Sunday, October 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: உள்ளாட்சி அமைப்பு

வீரம் என்றால் என்ன தெரியுமா? போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #3

வீரம் என்றால் என்ன தெரியுமா? போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #3

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
விடிந்தால், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்பதை இந்நேரத்தில் வாக்காளர்கள் முடிவு செய்திருக்கக் கூடும். எனினும், தேர்தல் ஜனநாயகத்தின் பெருமதிப்பிற்குரிய வாக்காளர்களிடம் கொஞ்சம் உரையாட விரும்பியே இந்த பதிவை எழுதுகிறேன்.   களத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிறம் உண்டு. எத்தனை நிறங்கள் இருந்தாலும், அடிப்படையில் அவை ஒரே வண்ணத்தின் நிறப்பிரிகைகள்தான்.   அதாவது, 99 விழுக்காடு கட்சிகள் முதலாளிய வர்க்கத்தினருக்கு ஆதரவானவை. உழைக்கும் வர்க்கத்திற்காக பேசக்கூடியவை எப்போதும் பொதுவுடைமைக் கட்சிகளே.   தமிழகத்தைப் பொருத்தவரை பொதுவுடைமைக் கட்சிகளும் கூட்டணி விசுவாசம் என்ற பெயரில் தன் சுயத்தை எப்போதோ தொலைத்துவிட்டு, முதலாளிய பாதையை நோக்கிச் சென்று கொண்டிரு
சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவியை இரண்டாம் முறையாக கைப்பற்றியது பாமக!

சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவியை இரண்டாம் முறையாக கைப்பற்றியது பாமக!

அரசியல், சேலம், தமிழ்நாடு
சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பதவியை பாமக இரண்டாவது முறையாக கைப்பற்றியது. அக்கட்சியின் வேட்பாளர் ரேவதி, தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவின் ராஜேந்திரன், துணைத்தலைவராக வெற்றி பெற்றார். ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. ஊராட்சி ஒன்றியக்குழு, மாவட்ட ஊராட்சிக்குழுக்களின் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11ம் தேதி (சனிக்கிழமை) நடந்தது.   சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுவில் மொத்தம் 29 உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதில், அதிமுக 18 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான பாமக 4, தேமுதிக 1 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. எஞ்சியுள்ள 6 இடங்களையும் திமுக கைப்பற்றி இருந்தது. மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பதவிக்கு போதிய பெரும்பான்மையை அதிமுக தனித்தே பெற்றிருக்கிறது. என்றாலும், ஒன்றிய
சேலம்: உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

சேலம்: உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

சேலம், முக்கிய செய்திகள்
ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (டிசம்பர் 9) தொடங்குகிறது. சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நேரடியாக 4299 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.   தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை நீங்கலாக எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல்கட்ட தேர்தல் வரும் 27.12.2019ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 30.12.2019ம் தேதியும் நடக்கிறது. தேர்தல் நடக்கும் நாளன்று, வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை, வரும் 2.1.2020ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.   மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர்
சேலம் மாநகராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 5 கோடி ரூபாய் பி.எப். தொகை எங்கே?

சேலம் மாநகராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 5 கோடி ரூபாய் பி.எப். தொகை எங்கே?

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாநகராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட 5 கோடி ரூபாய், இதுவரை பி.எப். கணக்கில் செலுத்தப்படாமல் உள்ளதால், பணிக்காலத்தில் இறந்த மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு உரிய காலத்தில் பணப்பலன்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   சேலம் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள் முதல் ஆணையர் / தனி அலுவலர் வரை ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 20 அல்லது அதற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் எந்த ஒரு தொழிலகமும் தொழிலாளர் வருங்கால வைப்பது நிதி கணக்கு எனப்படும் இபிஎப் கணக்கிற்குள் அடங்கும். இபிஎப் கணக்கின்படி, மாதம் 15 ஆயிரத்திற்கும் கீழ் ஊதியம் பெறும் ஊழியர்கள் சம்பளத்தில் இருந்து அவர்களின் பங்களிப்பாக மாதம் 12 சதவீத தொகை பிடித்தம் செய்யப்படும். அதற்கு நிகராக வேலை அளிப்பவர் அ