ஆசிரியர்களுக்கு டீ, பிஸ்கட், மதிய உணவு ‘கட்’; வேணும்னா சொந்த செலவுல பண்ணிக்குங்க!!
'யானை வாங்கியும் அங்குசம்
வாங்க காசில்லை' என்ற கதையாக,
ஆசிரியர்களை உலகத்தரத்திற்கு உயர்த்தும்
அரசின் நோக்கம் ஒருபுறம் இருந்தாலும்,
தேநீர், பிஸ்கட், மதிய உணவு போன்ற
சலுகைகளை திடீரென்று நிறுத்தியது
ஒட்டுமொத்த ஆசிரியர்
சமுதாயத்தினரிடையேயும்
கடும் அதிருப்தியை
ஏற்படுத்தி உள்ளது.
அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு முன்பு அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் சார்பில் பிரிட்டிஷ் கவுன்சில் மூலமாக ஆங்கில பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. கடந்த கல்வி ஆண்டு முதல், அனைவருக்கும் கல்வித் திட்டமானது, 'அனைவருக்குமான ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் (சமக்ர சிக்ஷா) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் இந்தாண்டு, அரசுப்பள்ளிகளில் முதலாம் வகுப்பு ஆங்கிலப்பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு ஆங்கில எழுத்துகள், சொற்களின் ஒலிப்பு முறைகள் குறித்து சிறப்பு பய...