Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

10800 புள்ளிகளை நோக்கி நிப்டி! தொடரும் காளையின் ஆதிக்கம்!!

கடந்த வெள்ளியன்று
தேசிய பங்குச்சந்தை (நிப்டி)
10607.35 புள்ளிகளில்
முடிவடைந்துள்ள நிலையில்,
இன்று (ஜூலை 6) மேலும்
60 புள்ளிகள் வரை உயர்க்கூடும்
என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கொரோனா நோய்த் தொற்றுக்கு
தடுப்பு மருந்துகள்
கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான
செய்திகளும் முதலீட்டாளர்களிடம்
உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள
நிலையில், நடப்பு வாரத்தில்
10800 முதல் 11000 புள்ளிகள்
வரை நிப்டி இண்டெக்ஸ்
உயர வாய்ப்புள்ளதாக
பங்குத்தரகு நிறுவனங்கள்
கூறுகின்றன.

 

தேசிய பங்குச்சந்தையான
நிப்டி – 50, தொடர்ச்சியாக
மூன்றாவது லாபகரமான
வாரத்தை நிறைவு செய்திருந்தது.
ஜூலை 3ம் தேதியன்று
முடிவுற்ற மும்பை பங்குச்சந்தை
பீஎஸ்இ மற்றும் எஸ் அன்டு பி
சென்செக்ஸ் குறியீடு 2.4 சதவீதம்
வரை உயர்ந்து இருந்தது.

”பொருளாதார தரவுகளை விட,
சந்தைகளின் கள நிலவரங்களின்
யதார்த்தங்கள் பெரும்பாலும்
முதலீட்டாளர்களின் நம்பிக்கையை
நோக்கியே நகர்கின்றன.
இன்ட்ராடே வணிகத்தைப்
பொருத்தவரை, சந்தையில்
ஏற்ற இறக்கம் அதிகரித்து வருவதால்
முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்,” என்கிறார்
ஜியோஜித் நிதி சேவைகள்
ஆராய்ச்சி நிறுவனத்தின்
தலைவர் வினோத் நாயர்.

 

சந்தையில் இப்போதும்
நிலையற்றத் தன்மையே
நிலவுவதால், நிப்டியில்
இன்றைய (ஜூலை 6) வர்த்தகம்
10569 புள்ளிகள் முதல்
10531 புள்ளிகள் வரை இருக்கலாம்
என்கிறார்கள் நிபுணர்கள்.
ஒருவேளை, இன்றைக்கும்
ஏற்றத்தில் இருக்கும்பட்சத்தில்
10638 – 10669 என்ற வரை
உயர்வு இருக்கலாம் என்கிறது
மணிகன்ட்ரோல் பங்குத்தரகு
நிறுவனம்.

 

அதேநேரம்,
எல்கேபி செக்யூரிட்டீஸ்
நிறுவனத்தின் ரோஹித் சிங்கர்,
இன்று அல்லது நடப்பு வாரத்தில்
நிப்டி 10700 முதல் 10800 புள்ளிகளைக்
கடக்கலாம் என்கிறார். வர்த்தகம்
ஏற்றத்தில் இருக்கும்போது
முதலீட்டாளர்கள் லாபத்தை
புக்கிங் செய்வது நல்லது என்றும்
அவர் பரிந்துரைக்கிறார்.

மோதிலால் ஆஸ்வால்
பங்குத்தரகு நிறுவனமும்,
10800 புள்ளிகளை நோக்கி
நிப்டியின் வர்த்தகம் நகரக்கூடும்
என கணித்துள்ளது. ஒருவேளை,
இறங்குமுகமாக இருந்தால்
நிப்டி 10450 – 10333 புள்ளிகள் வரை
சரியக்கூடும் என்கிறார்
இந்நிறுவனத்தின் சந்தன் தபாரியா.

 

கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனமோ, நிப்டியின் ராஜநடை 11000 புள்ளிகளை நோக்கிச் செல்லவே அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறது. சரிவு காணும்பட்சத்தில் 10500 – 10470 புள்ளிகளாக இருக்கலாம். அந்தளவுக்கு சந்தையில் சரிவு இருக்கும்போது லாபகரமான பங்குகளில் தாராளமாக முதலீடு செய்யலாம் என்றும் அந்நிறுவனதின் சந்தை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் சவுகான் கூறுகிறார்.

 

கடந்த வாரத்தில் நிப்டி ஏற்றத்திற்கு பெரிதும் துணைபுரிந்த வங்கி பங்குகள் கடைசி நாளன்று (ஜூலை 3) 0.46 சதவீதம் வரை சரிந்து, 21852.40 புள்ளிகளில் முடிவடைந்தன. இன்று வங்கி பங்குகளின் ஆதரவுப் புள்ளிகள் 21703 – 21554 என்ற அளவில் இருக்கலாம் என கணித்துள்ளனர் சந்தை ஆய்வாளர்கள். அல்லது, வங்கி பங்குகள் ஏற்றம் பெற்றால் 22065 புள்ளிகள் முதல் 22279 புள்ளிகள் வரையிலும் கூட செல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

 

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், நடப்பு வாரத்திலும் நிப்டி மற்றும் மும்பை பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கமே தொடரும் என்கிறார்கள், பங்குச்சந்தை ஆய்வாளர்கள்.

 

இன்று காலாண்டு முடிவுகள் வெளியிடும் நிறுவனங்கள்:

 

என்பிசிசி (இண்டியா), சத்பவ் இன்ப்ராஸ்ட்ரக்சர் புராஜக்ட், பிசிஎல் இண்டஸ்ட்ரீஸ், பிஎம்டபுள்யூ இண்டஸ்ட்ரீஸ், போடல் கெமிக்கல்ஸ், டிசிடபுள்யூ, டைனமிக் இண்டஸ்ட்ரீஸ், ஐஎப்பி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ், ஐஎப்பி இண்டஸ்ட்ரீஸ், ஜேஎம்டி வென்ச்சர்ஸ், நைசா கார்ப்பரேஷன், வெல்கியூர் டிரக்ஸ் அன்டு பார்மாசூட்டிகல்ஸ் ஆகிய நிறுவனங்களின் ஜனவரி – மார்ச் காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகின்றன. இந்நிறுவனங்களின் வளர்ச்சியைப் பொருத்து இந்நிறுவனப் பங்குகளுக்கு வரவேற்பு கிடைக்கப் பெறலாம்.

 

கவனம் ஈர்க்கும் பங்குகள்:

 

காலாண்டு முடிவுகள்
அடிப்படையில் பின்வரும்
பங்குகளில் முதலீடு செய்ய
முதலீட்டாளர்கள் பெரும்
ஆர்வம் காட்டுகின்றனர்.

 

அதன்படி,
பாரத் டைனமிக்ஸ்,
ஐடிஐ, சின்ஜீன் இன்டர்நேஷனல்,
ஐடிபீஐ, சுஸ்லான் எனர்ஜி
ஆகிய பங்குகளில் முதலீடுகள்
தொடர்ந்து அதிகரித்து
வருகின்றன.

 

அதேநேரம்,
பிசி பவர் கன்ட்ரோல்ஸ்,
ஓமாக்ஸ் பங்குகள் கைவசம்
இருந்தால் உடனடியாக
அவற்றை விற்றுவிடலாம்
என்கிறார்கள் ஆலோசகர்கள்.

 

– ஷேர்கிங்