட்டுள்ளார்.
மதுரை அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை முதல்வர்
சங்குமணி, சிவகங்கை
மருத்துவக்கல்லூரி முதல்வராக
இடமாற்றம் செய்யப்பட்டார்.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி
முதல்வர் ரத்தினவேல்,
மதுரை அரசு மருத்துவக்கல்லூரிக்கு
மாற்றப்பட்டார்.
சேலம் அரசு
மோகன் குமாரமங்கலம்
மருத்துவக்கல்லூரி
முதல்வர் முருகேசன்,
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி
முதல்வர்