Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: share market

பங்குச்சந்தை: உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ்; புதிய உச்சம் தொட காத்திருக்கும் நிப்டி!

பங்குச்சந்தை: உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ்; புதிய உச்சம் தொட காத்திருக்கும் நிப்டி!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் ஓரளவு உயர்வுடன் முடிவடைந்துள்ளது. வாரத்தின் இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை (ஜன. 12), மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 847.28 (1.18%) புள்ளிகள் உயர்ந்து 72568 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குசந்தையான நிப்டி 247.35 புள்ளிகள் உயர்ந்து (1.14%) 21894 புள்ளிகளில் முடிவடைந்தது. வரும் வாரத்தில், நிப்டி 22000 புள்ளிகளை கடந்து வரலாற்று உச்சத்தை எட்டும் என சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கடைசி மூன்று அமர்வுகள் ஏற்றத்துடன் இருந்ததால் முதலீட்டாளர்கள் உற்சாக மனநிலையில் இருக்கிறார்கள். அதேநேரம், அடுத்தடுத்து வெளியாக உள்ள மூன்றாவது காலாண்டு முடிவுகளைப் பொறுத்து, சந்தையில் அதிகளவில் ஏற்ற, இறக்கங்களும் இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஜன. 8 - ஜன. 12 வரையிலான வாரத்தில், தேசிய பங்குச்சந்தையில் ஐடி துறை சார்ந்த பங
ஷேர் மார்க்கெட்: பொதுப்பங்கு வெளியீட்டில் களம் இறங்கிய ஸ்டார் ஹெல்த்!

ஷேர் மார்க்கெட்: பொதுப்பங்கு வெளியீட்டில் களம் இறங்கிய ஸ்டார் ஹெல்த்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
மருத்துவக் காப்பீட்டுத் துறையில் கணிசமான சந்தைப் பங்களிப்பை வைத்திருக்கும் ஸ்டார் ஹெல்த் அன்டு அலைடு இன்சூரன்ஸ் நிறுவனம், நவ. 30ம் தேதி பொதுப்பங்கு வெளியீட்டில் களமிறங்கியுள்ளது.   பங்குசந்தைகளில் ஒரு நிறுவனம் முதன்முதலில் பங்குகளை வெளியிட்டு, முதலீடுகளை திரட்டுவதைத்தான் பொதுப்பங்கு அதாவது, ஐபிஓ என்கிறார்கள். இதுபோன்ற பொதுப்பங்கு வெளியீட்டில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களுக்கு, குறைந்த விலையில் பங்குகள் கிடைப்பதுடன், பட்டியலிடப்படும் நாளன்று பெரும்பாலும் கணிசமான லாபமும் கிடைத்துவிடும். அதனால் முதலீட்டாளர்களிடையே எப்போதும் ஐபிஓக்களுக்கு வரவேற்பு இருக்கும்.   இந்நிலையில், ஸ்டார் ஹெல்த் அன்டு அலைடு இன்சூரன்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (நவ. 30) ஐபிஓவை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் பங்குச்சந்தை தரகரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா இந்நிறுவனத்தின் ப
சரிவிலிருந்து மீண்ட இந்திய பங்குச்சந்தை! நிப்டி 17503; சென்செக்ஸ் 58664 புள்ளிகளில் நிறைவு!!

சரிவிலிருந்து மீண்ட இந்திய பங்குச்சந்தை! நிப்டி 17503; சென்செக்ஸ் 58664 புள்ளிகளில் நிறைவு!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
கடந்த நான்கு நாள்களாக சரிவு கண்டிருந்த இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை (நவ. 23) ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன. ஐடி, உலோகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லாப நோக்கத்தில் பங்குகளை விற்க ஆரம்பித்தது உள்ளிட்ட காரணங்களால் கடந்த நான்கு நாள்களாக இந்தியப் பங்குச்சந்தைகளில் நிலையற்றத் தன்மை காணப்பட்டது. வாரத்தின் முதல் நாளான திங்களன்றும் (நவ. 22) இந்திய பங்குச்சந்தைகள் பெரும் வீழ்ச்சி கண்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமையும் லேசான சரிவுடன் தொடங்கியது. சிறிது நேரத்தில் சந்தைகள் மெதுவாக ஏற்றம் காணத் தொடங்கின. வர்த்தகத்தின் இறுதியில் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 198.44 புள்ளிகள் (0.34%) அதிகரித்து, 58664.33 புள்ளிகளில் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 86.80 புள்ளிகள் (0.50%) அதிகரித்து, 17503.30
சொமேட்டோ ஐபிஓ வெளியீடு!; பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம்!!

சொமேட்டோ ஐபிஓ வெளியீடு!; பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம்!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
சொமேட்டோ நிறுவன புதிய பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட கடும் போட்டியால் முதல் நாளிலேயே எதிர்பார்த்த இலக்கை விட கூடுதல் பங்குகளுக்கு ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. முன்னணி ஆன்லைன் உணவு வர்த்தக நிறுவனமான சொமேட்டோ, ஐபிஓ எனப்படும் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கியுள்ளது. இதன் பங்கு வெளியீடு புதன்கிழமை (ஜூலை 14) தொடங்கியது. இதன்மூலம் 9375 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கத் திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டில் கடந்த ஆறு மாதங்களில் வெளியான ஐபிஓக்களில் சொமேட்டோவின் பங்கு வெளியீடுதான் மிகப்பெரியதாக கருதப்படுகிறது. 71 கோடியே 92 லட்சத்து 33 ஆயிரத்து 522 பங்குகளை விற்க முடிவு செய்திருந்த நிலையில், முதல் நாளிலேயே 75 கோடியே 64 லட்சத்து 33 ஆயிரத்து 80 பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பித்து உள்ளனர். மொத்த பங்குகளில் இன்ஸ்டிடியூஷனல் அல்லாத முதலீ
ஐஆர்எப்சி ஐபிஓ நாளை வெளியீடு; 178 கோடி பங்குகள் மூலம் 4633 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க முடிவு!

ஐஆர்எப்சி ஐபிஓ நாளை வெளியீடு; 178 கோடி பங்குகள் மூலம் 4633 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க முடிவு!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
இந்திய ரயில்வே துறைக்குச் சொந்தமான ஐஆர்எப்சி (IRFC) நிறுவனத்தின் ஐபிஓ (IPO), நாளை (ஜன. 18, 2021) பங்குச்சந்தைகளில் வெளியிடப்படுகிறது. பொதுத்துறைக்குச் சொந்தமான, வங்கி அல்லாத நிதிச்சேவை நிறுவனம் ஐபிஓ வெளியிடுவதும், இதுதான் வரலாற்றில் முதன்முறை.   ஐஆர்எப்சி:   இந்திய ரயில்வே நிதி கழகம் எனப்படும் இண்டியன் ரயில்வே பைனான்சியல் கார்ப்பரேஷன் (ஐஆர்எப்சி), ரயில்வே துறையின் விரிவாக்கத்திற்குத் தேவையான மூலதனத்தை திரட்டிக் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.   ஐபிஓ வெளியீட்டின் மூலம் 4633 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. ஐபிஓவில் ஒரு பங்கின் விலை 25 - 26 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்ச விலையின் அடிப்படையில் பங்குகள் விற்பனை செய்யப்படும்.   178.2 கோடி பங்குகள்:   ஐஆர்எப்சி நிறுவனத்தின் 1
10800 புள்ளிகளை நோக்கி நிப்டி! தொடரும் காளையின் ஆதிக்கம்!!

10800 புள்ளிகளை நோக்கி நிப்டி! தொடரும் காளையின் ஆதிக்கம்!!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
கடந்த வெள்ளியன்று தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 10607.35 புள்ளிகளில் முடிவடைந்துள்ள நிலையில், இன்று (ஜூலை 6) மேலும் 60 புள்ளிகள் வரை உயர்க்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கொரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான செய்திகளும் முதலீட்டாளர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடப்பு வாரத்தில் 10800 முதல் 11000 புள்ளிகள் வரை நிப்டி இண்டெக்ஸ் உயர வாய்ப்புள்ளதாக பங்குத்தரகு நிறுவனங்கள் கூறுகின்றன.   தேசிய பங்குச்சந்தையான நிப்டி - 50, தொடர்ச்சியாக மூன்றாவது லாபகரமான வாரத்தை நிறைவு செய்திருந்தது. ஜூலை 3ம் தேதியன்று முடிவுற்ற மும்பை பங்குச்சந்தை பீஎஸ்இ மற்றும் எஸ் அன்டு பி சென்செக்ஸ் குறியீடு 2.4 சதவீதம் வரை உயர்ந்து இருந்தது. ''பொருளாதார தரவுகளை விட, சந்தைகளின் கள நிலவரங்களின் யதார்த்தங்கள் பெரும
பங்குச்சந்தை: துள்ளிய கரடியை வீழ்த்திய காளை! கடந்த வார கடைசியில் நடந்தது என்ன?

பங்குச்சந்தை: துள்ளிய கரடியை வீழ்த்திய காளை! கடந்த வார கடைசியில் நடந்தது என்ன?

முக்கிய செய்திகள், வர்த்தகம்
இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளில், முதல் இரண்டு மணி நேரத்திற்கு கரடி ஆட்டம் காட்டி வந்த நிலையில், இரண்டாவது சுற்றில் காளையின் ஆட்டம் தொடங்கியது. பங்குச்சந்தைகள் ஓரளவு சரிவிலிருந்து மீண்டதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.   கரடியின் ஆட்டம்!:   கடந்த வியாழனன்று (ஜூன் 11), மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 33538 புள்ளிகளுடன் முடிவடைந்தது. சந்தை ஆய்வாளர்கள் முன்பே எச்சரித்தது போலவே வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளியன்று (ஜூன் 12), ஆரம்பத்திலேயே சென்செக்ஸ் 32436 புள்ளிகளில்தான் துவங்கியது. அதாவது முந்தைய நாள் முடிவைக் காட்டிலும் இது 1102 புள்ளிகள் வீழ்ச்சி ஆகும்.   வர்த்தகம் தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் பெரிய முன்னேற்றம் இல்லாததால் முதலீட்டாளர்கள் உற்சாகம் இழந்தனர். எனினும், நீண்ட க