Monday, February 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஈழத்தமிழர்கள்

தமிழ்நாட்டில் ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது! பழ.கருப்பையா சொல்கிறார்!!

தமிழ்நாட்டில் ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது! பழ.கருப்பையா சொல்கிறார்!!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கடந்த 2011 முதல் 2016 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் பழ.கருப்பையா (76). அவருடைய மறைவுக்குப் பிறகு திமுகவில் இணைந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அக்கட்சியில் இருந்தும் வெளியேறி இருக்கிறார் பழ.கருப்பையா. பழ.கருப்பையா, ஒரு கட்சியில் இருந்து கொண்டே எப்போது அந்தக் கட்சியையே எதிர்மறையாக விமர்சிக்கிறாரோ அதையடுத்து அவர் அக்கட்சியைவிட்டு விலகி வேறு கட்சியில் சேரப்போகிறார் என்பது அவருடைய கடந்த கால அரசியல் செயல்பாடுகளை உற்றுக் காண்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.   இந்திய தேசிய காங்கிரஸ், சிண்டிகேட் காங்கிரஸ், ஜனதா கட்சி, திமுக, மதிமுக மீண்டும் காங்கிரஸ், பின்னர் அதிமுக, திமுக என கடந்த 50 ஆண்டுகளில் அவர் போகாத அரசியல் கட்சிகள் இல்லை. நாளையே அவர் மீண்டும் திமுகவில் இணைந்தாலும், சேர்த்துக் கொள்ள அக்கட்சியும் மறுக்காது. ஆனாலும், தரம
அன்று தீவிரவாதி; இன்று வன்முறை! சிக்கிக் கொண்டாரா ரஜினி?

அன்று தீவிரவாதி; இன்று வன்முறை! சிக்கிக் கொண்டாரா ரஜினி?

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் பலியாயினர். அப்போது இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், போராட்டக்காரர்களுடன் தீவிரவாதிகளும் நுழைந்ததால்தான் போராட்டம் வேறு திசைக்குச் சென்றதாகவும், இப்படி எதற்கெடுத்தாலும் போராடினால் நாடு சுடுகாடு ஆகிவிடும் என்றும் சொன்னார். இப்படி அவர் கருத்து சொன்ன அடுத்த நிமிடமே, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றவர்கள் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்தனர். போராட்டக்காரர்களையும், குண்டடிபட்டு இறந்தவர்களையும் ரஜினி தீவிரவாதிகள் என்கிறாரா? என பொதுவெளியில் வினாக்களை முன்வைத்தனர். அதற்கு ரஜினியிடம் இருந்து மவுனமே பதிலாக இருந்தாலும், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இந்நிலையில், நடுவண் பாஜக அரசு, குடியுரிமை திர
சேலம்: அவல நிலையில் அகதி முகாம்கள்! குடிநீர், கழிப்பறை, தெருவிளக்கு வசதியின்றி திண்டாடும் தொப்புள்கொடி உறவுகள்!!

சேலம்: அவல நிலையில் அகதி முகாம்கள்! குடிநீர், கழிப்பறை, தெருவிளக்கு வசதியின்றி திண்டாடும் தொப்புள்கொடி உறவுகள்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-சிறப்புக்கட்டுரை-   ஈழத்தில் நடந்த உள்நாட்டுப் போரில், எல்லாவற்றையும் இழந்து, துயரங்களை மட்டுமே சுமந்து கொண்டு, தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்த ஈழத்தமிழர்கள், இங்கும் போதிய அடிப்படை வசதிகளின்றி நாலாந்தர குடிமக்களாக வாழ்ந்து (!) வருகின்றனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் ஏற்பட்ட மோதலில் தமிழர்கள் பலர் மனைவி, குழந்தைகளுடன் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். 1983-87, 1989-91, 1996-2003 என மூன்று கட்டங்களாக தமிழகத்திற்குள் தஞ்சம் புகுந்தவர்களைக் காட்டிலும், உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்த 2006-2010 காலக்கட்டத்தில் அதிகளவில் ஈழத்தமிழர்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.   இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள 110 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் 3 லட்சம் ஈழ அகதிகள் வசித்து வந்த நிலையில், தற்போது 17 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 65
திமுகவுக்கு வைகோ ஆதரவு; கதற விடும் மீம் கிரியேட்டர்கள்!

திமுகவுக்கு வைகோ ஆதரவு; கதற விடும் மீம் கிரியேட்டர்கள்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மதிமுக தலைவர் வைகோ சொன்னாலும் சொன்னார், திமுக கூடாரத்தில் இருந்தே பலர் வைகோ ஆதரவை கிண்டலடித்து மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர். ஆதரவை விலக்கிக் கொள்ளச்சொல்லும்படியும் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர். சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகளுடன் டிடிவி தினகரனும் சுயேட்சையாக களம் இறங்குகிறார். இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மருது கணேஷூக்கு ஏற்கனவே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், மூன்று நாள்களுக்கு முன்பாக மதிமுகவும் திமுக வேட்பாளரை ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் வைகோ திடீரென்று அறிவித்தார். திமுக தரப்பில் இருந்து ஆதரவு கோரி தூது அனுப்பப்பட்டதா அல்லது அவரே தன்னிச்சையாக