Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: no-confidence motion

‘பானி பூரி’ கருத்து: மூக்குடைபட்ட ஹெச்.ராஜா!

‘பானி பூரி’ கருத்து: மூக்குடைபட்ட ஹெச்.ராஜா!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த வழக்கில் வாதாட, வட இந்தியாவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வந்தது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்ததற்கு, அவரை இணையவாசிகள் சமூகவலைத்தளங்களில் சரமாரியாக மூக்குடைத்திருக்கிறார்கள். கடந்த சில நாள்களாகவே குண்டர் சட்டம், திருமுருகன் காந்தி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் என்று கொஞ்சம் சீரியஸான கட்டுரைகளையே எழுதி வந்தோம். சரி...நம்மையும், மற்றவர்களையும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக்கலாமே என்று தோன்றியது. அப்படியே டுவிட்டர் பக்கத்தில் மேய்ந்தபோது, ஓர் அரசியல் பிரபலத்தை நெட்டிஸன்கள் சகட்டுமேனிக்கு 'வெச்சி' செய்திருப்பது தெரியவந்தது. வடிவேல் பாணியில் சொல்லணும்னா, ''எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான். இவன் ரொம்ப நல்லவன்னு'' சொல்லும் அளவுக்கு போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லோரும் ஃபோன் போட்டு அடிச்சி துவைத்திருக்கிறார்கள். வெயிட் வ
தமிழகம்: அடுத்தது ஆட்சி கலைப்புதான்!; காவிகள் திட்டம் தயார்

தமிழகம்: அடுத்தது ஆட்சி கலைப்புதான்!; காவிகள் திட்டம் தயார்

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், உள்கட்சி பூசல் உள்ளிட்ட பிரச்னைகளால் தமிழகத்தில் ஆளும் கட்சி ஸ்திரமற்ற நிலையில் இருப்பதை தொடர்ந்து, இந்த ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் வேலைகளில் காவி கோஷ்டி மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவை கைப்பற்றுவதில் 'பணிவு புகழ்' ஓ.பன்னீர்செல்வத்துக்கும், மன்னார்குடி கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட போட்டியால் அக்கட்சிக்குள் கடும் பூசல்கள் உருவாயின. ஒருகட்டத்தில், கட்சிக்கு சம்பந்தமே இல்லாத ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூட அதிமுகவுக்கு சொந்தம் கொண்டாடும் காமெடிகளும் அரங்கேறின. இப்படி நாளொரு பரபரப்பும், மணிக்கொரு 'பிரேக்கிங் நியூஸ்'களுமாக தமிழக அரசியல் களம் இருந்த நிலையில், ஊழல் வழக்கில் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். கிடைத்த 'கேப்'பில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரா