Sunday, October 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அரசு மருத்துவமனை: முதல்வர் ஆன மூவர்; ஐவருக்கு இடமாற்றம்!

 

தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை முதல்வர்கள்
ஐந்து பேரை திடீரென்று
இடமாறுதல் செய்தும்,
மூன்று மருத்துவர்களுக்கு
பதவி உயர்வு வழங்கியும்
சுகாதாரத்துறை செயலர்
ஜெ.ராதாகிருஷ்ணன்
உத்தரவிட்டுள்ளார்.

யார் யாருக்கு இடமாறுதல்?

 

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை முதல்வர் வனிதா,
மதுரை அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை முதல்வராக மாறுதல்
செய்யப்பட்டு உள்ளார். இதற்கு முன்
இந்த இடத்தில் பணியாற்றி வந்த
முதல்வர் மருதுபாண்டியன்
ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார்.

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை முதல்வர் அனிதா
ஓய்வு பெற்றதை அடுத்து,
அந்த இடமும் காலியாக இருந்தது.
இதையடுத்து, புதுக்கோட்டை
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
முதல்வராக பணியாற்றி வரும் சாரதா,
திருச்சி அரசு மருத்துவமனைக்கு
இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

 

பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம்,
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனைக்கு இடமாற்றம்
செய்யப்பட்டு உள்ளார்.

 

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை முதல்வர் வசந்தி பெரம்பலூருக்கும்,
கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை முதல்வர் பாலசுப்ரமணியன்
தூத்துக்குடிக்கும் இடமாறுதல்
செய்யப்பட்டு உள்ளனர்.

பதவி உயர்வு பெற்றவர் யார் யார்?

 

கோவை அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனையில் நோய்க்குறியியல் துறை
மருத்துவராக பணியாற்றி வரும் லலிதா,
முதல்வராக பதவி உயர்வு பெற்று,
கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனைக்கு மாறுதல்
செய்யப்பட்டு உள்ளார்.

 

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் வாணி,
முதல்வராக பதவி உயர்வு பெற்று,
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனைக்கு மாறுதல்
செய்யப்பட்டு உள்ளார். இதற்குமுன்
இங்கு பணியாற்றி வந்த
முதல்வர் நடராஜன் ஏற்கனவே
ஓய்வு பெற்றுவிட்டார்.

 

சென்னை எம்எம்சி அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை மயக்கவியல்
துறை மருத்துவர் சந்திரிகா முதல்வராக
பதவி உயர்வு பெற்று, சிவகங்கை
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு
மாறுதல் செய்யப்பட்டு உள்ளார்.

 

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை செயலர்
ஜெ.ராதாகிருஷ்ணன், இன்று (ஜனவரி 29, 2019)
வெளியிட்டுள்ள உத்தரவில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

– பேனாக்காரன்